நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது நம் வாயிலிருந்து வரும் நாற்றம்கூடக் காரணமாக இருக்கலாம்.
தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கத்திய உணவு முறைகளாலும் அவசரகதி வாழ்க்கை முறையாலும் ‘வாய் நாற்றம்’ (Halitosis) என்பது பலரையும் வாட்டும் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. இது ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவைப் பொறுத்து வாய் துர்நாற்றம் உண்டாகலாம். அல்லது மருந்து பயன்பாடு , ஈறு பிரச்சனை, புகை பிடித்தல் அல்லது வறண்ட வாய் அல்லது உதடு போன்றவையும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
வாய் துர்நாற்றத்துக்கான காரணங்கள்
கீழ்கண்ட காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்படக் கூடும்
•வாயை சுத்தமாக வைத்து கொள்ளாமை மற்றும் செரிமானக் கோளாறு
•வெங்காயம், பூண்டு மற்றும் மசாலா பொருட்களை உட்கொள்ளுதல்
•தொடர்ச்சியாக வாய் உலர்ந்து போதல்
•வாயில் ஏற்படும் கிருமி தொற்று
•ஈறுகளில் தோன்றும் நோய்
•மூக்கு, சைனஸ் அல்லது தொண்டையில் ஏற்படும் நோய் தொற்று
•சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்ளுதல்
•புகையிலை பொருட்களை பயன்படுத்துதல்
•பிற வளர்சிதை மாற்றங்கள், GERD, அரிதாக சில குறிப்பிட்ட வகை கேன்சர்கள்
•தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
•உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.
அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.
தினமும் தூங்கி எழுந்த பிறகோ அல்லது ஒவ்வொரு முறையும் உணவு உண்ட அடுத்த 1 மணி நேரத்திற்கு பிறகு வாயில் துர்நாற்றம் ஏற்பட நேரும். அதை தடுக்க, இதை செய்து பாருங்கள்:
எலுமிச்சம், ஆரஞ்சு, புதினா இவைகளில் ஏதேனும் ஒன்று எடுத்து சாப்பிட்டு வாய் கொப்புளிக்க துர்நாற்றம் போய்விடும்.
உப்பு தண்ணீரில் வாய் கொப்புளிக்க துர்நாற்றம் போய்விடும். தேங்காய் எண்ணெய்யைச் சிறிது எடுத்து வாயில் ஊற்றி 5நிமிடம் கழித்து உமிழ்ந்துவிட வேண்டும். இப்படி செய்து வர கிருமிகள் அண்டாதாம். பழங்களை அடிக்கடி சாப்பிட்டுவர இந்தப் பிரச்னையில் இருந்து விரைவில் நிவாரனம் கிடைக்கும்.’’
லவங்க பட்டையை சிறிதளவு நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
தினமும் உணவு உண்ட பிறகு ஆப்பிள், கேரட் போன்ற காய்கறி மற்றும் பழ வகைகளை உண்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு எச்சில் சுரப்பதையும் அதிகரிக்க செய்யும்.
தினமும் உணவு உண்ட பிறகு ஆப்பிள், கேரட் போன்ற காய்கறி மற்றும் பழ வகைகளை உண்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு எச்சில் சுரப்பதையும் அதிகரிக்க செய்யும்.
வாய் துர்நாற்றத்தை போக்க பத்து வழிகள்:
1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. Mouth Washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக் கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.
8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.
9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
நீரிழிவு நோயாளிகள் கவனிக்க!
நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதிக தாகம் எடுக்கும். அப்போது வாய் அடிக்கடி உலர்ந்துவிடும். இதன் விளைவால், பல் ஈறுகள் கெட்டு வாய் நாற்றம் ஏற்பட வழி உண்டாகும்.
‘ஃபிளாஸ்ஸிங்’ உதவும்!
பல்துலக்கியால் பல் துலக்கும்போது பல்லின் முன்புறம், மேல்புறம், உட்புறம் மட்டுமே சுத்தப்படுத்த முடியும். இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள பகுதிக்குப் பல்துலக்கியின் இழைகள் நுழையாது. ஆனால், இங்குள்ள உணவுத் துகள்தான் நமக்கு எதிரி! இதை முதலில் வெளியேற்ற வேண்டும். பற்களை ஃபிளாஸ்ஸிங் (Flossing) செய்வதன் மூலம், இந்தப் பிரச்சினையைச் சரிசெய்துவிடலாம்.
பல் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் பொருத்தமான ‘டென்டல் ஃபிளாஸ்ஸிங் நூலை’வாங்கி, இரண்டு பற்களுக்கு இடையில் அதைச் செலுத்தி, மேலும் கீழும் மெதுவாக இழுக்கும்போது, அங்குள்ள உணவுத் துகள், கரை, அழுக்கு எல்லாமே வெளியேறிவிடும். அதன் பிறகு, வாய் நாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகும்.
குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி..!
No comments:
Post a Comment