Tuesday 25 September 2018

திருமண நாள் பார்க்க பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள்

தனது மகன் அல்லது மகளின் திருமணத்திற்கான நாள் பார்க்கும் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய  முக்கியமான பதினோரு விதிகளை வகுத்துள்ளனர். இந்த விதிகளின் படி திருமணத்தை நிச்சயத்தால், மணமக்கள், சகல சௌபாக்கியங்க ளோடு, குழந்தைப்பேறு பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

1. திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மல மாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
 2. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
 3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
 4. புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
5.ரிஷபம்,  மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான் துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
 9. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
 10. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
  11. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக் கூடாது.

இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்ட பின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்லநாள் பார்த்து விடு வீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.

பெண் லக்னம் ஆண் லக்னம் - ஒரே ராசியில் உள்ளது. சுபம்." பெண் லக்னம் ஆண் சூரியன் - மிகச்சிறப்பு..மிக உத்தமம்." பெண் லக்னம் ஆண் சந்திரன்-மோஷமில்லை." பெண் லக்னம் ஆண் செவ்வாய்-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் புதன்-மோஷமில்லை." பெண் லக்னம் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் லக்னம் ஆண் சுக்கிரன்-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் சனி-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் ராகு- இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் லக்னம் ஆண் கேது- இது பூர்வீக ஜென்ம பந்தம்."மிகச்சிறப்பு." பெண் சூரியன் ஆண் சந்திரன்-மிகச்சிறப்பு." பெண் சூரியன் ஆண் செவ்வாய்-தம்பதியருக்குள் மிகவும் கோபப்படுத்தும். உயிரணுக்குறைபாடுகளை ஏற்படுத்தும்." பெண் சூரியன் ஆண் புதன்-மோஷமில்லை." பெண் சூரியன் ஆண் குரு-நல்ல கௌரவம் ஏற்படும். நல்ல புத்திரம் ஏற்படும். மிகச்சிறப்பு. நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் சூரியன் ஆண் சுக்கிரன்-மோஷமில்லை." பெண் சூரியன் ஆண் சனி-கடுமையான புத்திரதோஷம் ஏஏற்படும். தாமத புத்திரம் உண்டு. உயிரணுக்களiன் வளர்ச்சியில் குறைபாடு. கருமுட்டை உருவாகாமல் இருப்பது இது போன்ற குழந்தை உற்பத்தி திறன்களiல் பாதிப்பு ஏற்படுவதைக் காட்டுகிறது. இருவருக்கும் இருந்தால் கடுமையான புத்திர தோஷமே." பெண் சூரியன் ஆண் ராகு-ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும். மாமனாரை மதிக்காத தன்மை ஏற்படும்." பெண் சூரியன் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்." ஒரே ராசியில் உள்ளது. சுபம்" பெண் சந்திரன் ஆண் செவ்வாய்-ஜாதகருக்கு கண்டிப்பும் ,காவலும் அதிகம்." பெண் சந்திரன் ஆண் புதன்-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையில்லாத நபாகளiன் தலையீட்டை குறைத்துக் கொள்ள வேண்டும், இல்லை எனில் குடும்பம் பிரிய ஆதுவை காரணமாகும்." பெண் சந்திரன் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். விரைவில் குழந்தை உண்டாகும். நல்ல பாதுகாப்பு கிடைக்கும். இது மிக அருமுயான பொருத்தம்." பெண் சந்திரன் ஆண் சுக்கிரன்-அதிகப்படியான ஆசைகள் உண்டாகும். பிறந்த வீட்டுப் பெண்ணுக்கும் புகுந்த வீட்டுப் பெண்ணுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரும்." பெண் சந்திரன் ஆண் சனி-கணவன்,மனைவிக்குள் கடுமையான மனநெருக்கடி ,மனச்சுமை ஏற்படும்.கடுமையான வேலைப்பளு உண்டாகும்." பெண் சந்திரன் ஆண் ராகு-ஜாதகருக்கு கடுமையான பயம்ஏற்பட்டு அதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு நெருக்கடியாக தன்னை உணாந்து மனஉளைச்சலுக்கும் ,மனநோயிற்கும் ஆளாவார்.இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் சந்திரன் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான பயம்,நெருக்கடி,சட்டசிக்கல் ஏற்பட்டு நெருக்கடி மனஉளைச்சலுக்கும் ,மனநோயுக்கும் ஆளாவார்.இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் செவ்வாய் ஆண் செவ்வாய் ஒரே ராசியில் உள்ளது. சுபம்- நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும்.சண்டை வந்தாலும் குறுகிய காலத்தில் சமாதனமாகிவிடுவா.இருவருக்குள் போக வசியம் உண்டு." பெண் செவ்வாய் ஆண் புதன்-இது கடுமையான செவ்வாய் தோஷம் ஆகும்.அறிவினால் பிரச்சனை உருவாகும்.புரிந்துகொள்ளுதலில் பிரச்சனை ஏற்படும்.பலா மோஷமான திருமண வாழ்க்கையை வாழ்கின்றனா" பெண் செவ்வாய் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.நல்ல சுகம் உண்டாகும்.இருகுடும்பத்தினருக்கும் இடையே சுமூக உறவு ஏற்படும்." பெண் செவ்வாய் ஆண் சுக்கிரன்-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.விரைவில் குழந்தை உண்டாகும்.நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.குடும்பத்தில் இரத்த சம்பந்தமான ஒருவா காதல் திருமணம் செய்திருப்பார்." பெண் செவ்வாய் ஆண் சனி-கணவன்,மனைவிக்குள் தொழில்தியான கடுமையான நெருக்கடி ,மனச்சுமை,சோம்பல் ஏற்படும்.இது கடுமையான செவ்வாய் தோஷம் ஆகும்." பெண் செவ்வாய் ஆண் ராகு-நெருக்கடி ஏற்பட்டு பிரிவினை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.உடலில் வியாதி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்." பெண் செவ்வாய் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான சகோதராகளால் பயம்,சகோதராகளால் நெருக்கடி,பூர்வீச்சொத்துக்களiல் சட்டசிக்கல் ஏற்பட்டு நெருக்கடிக்கும்" பெண் புதன் ஆண் புதன் ஒரே ராசியில் உள்ளது - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் குரு - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் சுக்கிரன் - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் சனி-மோஷமில்லை." பெண் புதன் ஆண் ராகு-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்." பெண் புதன் ஆண் கேது-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்." பெண் குரு ஆண் குரு ஒரே ராசியில் உள்ளது. - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் குரு ஆண் சுக்கிரன் - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.ஜாதகருக்கு நல்ல வசதி ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் குரு ஆண் சனி - ஜாதகருக்கு நல்ல வருமானம் ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் குரு ஆண் ராகு - ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்.ஏதேனும் குறையான குழந்தை பிக்க வாய்ப்புள்ளது." பெண் குரு ஆண் கேது - ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்." பெண் சுக்கிரன் ஆண் சுக்கிரன் ஒரே ராசியில் உள்ளது. - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் சுக்கிரன் ஆண் சனி-ஜாதகருக்கு நல்ல வருமானம் ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் சுக்கிரன் ஆண் ராகு-மனப்பிரிவினை வரும் . வாழ்வில் திருப்தி ஏற்படாது. நல்ல வாயாடி மனைவியே வரும்." பெண் சுக்கிரன் ஆண் கேது-மனப்பிரிவினை வரும் .வாழ்வில் திருப்தி ஏற்படாது.நல்ல வாயாடி மனைவியே வரும்.மனைவி மிக நுணுக்கமான அறிவைப் பெற்றிருப்பார். அதுவே பிரச்சனையாகும்." பெண் சனி ஆண் சனி ஒரே ராசியில் உள்ளது-மோஷமில்லை." பெண் சனி ஆண் ராகு-கணவன், மனைவிக்குள் தொழில்ரிதியான கடுமையான நெருக்கடி, சோம்பல் ஏற்படும்." பெண் சனி ஆண் கேது-கணவன், மனைவிக்குள் தொழில்தியான கடுமையான சட்ட நெருக்கடி, மனநோய், சோம்பல் ஏற்படும்." பெண் ராகு ஆண் ராகு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் ராகு ஆண் கேது-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்." "பெண் கேது ஆண் கேது-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்."

1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage)
2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage).
3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்
4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .
5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.
6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.
7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்
8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.
9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.
10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.
11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.
12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்
13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்
14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.
15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.
16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.
17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!
18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்
19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்
20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்
21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும
25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
28. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
29. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
30. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
31. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
32. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
33. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது - ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக் கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
34. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
35. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) - அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
36. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு தேடி வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள் நோரிடும்
37. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
38. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!.
39. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
40. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
41. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
42. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.
43. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
44. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
45. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment