Saturday 22 September 2018

தமிழ் எண்கள் வடிவங்கள்

தமிழில் ஒன்று,இரண்டு,மூன்று...என்று எண்ணுகிறோம்.பத்து பத்தாக எண்ணும் போது எண்பதுக்கு அடுத்து ஒன்பது என்று வராமல் ஏன் தொண்ணூறு என்று வருகிறது?நூறு நூறாக எண்ணும் போது எண்ணூறுக்கு அடுத்து தொண்ணூறு வராமல் தொள்ளாயிரம் என்று ஏன் வருகிறது?ஆயிரம் ஆயிரமாக எண்ணும் போது எட்டாயிரத்துக்கு அடுத்து தொள்ளாயிரம் என்று வராமல் ஒன்பதாயிரம் என்று ஏன் வருகிறது.பத்தாயிரம் பத்தாயிரமாக எண்ணும் போது எண்பதாயிரம் அடுத்து ஒன்பதாயிரம் என்று வராமல் ஏன் தொண்ணூறாயிரம் என்று வருகிறது.ஒன்று ஒன்றாக எண்ணும் போது எட்டுக்கு அடுத்து வர வேண்டிய உண்மையான எண் எது?


பண்டைய தமிழ் எண் வடிவங்கள்
தமிழ் எண்கள்
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ =10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
தமிழ் எண்களின் பெயர் விளக்கம்
ஒன்று
ஒல் - ஒன் - ஒன்று - ஒல்லுதல் -பொருந்துதல்
ஒன்று சேர்தல் என்பதால் "ஒன்று" என்றானது.
ஒல் ஓர் ஒரு (பெயரெச்சம்)
இரண்டு
ஈர் - இர் - இரது - இரண்டு - ஈர்தல் - ஒன்றை இரண்டாக அறுத்தல்
ஈர், இர், இரு (பெயரெச்சம்)
மூன்று
முப்பட்டையான மூக்கின் பெயரினின்று தோன்றியிருக்கலாம்.
மூசு - மூகு மூ (மூது) மூறு - மூன்று
மூ (பெயரெச்சம்)
நான்கு
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்கிற நால்வகை நிலத்தொகைப் பிறப்பு, ஞாலம் நானிலம் எனப்படுதல் காண்க.
நால் - நால்கு - நான்கு
நால் - நான்கு
நால் (பெயரெச்சம்)
ஐந்து
கை - ஐ (ஐது) - ஐந்து - அஞ்சு
கை = ஐந்து, கையில் ஐந்து விரல்களிருப்பதால் ஐந்தென்னும் எண்ணைக் குறித்தது. வறட்டி விற்கும் பெண்டிர் ஒவ்வொரு ஐந்தையும் ஒவ்வொரு கை என்பர், கை எனும் சொல்லின் மெய் நீக்கமே ஐ.
கை - ஐ (பெயரெச்சம்)
ஆறு:
ஆறு = வழி, நெறி மதம், பண்டைத் தமிழகத்தில் ஐந்திணைச் சிறு தெய்வ வணக்கமும், கடவுள் வழிபாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் இருந்ததினால் ஆறென்னும் மதப் பெயர் ஆறென்னும் எண்ணைக் குறிக்கலாயிற்று.
ஆறு - அறு (பெயரெச்சம்)
ஏழு
எழு - எழுவு, எழுவுதல் இசைக் கருவியினின்று ஒலியெழச் செய்தல், இன்னிசை ஏழாதலால் அது எழுதலைக் குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும் எண்ணுப் பெயர் தோன்றிற்று.
எழு ஏழ் ஏழு
எழு (பெயரெச்சம்)
எட்டு
தமிழில் எல்லை என்னுஞ் சொல் இடவரம்பையும் திசையையும் குறிக்கும். எல்லை என்பதற்கு ஒரு பொருள் மறுசொல் எண் என்பதாம். நேர்த்திசை நான்கும், கோணத்திசை நான்குமாகத் திசை எட்டாதலின் திசையைக் குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டு எனும் எண்ணுப் பெயரைத் தோற்றுவித்தது.
எண் - எட்டு
எண் (பெயரெச்சம்)
தொண்டு(ஒன்பது)
தொள் - தொண்டு = தொளை.
தொண்டு - தொண்டி = தொளை.
மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருந்தால் தொளைப் பெயர் அதன் தொகைப் பெயராயிற்று. தொண்டு வழக்கற அஃதிருந்த இடத்திற்குத் தொண்பது (90) தொன்பதாகி ஒன்பதாகியது.
பத்து
பல் = பல
பல் - பது - பத்து - பஃது
நூறு
நுறு - நூறு = பொடி,
நுறு - நுறுங்கு - நொறுங்கு
நூறு (பொடி) எண்ண முடியாதிருப்பதால் அதன் முடியாதிருப்பதால் அதன் முதற் பெருந்தொகையைக் குறித்தது.
நூறு -நீறு
ஆயிரம்
அயிர்- நுண் மணல்
அயிர் அயிரம் ஆயிரம்
ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமாய் இருப்பதால் மணற்பெயரும் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று.
இலக்கம்
இலக்கு = குறி
இலக்கு - இலக்கம் = குறி
எண்குறி, எண், பேரெண்.
கோடி
குடி - குடுமி = உச்சி, தலையுச்சி, ஆடவர் தலை மயிர்க்கற்றை, பறவைச்சூட்டு, மகுடம், மாடவுச்சி, மலையுச்சி, நுனி, குடு - கொடு,
கொடுமுடி - மலையுச்சி,
கொடு - கோடி = நுனிமுனை, கடைசி, எல்லை, முடிமாலை
கோடம் = எல்லை, கடைக் கோடி எனும் வழக்கை நோக்குக. தெருக்கோடி, விற்கோடி என்பனவும் முனையைக் குறித்தல் காண்க.
கோடகம் - முடிவகை
கோடி கடைசி எண்ணாதலால் அப்பெயர் கொண்டது.
இவ்வாறாக தமிழர்களை நோக்கும்பொழுது தமிழ் எழுத்துகளைக்கொண்டுதான் எண்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment