Sunday, 23 September 2018

பல்வலி இயற்கை வழியில் சரிசெய்ய சில டிப்ஸ்...

ஈறுகள் தான் பற்களுக்கு பாதுகாப்பு அளித்து, எலும்போடு உங்கள் பற்கள் தாங்கி நிற்கும் ஆதரவையும் அளிக்கிறது. உங்கள் ஈறுகள் ஆரோக்கியமாக இல்லையென்றால், நீங்கள் பற்களை இழக்கும் அபாயம் ஏற்படலாம். இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஈறு வியாதிகள் என்பது உங்கள் ஈறுகளை பாதிப்பதோடு அல்லாமல், உங்கள் பற்களை தாங்கும் பிற அமைப்புகளையும் சேர்த்து பாதிக்கும். ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் பொதுவாக நீங்கள் பல் துளைக்காத பகுதி அல்லது சுத்தமாக இல்லாத பகுதியில் இருந்து தான் ஆரம்பிக்கும். உங்கள் ஈறுகளில் பாக்டீரியா உருவாகி, அது வலியையும் அழற்சியையும் ஏற்படுத்தும். அழற்சி அல்லது ஈறுகளில் வீக்கம் ஏற்படுவது தான் ஈறுகள் சம்பந்தமான நோய்களுக்கான முதல் எச்சரிக்கை ஆகும். மற்ற அறிகுறிகளாக இவைகளை சொல்லலாம் - ஈறு சிவத்தல், பல் துலக்கும் போது இரத்த கசிவு, ஈறுகளின் கோடு விலகுதல், தொடர்ச்சியான சுவாச துர்நாற்றம், வாய் புண்கள்.


சொத்தைப் பற்களை இயற்கை வழியில் சரிசெய்ய சில டிப்ஸ்... ஆரோக்கியமான ஈறுகளை பராமரித்து கொள்வது வாய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உடல் நலத்திற்கும் ஆரோக்கியமானது. ஈறு தொற்றுக்களை இயற்கையாக குணப்படுத்துவது எப்படி? ஈறு தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க சில இயற்கையான வழிகள் உள்ளது. ஆம், பற்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களை தடுப்பதற்கான சில வீட்டு சிகிச்சைகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.


பேக்கிங் சோடா ஈறு தொற்றுக்களை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஈறுகளில் ஏற்பட்டுள்ள தொற்றுக்கு இது நேரடியாக நிவாரணம் அளிக்காவிட்டாலும், வாயில் உள்ள அமிலத்தை இது சமன் செய்யும். இதனால் பற்கள் சொத்தையாகும் மற்றும் ஈறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் குறையும். வெதுவெதுப்பான நீர் ஒரு கப்பை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள். பற்களை துலக்குவதற்கு முன், இந்த கலவையில் உங்கள் டூத் பிரஷை முக்கி விட்டு, அதன் பின் அதில் பேஸ்ட்டை தடவுங்கள்.

அறிகுறிகள்

இந்த நோயில் பல கட்டங்கள் இருக்கின்றன. முதலாவது, ஈறுகள் வீங்கும். இதற்கு ஜின்ஜிவிட்டிஸ் என்று பெயர். ஈறுகளிலிருந்து இரத்தம் கசிவது இதற்கு ஒரு அறிகுறி. இது பல் தேய்க்கும்போது, ஃப்ளாஸிங் செய்யும்போது (flossing), டாக்டர் ஈறுகளை சோதிக்கும்போது, அல்லது காரணமே இல்லாமல்கூட ஏற்படலாம்.


இதைக் கவனிக்காவிட்டால் பிரியோடான்டிஸ் (periodontitis) என்ற அடுத்த கட்ட ஈறு நோய் உண்டாகும். இந்தக் கட்டத்தில், பல்லைத் தாங்கிப் பிடித்திருக்கும் எலும்புகளும் ஈறு திசுக்களும் (tissues) அழிய ஆரம்பிக்கும். பெரும்பாலும், இந்த நோய் முற்றிப்போகும்வரை அதற்கான அறிகுறிகள் தெரியாது. பல்லுக்கும் ஈறுக்கும் இடையே இடைவெளி, பற்கள் ஆடுவது, பற்களுக்கு இடையே இடைவெளி, வாய் துர்நாற்றம், ஈறுகள் குறைந்து பற்கள் மட்டும் பெரிதாக தோன்றுவது, ஈறுகளில் இரத்தம் கசிவது போன்றவை பிரியோடான்டிசின் அறிகுறிகள்.


காரணங்கள், விளைவுகள்

பல் ஈறு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று பிளேக் (plaque). பற்கள்மீது பாக்டீரியா படர்ந்து இருப்பதுதான் பிளேக். இந்த பாக்டீரியாவை நீக்கவில்லை என்றால் ஈறுகள் வீங்கிவிடும். இதைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் பற்களிலிருந்து ஈறுகள் விலகி, ஈறுகள் ஓரம் பாக்டீரியா  வளர ஆரம்பித்துவிடும். பிறகு, ஈறுகள் வீங்க வீங்க எலும்பு திசுக்களும் ஈறு திசுக்களும் அழிய ஆரம்பித்துவிடும். பிளேக் அதிகமாகப் படியப் படிய, அது கடினமாகிவிடுகிறது. இதற்கு பெயர்தான் கால்குலஸ் (calculus) அல்லது டார்டர் (tartar). பிளேக்கை போல இதை எளிதில் நீக்க முடியாது. அதனால், இது ஈறுகளை மிக மோசமாகப் பாதித்துவிடுகிறது.


சரியாகப் பராமரிக்கப்படாத பற்கள், எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள், வைரஸ் கிருமி தொற்று, மன அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய், அளவுக்கு மிஞ்சிய குடி, புகையிலை, பிரசவ காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை பல் ஈறு நோய் வருவதற்கு மற்ற காரணங்களாக இருக்கின்றன.

ஈறு நோய் பல விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனால் பல் வலி ஏற்படலாம், பல்லை பிடுங்க வேண்டியிருக்கலாம், உணவை மென்று சாப்பிடுவதும் பேசுவதும் கஷ்டமாகிவிடலாம். முக அழகும் பாதிக்கப்படலாம். பல் நோய் பல நோய்களுக்குக் காரணமாவதால், பற்களை நன்றாகப் பராமரியுங்கள்.

பல் ஈறு நோய் இருப்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இங்கு சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு இருந்தால், நல்ல பல் மருத்துவரை உடனே பாருங்கள். பல் ஈறு நோயைக் குணப்படுத்த முடியுமா? ஆரம்ப கட்டமாக இருந்தால், அதைக் குணப்படுத்துவது சுலபம். பிரியோடான்டிஸ் நோயாக இருந்தால் அது இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பல் மருத்துவர்கள், பிளேக்கையும் டார்டரையும் பற்களிலிருந்து நீக்குவார்கள்.

சில பொதுவான குறிப்புகள்:
1.இரண்டு துளி கிராம்புத் தைலத்தை பஞ்சில் தோய்த்து பல்வலி உள்ளஇடத்தில் வைத்துக் கொள்ள பல்வலி கட்டுப்படும்

2.3 -5துளி சுக்கு தைலத்தை பஞ்சில் தோய்த்து பிழிந்துவிட்டு, பல்வலிஉள்ள இடத்தில் வைக்க பல்வலி தீரும்
3.கற்பூரவல்லி இலை,துளசி இலை சேர்த்து மென்று,வலி உள்ள  இடத்தில்வைத்தழுத்திக் கொள்ள பல்வலி  நீங்கும்
4. 200மிலி வெந்நீரில் 10துளி சுக்கு த் தைலமிட்டு வாய்கொப்புளிக்க பல்வலிகட்டுப்படும்
5.கண்டங்கத்திரி பழத்தைட்டு,பொடியாக்கி,ஆடாதொடைஇலையில்வைத்து சுருட்டு போல் புகைக்க பல்வலி,பல்கூச்சம்  தீரும்
6.   எருக்கம்பாலைத் தொட்டு பல்சொத்தை, பல்நோய் உள்ள இடத்தில் பூச குணமாகும்
7.  நுனா முதிர்ந்த காய்களை உப்புநீரில் ஊற வைத்துலர்த்தி,சுட்டுகரியாக்கி பல்துலக்கிவர பல்சொத்தை குணமாகும்
8. அரத்தை தூளை சம அளவு பல்பொடியுடன் கலந்து, பல் துலக்கிவரபல்வலி, ஈறுவீக்கம் குணமாகும்
9.கடுக்காய்தூளுடன் சம அளவு உப்புத்தூள் கலந்து பல்துலக்கிவர பல்வலி,ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்
10.இலவங்கபொடியை கொண்டு பல்வலி உள்ள இடத்தில் துலக்கிவரபல்வலி, ஈறுவீக்கம் குணமாகும்
11. குடசப்பாலைபட்டை குடிநீர் செய்து வாய்கொப்புளிக்க பல்வலி தீரும்
12.கொத்தமல்லி இலை அல்லது விதைகளை மென்று,விதைக்குடிநீர்  செய்துவாய் கொப்புளித்துவர  பல்வலி, ஈறுவீக்கம்,வாய்துர்நாற்றம்  நீங்கும்
13. சாதிக்காய்எண்ணை 2துளி பல்வலி உள்ள இடத்தில் பூசகுணமாகும்
14. நந்தியாவட்டை வேர் சிறுதுண்டு மென்று துப்ப பல்வலி குணமாகும்
15.தான்றிக்காய் தூள் கொண்டு பல்துலக்கிவர பல்வலி, பல்சொத்தைஅணுகா
16.வேப்பம்பட்டையை குடிநீர்செய்து இளம்சூட்டில் வாய்கொப்புளிக்கபல்வலி தீரும்
17.அரிவாள்மனைபூண்டுபூ 20, 2ல்1ன்றாய்க் காய்ச்சி வாய் கொப்புளித்து வர ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல் கட்டுப்படும்
18.துளசிஇலையை கொதிக்க வைத்த நீரில் உப்புகலந்துவாய்கொப்புளிக்க பல்சொத்தை குணமாகும்.ஈறு பலப்படும்
19.நாயுருவி வேர்சூரணம் அல்லது வேர் கொண்டு பல் துலக்கிவர பற்கள்பலமடையும்
20.கண்டங்கத்திரி பழத்தை பொடித்து, அனலிலிட்டு,புகையை வாயில்படும்படி பிடிக்க  சொத்தைப்பல் குணமாகும்.பல்வலி  குறையும்
21.நஞ்சறுப்பான் இலைச்சூரணம் கொண்டு பல்துலக்க பற்கறைநீங்கும். பல் சுத்தமாகும்
22.1கரண்டி துளசிசாற்றில் சிறிது கற்பூரம், கிராம்புத்தூள் கலந்துசொத்தைப் பல்லின் மேல்தடவ வலி குறையும். ஈறு வீக்கம்  நீங்கும்
23. மாதுளம்பழதோடுடன் உப்பு கலந்து பல்துலக்க பல்வலி தீரும்
24.சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம,வாய்ப்புண்குணமாகும்
25.கொய்யா இலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்புண் குணமாகும்
26.தான்றிக்காயை சுட்டு மேல்தோலை பொடித்து, சமன் சர்க்கரைசேர்த்து, தினமிருவேளை சாப்பிட்டுவர பல்,ஈறு  சம்பந்தப்பட்ட நோய்கள்தீரும்
27.தான்றிதோட்டை கருக்கி பொடித்து,குடிநீர் செய்து, வாய்கொப்புளித்துவர பல்வீக்கம், பல்வலி தீரும்
28.சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து சொத்தைப்பல்லில் வைக்க தீவிரமானவலியை கட்டுப்படுத்தும்
29. பிரம்மதண்டு விதையை தீயில் புகைத்து வாயில்படச்செய்யசொத்தைப்பல் குணமாகும்.புழு செத்து விழும்
30. ஆலம்பாலை காலைமாலை தடவிவர பல்ஆட்டம் நிற்கும்
31. ஆலம்விழுதைக் கொண்டு பல்துலக்கிவர பற்கள் பலப்படும்
32. கருவேல்பட்டைக்குடிநீர் கொண்டு வாய் கொப்புளிக்க வாய்புண், பல்ஈறுஅழுகல், பல்ஆட்டம் தீரும்.
33. கருவேல்பட்டை,வாதுமைதோடு சமன் கருக்கிப் பொடித்து ,பல்துலக்கிவரபல் கூச்சம், ஈறுபுண்,பல்வலி,பல்ஆட்டம்  தீரும்
34. நுணாகாய், உப்பு சமன் சேர்த்து அடைதட்டி,புடமிட்டு,பற்பொடியாக்கிபயன்படுத்த  பற்கள்  பலமடையும்
35. புளியங்கொட்டைதோல்,கருவேலம்பட்டைதூள் சமன் கலந்துஉப்புத்தூளுடன் பல்துலக்கி வர பல்கூச்சம், பல்ஆட்டம்,சீழ்,இரத்தம்வடிதல்,ஈறுவீக்கம்  தீரும்
36. மகிழங்காயை மென்று வாயிலடக்கி வைத்திருந்து துப்ப பல்ஆட்டம்நீங்கி உறுதிப்படும்
37. கருவேலம்பற்பொடியில் பல்துலக்கி, மகிழ இலைக் கியாழத்தில் வாய்கொப்புளிக்க பல்நோயனைத்தும் தீரும்
38. மாசிக்காய் தூளை நீரிலிட்டுக் காய்ச்சி வாய்கொப்புளிக்க பல்நோய்தீர்ந்து ஈறு பலப்படும்
39. ஆலம்பாலை காலைமாலை தடவிவர வாய்ரணம், உதடு, நாக்குவெடிப்பு,கைகால் வெடிப்பு, பல்ஆட்டம் தீரும். 
40. புழுங்கலரிசியை 3 முறை கோவையிலை சாற்றில் ஊறவைத்துலர்த்தி,ந.எண்ணையில் பிசைந்து,வாயில்ஒதுக்கிக் கொள்ள பல்லீறில் சீழ்,இரத்தம் காணல் நீங்கும்                                                      
41. அன்னாசி,ஆரஞ்சு,திராட்சைபழங்கள் அதிகம் சாப்பிட்டுவர ஈறில் இரத்தம் காணல் நிற்கும்.                                                                     
42. காலை வெறும் வயிற்றில் 3-4எலுமிச்சம்பழத்தை உறிஞ்சிச் சாப்பிட ஈறில் இரத்தம் காணல் தீரும்.                                                   
43. எலுமிச்சைசாறுடன் நீர்கலந்து வாய் கொப்புளிக்க ஈறில் இரத்தம் காணல் நிற்கும்.
44. 1 பங்குஎலுமிச்சைசாறுடன் 2பங்கு பன்னீர் கலந்து காலைமாலை வாய் கொப்புளிக்க வாய்நாற்றம் நீங்கும்.                                               
45. 2 எலுமிச்சம்பழத்தை நறுக்கி காலை வெறும்வயிற்றில் உறிஞ்சிச் சாப்பிட பயோரியா வராது.                                                                            
46. இளம் அருகம்புல்லை மென்று,சாற்றை பல்வலியுள்ள பக்கம் ஒதுக்கிவைக்க வலி நிற்கும்.தொடர்ந்து செய்ய பல் உறுதியாகும். 
47. தைவேளைவேரையும்,அருகம்புல்லையும் நீர் விட்டிடித்து,துணியில் முடிந்து பல்வலி இடப்புறம் இருந்தால் வலது காதிலும்,வலப்புறமிருந்தால் இடக் காதிலும் 3துளிவிட உடனே குணமாகும்.                                                             48. கொய்யா கொழுந்தை மென்று வாயிலடக்க பல்வலி நிற்கும்.    
49. கொழுஞ்சிவேரை சாறுபிழிந்து பஞ்சில் தோய்த்து பூச்சி விழுந்த பல்லில் வைக்க வலி நிற்கும்.                                                             
50. வாய்விளங்கத்தை துணியில் முடிந்து கொதிக்க வைத்து, வலியுள்ள பல்லில் வைத்துப்படுக்க பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும்.  2-3 நாள் செய்ய பூச்சிகள் நீங்கி விடும்.
51. பெருங்காயத்தை எலுமிச்சைச் சாற்றிலுரைத்து பஞ்சில் தோய்த்து வைக்க பல்வலி குணமாகும்.                                                                                  
52. ஒரு துண்டு சுக்கு எடுத்து வாயில் வைத்திருக்க பல்வலி போகும்
53. சுக்கு, காசுக்கட்டி,கடுக்காய், இந்துப்பு சம அளவு இடித்து பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, அனைத்தும் நீங்கும்.
54. புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு வற்ற காய்ச்சி ,கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி கொழகொழ வென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கி, தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.
55. கோவைப்பழம் சாப்பிட பல் வலி நீங்கும்.
56. தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
57. மாதுளம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.
58. சாம்பல் கொண்டு பற்களைத் துலக்க, பற்கள் வெண்மையாக இருப்பதோடு, பற்களை அழித்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, வாயில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி, பற்களுக்கு நல்ல பாதுகாப்புத் தரும்
59.  மல்லி விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருக்க பல்கூச்சம் மறையும்.
60.  கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
61. புதினா விதையை வாயில் போட்டு மெல்ல பல் கூச்சம் மறையும்.
62. புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்க பல்கூச்சம் குணமாகும்.
63.  துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வர பல்வலி குறையும்.
64. 2 தேகரண்டி தேங்காய் எண்ணெய், 2 தேகரண்டி நல்லெண்ணெய், 1 துளி கிராம்பு எண்ணெய், 1 துளி டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், வாயில் ஊற்றி 20 நிமிடம் கொப்பளிக்க, பற்கள், ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
65.தைவேளை அருகம்புல் இரண்டையும் தட்டி சாறு எடுத்து பல் வலிக்கும் எதிர் காதில் மூன்று துளி பிழிய முகவாதம், தந்தரோகம் ஒரு தலைவலி குணமாகும்.
66.வெள்ளருகு மூலிகையின் இலைகளை மையாக அரைத்து அதன் நடுவில் ஒரு சிறிய உப்புகல்லை வைத்து பல் வலி உள்ள பல்லில் வைத்து விட வலி நீங்கும்.


பற்களை நன்கு பராமரிப்பதற்கு நல்ல பல் மருத்துவமனைகள் அருகில் இல்லையென்றால், கவலைப்படாதீர்கள். வரும்முன் காப்பதே சிறந்தது. அதை நீங்களே செய்யலாம்; பற்களை ஒழுங்காக, சரியாக பராமரித்தால் முத்து பற்களுக்கு நீங்கள் சொந்தக்காரர்கள் ஆகலாம்! ▪



No comments:

Post a Comment