Sunday, 30 September 2018

சாமுத்திரிகா லட்சணம்

சாமுத்திரிகா லட்சணம்,  ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந் தால் கொள்ளையோ… கொள்ளைதான்.

ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.


சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?


பெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள்.

அளவுக்கு அதிகமாக குட்டையான அல்லது மிகவும் உயரமாக அல்லது உடம்பு தடித்து இருக்குமானால் அப்பெண்ணை எளிதாக நம்பக்கூடது. மேலும் இத்தகையவள் வறுமையில் வாடுவாள்.

உடல் இளைத்துள்ளவள் பரத்தையாக இருப்பாள். உறுதியான தேக அமைப்பைக் கொண்டு இருந்தாலும், கிழத்தன்மையை இளம்வயதிலேயே கொண்டிருந்தாலும், அவள் கேட்ட எண்ணம் கொண்டவளாக இருப்பாள்.

வலது புறத்து அங்கம் ஏதாவது இடதுபுறத்து அங்கத்தைக் காட்டிலும் சிறிதாக இருப்பின் அவள் சகல வித போகங்களையும் வசதி வாய்ப்புகளையும் பெறுவாள். அப்படி இல்லாமல் பெரிதாக இருக்குமானால் அவள் தரித்திரம் பிடித்தவளே வாழ்வாள்.

ஒரு பெண்ணின் உடம்பில் வேம்பின் வாடை அல்லது கற்றாழை வாடை, அல்லது மாமிச வாடை வீசுமானால் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல.

ஒரு பெண்ணுக்கு பாதங்கள் செந்தாமரை மலரைப் போன்று நிறத்துடன் இருந்து, அவள் நடக்கும் பொழுது பாதம் பூமியில் படாமல் இருந்தால் அவள் வேசியாக வாழ்வாள்.

ஒரு நூல் கயிற்றை எடுத்து, பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீள அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்துப் பார்க்கும்போது, சமமாய் இருக்குமானால் அப் பெண்ணாகப்பட்டவள், அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள். இவ்வளவில் சற்றுக் குறைந்திருக்குமாயின், அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் பாம்பு விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள்.

கருமையான மரு ஒன்று பெண்ணினுடைய கண்ணில் இருந்தால் அவள் சகல வித ஐஸ்வர்யங்களையும் பெற்று லட்சுமி கடாசத்துடன் வாழ்வாள்.

முன் குறைப்பாடா மருவனது, முன் குறைப்பட்ட அங்கங்களில் வலப்புறத்தில் இருக்குமானால் அவளுக்கு தீராத துன்பங்கள் உண்டாகி, எந்நாளும் வருந்தி நலிந்து துன்புறுவால்.

ஒரு பெண் பேசும்பொழுது அவளுடைய மூக்கு திரண்டு சுளித்திடுமனால், அப்பெண் சுப சகுனத்திற்கு ஏற்புடையவள் ஆவாள். அவளைத் தரிசித்துச் சென்று செய்திடும் காரியங்கள் யாவும் ஜெயமடையும் என்றாலும், அவளைக் கூடுவது பாவமாகும்.

ஒரு பெண்ணுடைய இடுப்புப் பகுதிக்கு இடப்புறமாக அல்லது அந்தரங்கப் பகுதிகளில் அல்லது தொடையை ஒட்டி மருக்கள் அமைந்து இருக்குமானால், ஏல்வாஸ் செழிப்பு குறைந்து, கணவனை இழந்து, இருந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்று, அலைந்து திரிந்து துயரம் கொள்வாள்.

ஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் ஐந்து வரிகள் அதாவது ரேகைகள் இருந்தால், அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பாள்.

மீனைப் போன்ற தோற்றமுடைய கண்களைப் பெற்றுள்ளவள் மன்மதனுக்கு நிகரான அழகனைக் கணவனாக அடைந்து மகிழ்வோடு வாழ்வாள். இவளுடைய கணவன் அகம்பாவம் கொண்டவனாய் காணப்படுவான்.
அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள். அந்த முகத்திற்கு அழகு சேர்ப்பவை கண்கள். கண்களின் அமைப்பு, புருவங்களை வைத்து ஒரு பெண்ணின் அமைப்பை கூறுகிறது சாமுத்திரிகா சாஸ்திரம். ஒரு சில பெண்களுக்கு உருண்டையாக கண்கள் இருக்கும். ஒரு சிலருக்கு கண்கள் கவர்ச்சியை தரும். எந்த கண்களை உடைய பெண்கள் எப்படி இருப்பார்கள் என பார்க்கலாம்.

இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.

 பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும்.
 உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள்.

 உருண்டை விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.
முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள். உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள்.

உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள்.
விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சாமுத்திரிகா சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.
கால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும்.

பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள்.

மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாகவும்) இருப்பார்கள்.

சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

தொடை: பெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

இடை: இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.

மார்பகங்கள்: பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.

கைவிரல்: பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர வேண்டும்.

கழுத்து: பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.

கண்கள்: பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.

உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.

மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.

உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.

சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள்.

மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.

விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.


வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.

முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.

உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.

கூந்தல்: பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.

கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.

அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.

ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.

கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.

வாசம்: பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.

மூக்கு: மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு.

எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.

ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.

மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.

ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.

வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

நெற்றி: சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

சாமுத்திரிகா லட்சணம் பெண்ணுக்கு மட்டுமில்லை… ஆணுக்கும் உண்டு.



தலை:ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம். பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.

நெற்றி:அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வம். மிகச் சிறுத்திருப்பின் மூடன். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடம்.

கண்: ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.

மூக்கு: உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

வாய்:அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..

உதடு:உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.

கழுத்து:ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமை.

தோள்:தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

நாக்கு: நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரம்.

பல்:மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரம்..

காது:காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

கைகள்: நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

மணிக்கட்டு:மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரம்.

விரல்கள்:கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுள். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

மார்பு: ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுள். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதிகம் இருக்கும்..

வயிறு: பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

முதுகு: சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரம்.

கால்கள்:கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

கால்பாதம்: கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்..



No comments:

Post a Comment