Sunday 16 September 2018

மக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்

பரிட்சையில் தோல்வியடைந்தால்காதல் கைகூடவில்லை என்றால்தொழிலில் நஷ்டமடைந்தால் என இப்போதெல்லாம் எடுத்ததெற்கெல்லாம் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றனசிறுவயதில் தான் மேற்கொண்ட மரணப் பரிசோதனை முயற்சி குறித்தும் தற்கொலை எவ்வளவு முட்டாள்தனமானது என்பது குறித்தும் சத்குரு பேசுகிறார்.

நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போதுஎன்னையும்விட சிறிய பெண்ணொருத்தி திடீரென இறந்துபோனது என்னை யோசிக்க வைத்ததுமரணம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்மரணத்தை எப்படி நிகழ்த்திக் கொள்வது என்று ஆராய்ந்துதூக்க மாத்திரைகள் சேர்த்தேன்ஓர் இரவு உணவு உண்ணாமல்அத்தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டுஎதிர்பார்ப்புடன் என் படுக்கையில் படுத்துக் கொண்டேன்மரணம் பற்றி நான் ஏதும் புரிந்து கொண்டு விடவில்லைஎனக்கு நீண்ட தூக்கம் தான் வாய்த்ததுஆம்மூன்று நாட்கள் கழித்துஆழ்ந்த மயக்கத்தில் ஒரு மருத்துவமனையில் கண்விழித்தேன்.

'எதற்காக இந்தத் தற்கொலை முயற்சி?' என்று எல்லோரும் என்னை துளைத்து எடுத்தார்கள்மரணம்  என்ற புதிரின் விடையை அறியவே அப்படிச் செய்தேன் என்று நான் கொடுத்த விளக்கம் எடுபடவில்லைதற்கொலை முயற்சிக்குப் பெரிய அளவில் துணிச்சல் அவசியம் இல்லைஅபரிமிதமான முட்டாள்தனம் இருந்தால்போதும் என்பதை நான் அன்று உணர்ந்தேன்.

இன்னும் சில வருடங்கள் கழித்துகிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட ஓர் இளம் பெண் என்னை யோசிக்க வைத்தாள்அடிப்படையில்புழுபூச்சி முதற்கொண்டு ஒவ்வோர் உயிரும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே முயலும்வாழ்க்கையில் எப்படிப்பட்ட பொறுத்துக் கொள்ளவே முடியாத துன்பம் இருந்திருந்தால்வாழும் ஆர்வம் சிறிதும் கூட இல்லாதுதன் உயிரையே மாய்த்துக் கொள்ள அந்தப் பெண் துணிந்திருப்பாள் என்று பலநாள் யோசித்து இருக்கிறேன்.

தற்கொலைகளுக்கு என்ன காரணம்?
அவமானம்துரோகம்பணம்இழப்புதாங்வொண்ணா உடல்வலிதோல்வி என்று எத்தனையோ காரணங்கள்உண்மையில்தோல்வி என்று எதையும் நினைக்கத் தேவையில்லை.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பில் ஒளிரும் இழைக்காக இரண்டாயிரம் வெவ்வேறு மூலப்பொருள்களைப் பயன்படுத்திப் பார்த்தார்எதுவும் வேலை செய்யவில்லை'எல்லாம் வீண்என்று சலித்துக் கொண்டார் அவருடைய உதவியாளர்'இல்லைமின்சார பல்புக்கு உதவாது என்று இரண்டாயிரம் மூலப்பொருட்களைப் பற்றி நாம் கற்றிருக்கிறோம்என்றார் எடிசன்.

வாழ்வை எதிர்கொள்ள நம் ஒவ்வொருவருக்கும்இப்படிப்பட்ட தெளிவுதான் தேவை!

மனிதர்கள் மட்டுமல்லவிலங்குகளும்பறவைகளும் கூட தற்கொலை செய்து கொள்கின்றன என்று  உங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கலாம்அசாமில்ஜடிங்கா என்ற மலைப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து தற்கொலை செய்து கொள்கின்றன என்று சொல்லப்படுகிறதுஉண்மையில்வீசும் காற்றிலும் பனிமூட்டத்திலும் சிக்கிதிசை பற்றிய கவனத்தை அந்தப் பறவைகள் இழக்கின்றனமரங்களிலும்பாறைகளிலும் மோதிக் கொண்டு இறக்கின்றனஇது விபத்தே தவிரதற்கொலை  அல்ல என்பது என் எண்ணம்.

பறவை இனத்தில் சிலதங்கள் துணையை இழந்தால்உயிரை விடுவது உண்டுஆப்பிரிக்காவில் ஒரு வகை மான் இனம் தன் இணையை இழந்ததும்பட்டினி கிடந்து தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறதுஇது காதல் உணர்ச்சியால் அல்லதங்கள் துணையுடன் வாழ்க்கையைப் பிணைத்தே உயிர் வாழ்ந்து பழகிவிட்டதால்அந்தக் துணையை இழந்ததும்வாழ்வது பற்றிய குழப்பம் வந்துவிடுவதே இந்த மரணங்களுக்குக் காரணம்.

மனிதர்களிலும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்கள் இந்த ரகம்தான்வேறு ஒருவருடன் பின்னிப் பிணைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போதுஅவரின்றி வாழத் துணிவில்லாமல் போவதேஇந்த முடிவுக்கு அவரை தள்ளிச் செல்கிறது.

தற்கொலை செய்து கொண்டவர்களைக் கண்டனம் செய்ய நான் விரும்புவதில்லைவாழ்க்கைஅவர்களை எப்படிப்பட்ட விளிம்பிற்குத் தள்ளிச் சென்றிருந்தால்விலைமதிப்பில்லாத உயிரையே போக்கிக் கொள்ளும் எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கும்ஆனால்தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்உங்கள் உயிரை நீங்கள் மாய்த்துக் கொள்வதுஒரு சிசுவின் உயிரை நீங்கள் பறிப்பதற்கு ஒப்பாகும்ஆம்தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோஎதிர்க்கவோ முடியாத ஒன்றைத் தாக்குவது எப்படித் துணிச்சலாகும்?

'உங்கள் மதத்திற்காக தற்கொலைப் படையில் சேர்ந்தால் சொர்க்கம் நிச்சயம்என்று பலரை நம்ப வைத்துஅவரவர் உயிரை அவரவரே விட்டுக் கொடுக்கும் அளவிற்கு அவர்களை தயார் செய்பவர்களும் இருக்கிறார்கள்அவரவர் உயிரை மாய்த்துக் கொள்வதோடு அல்லாமல்அப்படி மாய்த்துக் கொள்ளும் நேரத்தில்தம்மோடு சேர்த்துஇன்னும் பல உயிர்களையும் அவர்கள் காவு வாங்குகிறார்கள்வெறுப்புகாழ்ப்பு இவற்றைக் கொண்டு தங்கள் அமைப்பை இயக்குபவர்கள்இறைவன் பெயரைச் சொல்லி மற்றவரை அழிப்பதற்குதங்கள் உயிரைவிடவும் தயாராக இருக்கிறார்கள்

உங்களுடைய உயிராக இருந்தாலும் சரிஅடுத்தவர் உயிராக இருந்தாலும் சரிஅந்த உயிரை நீங்கள் உருவாக்கவில்லைஅது உங்களுக்குச் சொந்தம் இல்லைஉங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை அழிப்பதற்கு உங்களுக்கு ஏது உரிமை?

ஆன்மீகத்தின் பெயராலும் சில தற்கொலைகள் தூண்டப்படுகின்றனசொர்க்க வாசலுக்கு அழைத்துச் செல்ல பறக்கும் தட்டுகள் காத்திருப்பதாகச் சொன்ன 'குரு'வை நம்பிபலர் குழுவாகத் தற்கொலை செய்து கொண்ட செய்திகளை நீங்கள் படித்திருக்கக்கூடும்இந்த மாதிரி மூடத்தனமான அபத்தங்களை நம்பும் விபரீதங்கள்மேற்கத்திய நாடுகளில்தான் அதிகம் காணப்படுகின்றனஉள்நிலை உணராதவர்கள் தங்களைக் குருவாக அறிவித்துக் கொண்டுசில கவர்ச்சிகரமான சத்தியங்களைச் செய்து கொடுத்துகூட்டத்தைச் சேர்த்துவிடுகிறார்கள்மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல், 'தீர்ப்பு நாள் வந்துவிட்டதுஇறைவனைச் சேர்வோம்என்று சொல்லி மரணத்தையே ஒரு தீர்வாக்கி விடுகிறார்கள்.

உள்நிலையை மேன்மையாக நினைத்துஉள்நிலையில் வளர்ச்சி காணத் தலைப்படும் நம் கலாசாரத்தில்இத்தகைய விபரீதங்கள் நடப்பதில்லைஇந்த உலகில்தங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற்று நிம்மதியாக வாழசாதாரண மண்புழுவில் இருந்து மாபெரும் யானை வரை கடைசிவரை போராடத் தயாராக இருக்கின்றனஅவற்றையெல்லாம் விட மிக மிகப் புத்திசாலித்தனமான மனிதன் மட்டும்தனக்குத் தேவையானது கிடைக்காவிட்டால் உடனே நம்பிக்கை இழக்கிறான்தன்னை மாய்த்தும் கொள்கிறான்'உங்கள் உடலையும்மனதையும் மேலும் திறம்படப் பயன்படுத்துவது எப்படிஎன்பதை அறிவதற்கான புதிய வாய்ப்பாகவேஉங்கள் தோல்வியை எதிர்கொள்ளுங்கள்ஆன்மீகத்தில் தற்கொலை ஆதரிக்கப்படுவதில்லைஇயற்கையின் அமைப்பில்தற்கொலை என்பது மாபெரும் தவறுஎப்பேர்ப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும்அதை அடுத்த கட்டத்திற்கான முதல் படியாக நினைத்துதாண்டிச் செல்ல வேண்டுமே தவிரஉயிரைப் போக்கிக் கொள்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லைசமூகத்தில் உண்மையான ஆன்மீகம் தழைக்கத் துவங்கிவிட்டால்தற்கொலை என்ற சொல் கூட நிலைக்காது.


தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பென்சோடையசிபைன்கள் பயன்பாடு போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம். தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி நேற்கோள்ளூம் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. துப்பாக்கி வகைகள், மருந்துகள் மற்றும் நஞ்சுப் பொருட்கள் முதலானவற்றை எளிதில் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதும் தற்கொலையை தடுக்கும் ஒரு முறையாகும். மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளித்தல் பொருகளை தவறாகப் பயன்படுத்துதலை தவிர்த்தல் முறையான செய்தி ஊடக அறிக்கையால் விழிப்புணர்வூட்டுதல் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல் போன்றவையும் தற்கொலைகளை குறைக்கும் வழிமுறைகளாகும். நெருக்கடியான சூழல்கள் தற்கொலைக்குப் பொதுவானவை என்றாலும், அவற்றின் செயல்திறன் குறைவாகவே உள்ளது.

தற்கொலை என்பது, பெரும்பாலும் ஒரே ஒரு காரணத்தால் நிகழ்வதில்லை, பல சிக்கலான காரணிகளின் தொகுப்புதான் இதைத் தூண்டுகிறது
இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கிறவர்களில் பலர் இளைஞர்கள் (15-29 வயதினர்). இந்தத் தற்கொலைகளுக்கான காரணங்களாகப் பல ஆய்வுகள் அடிக்கடி குறிப்பிடுபவை: குடும்ப முரண்கள், கல்விசார்ந்த ஏமாற்றங்கள், உறவுகளின் தோல்விகள், குடும்ப வன்முறை, மனநலக் குறைபாடுகள். வேறு சில காரணங்கள்: ஊடகங்களை அறிந்திருத்தல், தீய பழக்கங்களுக்கு அடிமையாதல், விரக்தியைத் தாங்க இயலாதிருத்தல் போன்றவை.
இன்னும் சில ஆபத்துக் காரணிகள்: குடும்பத்தில் இதற்குமுன் நிகழ்ந்துள்ள தற்கொலைகள், சம்பந்தப்பட்டவர் இதற்குமுன் தற்கொலைக்கு முயற்சி செய்திருத்தல், மனச்சோர்வு போன்ற மனநலக் குறைபாடுகள், போதைமருந்துப் பழக்கம், நம்பிக்கையின்மை, அனிச்சையாக அல்லது தீவிரமாக நடந்துகொள்ளுதல், துன்புறுத்தப்பட்ட அனுபவம், தற்கொலைக்கான கருவிகள்/ பொருள்கள் எளிதில் கிடைத்தல், நண்பர்கள், குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காமலிருத்தல் போன்றவை.
2010ம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த 18-25 வயதுள்ள 436 இளநிலை மாணவர்களிடையே NIMHANS ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியது. அப்போது அவர்களில் 15 சதவிகிதப்பேர் தற்கொலையைப்பற்றி எண்ணியுள்ளார்கள், 9 சதவிகிதப்பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்கள், 9 சதவிகிதப்பேர் நம்பிக்கையில்லாத நிலையில் வாழ்கிறார்கள் என்று தெரியவந்தது. இவர்கள் சந்தித்த துன்புறுத்தல்களைப்பற்றிக் கேட்டபோது, சுமார் 30 சதவிகிதப்பேர் உடல்சார்ந்த துன்புறுத்தலைப்பற்றிச் சொன்னார்கள். பொதுவாகப் பெண்களைவிட, ஆண்களுக்குத் துன்புறுத்தப்பட்ட அனுபவம் அதிகமாக இருந்தது: பொதுவான துன்புறுத்தல், உடல்சார்ந்த துன்புறுத்தல், உணர்வுசார்ந்த துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல். தற்கொலைக்கு முயற்சி செய்ததாகச் சொன்னவர்களில் பலர், துன்புறுத்தல்களைச் சந்தித்திருந்தார்கள்.
தற்போது, வளர் இளம் பருவத்தினர் (13-18 வயது) மத்தியில் மனச்சோர்வு, தற்கொலை ஆபத்து மற்றும் தற்கொலை முயற்சிகள், அழுத்தத்தின் அறிகுறிகள் காணப்படுகின்றனவா என்பதைப் பரிசோதிக்கும் ஆய்வு ஒன்று நடைபெற்றுவருகிறது. பெங்களூரைச் சேர்ந்த 200 பள்ளி மாணவர்கள், 257 கல்லூரி மாணவர்களிடையே இதுபற்றி ஆராய்ந்தபோது, இந்த விவரங்கள் தெரியவந்தன: இந்த வளர் இளம் பருவத்தினரில் 30 சதவிகிதப்பேருக்கு மிதமானதுமுதல் தீவிரமானதுவரை மனச்சோர்வு உள்ளது, கல்லூரி செல்பவர்களில் 11 சதவிகிதத்தினரும், பள்ளி செல்பவர்களில் 7.5 சதவிகிதத்தினரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். இவர்களிடையே அழுத்தத்துக்கான காரணங்கள் என்ன என்று பார்த்தால், முதல் இடம் கல்வி சார்ந்த அழுத்தத்துக்கு (62.7%), அடுத்த இடம் குடும்பப் பிரச்னைகள் (25.4%), நட்புப் பிரச்னைகளுக்கு (11.8%).
எல்லா வயதுக்குழுக்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால்கூட, பெரும்பாலானோரின் தற்கொலைக்குக் காரணமாக அமைபவை, குடும்பப் பிரச்னைகள், நோய்கள், தோல்விகள், கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலை, வரதட்சணைப் பிரச்னைகள், ஏழைமை மற்றும் போதைப்பொருள் பயன்பாடு. எப்போதும் ஒரே ஒரு காரணியால் ஒருவர் தற்கொலைக்குத் தூண்டப்படுவதில்லை. பல காரணிகள் ஒன்றாகச் சேர்ந்துதான் இதனைத் தூண்டுகின்றன. தற்கொலை முயற்சிகள் தொடர்பான சிக்கலான காரணிகளை நிபுணர்கள் ஊகித்து அறியும் அதேவேளையில்,  யாரெல்லாம் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகளைச் சமூகத்தினர் அடையாளம் காணப் பழகினால், தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கக்கூடியவர்கள் அதற்குமுன்னால் பிறரிடம் உதவி கோரினால், தற்கொலைகளைப் பெருமளவு தடுக்கலாம் என்கிறார்கள். 
“வாழ்க்கை கடும் வேதனையளிக்கிறது.” தற்கொலை செய்துகொள்வதற்கு சற்று முன்பு இப்படித்தான் எழுதி வைத்திருந்தார் ரியுனோசூகே ஆக்குடாகாவா—⁠20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜப்பானில் வாழ்ந்த பிரபல எழுத்தாளர். ஆனால் இந்த வார்த்தைகளுக்கு முன்பு அவர் இவ்வாறு எழுதினார்: “உண்மையில் நான் சாக விரும்பவில்லை, ஆனால் . . . ”ஆக்குடாகாவாவை போல தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் அநேகர் உண்மையில் சாக விரும்புவதில்லை, ஆனால் “நடக்கிற எந்த விஷயத்திற்கும் ஒரு முடிவு கட்டவே” விரும்புகிறார்கள் என உளவியல் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். தற்கொலைக்கு முன்பு எழுதி வைக்கப்படும் கடிதங்களில் மிகவும் பொதுவாக காணப்படும் வார்த்தைகள் இதைத்தான் மறைமுகமாக தெரிவிக்கின்றன. ‘இனிமேல் என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியாது’ அல்லது ‘நான் எதுக்காக இனியும் வாழணும்?’ போன்ற வார்த்தைகள், வாழ்க்கையின் வேதனைமிக்க நிஜங்களை விட்டு ஓடவே அவர்கள் மிகவும் ஆசைப்படுகிறார்கள் என்பதை காட்டுகின்றன. ஆனால் தற்கொலை செய்துகொள்வது, “ஜலதோஷத்திற்கு அணுகுண்டை மருந்தாக பயன்படுத்துவதைப் போல” இருக்கிறது என வல்லுநர் ஒருவர் விவரிக்கிறார்.
“மிகவும் தனிப்பட்ட விஷயம், புரிந்துகொள்ளவே முடியாதது, பயங்கர கலக்கம் என தற்கொலை செய்துகொள்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.” கே ரெட்ஃபீல்டு ஜேமிசன், உளவியல் மருத்துவர்.
மக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதற்கு காரணங்கள் பல இருந்தாலும், வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள் பொதுவாக தற்கொலையைத் தூண்டுகின்றன.
தூண்டும் காரணிகள்
மற்றவர்களுக்கு மிகவும் அற்பமாக தோன்றுகிற விஷயங்களுக்குங்கூட நம்பிக்கை இழந்து தற்கொலை செய்கிற இளைஞர் கூட்டம் இன்று ரொம்ப சர்வசாதாரணம். யாராவது புண்படுத்தி அதற்காக எதுவும் செய்ய முடியாமல் இருக்கும்போது, தங்களை புண்படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்க தங்களுடைய சாவை ஓர் அஸ்திரமாக இளைஞர் கருதலாம். ஜப்பானில் தற்கொலை தூண்டுதல்களுக்கு ஆளாகிறவர்களுக்கு உதவி செய்வதில் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ஹிரோஷி ஈனாமூர இவ்வாறு எழுதினார்: “தங்களை துன்பப்படுத்தியவர்களுக்கு தங்களுடைய சாவின் மூலம் தண்டனை கொடுப்பதற்கான உள் தூண்டுதலில் பிள்ளைகள் ஆனந்தம் அடைகிறார்கள்.”
பிள்ளைகள் கடும் சித்திரவதைக்கு ஆளாகும்போது தற்கொலை முயற்சி செய்யும் வாய்ப்பு கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம் என பிரிட்டனில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆராய்ச்சி சுட்டிக்காட்டியது. இந்தப் பிள்ளைகள் அனுபவிக்கும் உணர்ச்சி ரீதியிலான வேதனை நிஜமானது. தூக்குப்போட்டு செத்த 13 வயது சிறுவன், தன்னை சித்திரவதை செய்து தன்னிடமிருந்து பணத்தையும் பிடுங்கிய ஐந்து பேருடைய பெயர்களை குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான். அதில், “தயவுசெய்து மற்ற பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்” என எழுதியிருந்தான்.
இன்னும் சிலர் பள்ளியில் ஏதாவது வம்பிலோ அல்லது சட்டத்தின் பிடியிலோ மாட்டிக்கொள்ளும்போது, காதலில் தோல்வியடையும்போது, அல்லது நல்ல மார்க் வாங்காதபோது, பள்ளி பரீட்சையை எண்ணி மனவேதனைப்படும்போது, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் மனமுடைந்து போகும்போது தங்களுடைய உயிரை போக்கிக்கொள்ள முயற்சி செய்யலாம். எப்போதுமே நூற்றுக்கு நூறு வாங்க துடிக்கிற பருவ வயதினருக்கு வாழ்க்கையில் ஏதாவது பின்னடைவோ தோல்வியோ ஏற்படும்போது—⁠அது நிஜமானதாகவோ கற்பனையானதாகவோ இருந்தாலும்—⁠தற்கொலை முயற்சியில் இறங்கலாம்.
பெரியவர்களை பொறுத்ததில் பண அல்லது வேலை சம்பந்தமான பிரச்சினைகளே பொதுவாக தற்கொலையை தூண்டும் காரணிகளாகும். ஜப்பானில் பல வருட பொருளாதார வீழ்ச்சிக்குப்பின் சமீபத்தில் தற்கொலை எண்ணிக்கை ஆண்டுக்கு 30,000-ஐயும் தாண்டிவிட்டது. மைனிச்சி டெய்லி நியூஸ் கூறுகிறபடி, நடுத்தர வயதுடையவர்களில் சுமார் முக்கால்வாசி பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். காரணம்? “கடன் தொல்லைகள், வியாபாரத்தில் தோல்விகள், வறுமை, வேலைவாய்ப்பின்மை.” குடும்ப பிரச்சினைகளும் தற்கொலைக்கு வழிநடத்தலாம். “சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்ட நடுத்தர வயது ஆண்கள்” மிகவும் ஆபத்தில் இருக்கும் தொகுதியினர் என பின்லாந்து நாட்டு செய்தித்தாள் ஒன்று அறிக்கை செய்தது. தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி யோசிக்கும் பெரும்பாலான பெண் பிள்ளைகள் பிளவுபட்ட குடும்பங்களில் வளர்க்கப்பட்டவர்கள் என ஹங்கேரியில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி கண்டுபிடித்தது.
வேலையிலிருந்து ஓய்வுபெறுவதும் வியாதியும்கூட, முக்கியமாக வயதானவர்கள் மத்தியில், தற்கொலையை தூண்டுகிற முக்கிய காரணிகளாகும். ஒரு நோயாளி தன்னுடைய வியாதியை சகிக்க முடியாததாக எண்ணும்போது, அது தீரா வியாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அதிலிருந்து தப்பிக்க தற்கொலையை ஒரு பரிகாரமாக நாடுகிறார்.
என்றாலும், எல்லாருமே இப்படிப்பட்ட காரணிகளால் தூண்டப்பட்டு தற்கொலை செய்துகொள்வதில்லை. வேதனைமிக்க சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது பெரும்பான்மையோர் தங்களுடைய உயிரை போக்கிக்கொள்வதில்லை. அப்படியானால், பெரும்பாலானோர் அப்படி நினைக்காதபோது ஏன் சிலர் மட்டும் தற்கொலையை பரிகாரமாக நினைக்கிறார்கள்?
அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகள்
“காரியங்களை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில்தான் மரிப்பதற்கு எடுக்கும் தீர்மானமே அடங்கியிருக்கிறது” என சொல்கிறார் கே ரெட்ஃபீல்டு ஜேமிசன், இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர். அவர் மேலும் சொல்கிறார்: “பெரும்பாலானோருடைய மனம், ஆரோக்கியமாக இருக்கும்போது, எந்தவொரு காரியத்தையும் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மோசமானதாக எடுத்துக்கொள்வதில்லை.” அநேக காரணிகள்—⁠அவற்றில் சில அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகள்—⁠தற்கொலை தூண்டுதலுக்கு வழிநடத்த ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என ஐ.மா. தேசிய மனநல நிறுவனத்தைச் சேர்ந்த ஈவ் கே. மாஷ்சிட்ஸ்கி குறிப்பிடுகிறார். அடித்தளத்திலுள்ள இப்படிப்பட்ட முக்கிய காரணிகளில் மனநிலை கோளாறுகள் (mental disorders), கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்படும் கோளாறுகள் (addictive disorders), மரபுவழி பண்புகள் (genetic makeup), மூளை இரசாயனம் (brain chemistry) ஆகியவை உட்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை இப்பொழுது கவனிக்கலாம்.
மனச்சோர்வு (depression), பித்துவெறி கோளாறுகள் (bipolar mood disorders), உளச்சிதைவு (schizophrenia) போன்ற மனநல கோளாறுகளும் மதுபானத்திற்கு அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் கோளாறுகளும் இந்தக் காரணிகளில் மிகவும் முக்கியமானவை. தற்கொலை செய்துகொண்ட 90 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு இப்படிப்பட்ட கோளாறுகள் இருந்ததாக ஐரோப்பாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சி காட்டுகிறது. சொல்லப்போனால், இப்படிப்பட்ட எந்தக் கோளாறுகளும் இல்லாத ஆண்களில் தற்கொலை வீதம் 1,00,000-⁠க்கு 8.3, ஆனால் மனச்சோர்வடைந்தவர்களில் தற்கொலை வீதமோ 1,00,000-⁠க்கு 650-⁠ஆக உயர்ந்துவிட்டதை ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள்! தற்கொலைக்கு வழிநடத்தும் காரணிகள் கிழக்கத்திய நாடுகளிலும் ஒரே விதமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இருந்தபோதிலும், மனச்சோர்வும் தற்கொலையைத் தூண்டுகிற மற்ற காரணிகளும் சேர்ந்தாலும்கூட தற்கொலையை தவிர்க்க முடியாததாக ஆக்குவதில்லை.
ஒருசமயம் தற்கொலைக்கு முயற்சி செய்த பேராசிரியர் ஜேமிசனே இவ்வாறு கூறுகிறார்: “நிலைமைகள் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கும்வரை மக்கள் மனச்சோர்வை தாங்கிக்கொள்வதாக அல்லது சகித்துக்கொள்வதாக தெரிகிறது.” ஆனால், தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நம்பிக்கையின்மை படிப்படியாக அதிகரிக்கும்போது, தற்கொலை தூண்டுதல்களை கட்டுப்படுத்தும் சக்தியை மனம் படிப்படியாக இழந்துவிடுகிறது. தொடர்ச்சியான அழுத்தத்தால் ஒரு காரின் பிரேக்குகள் தேய்ந்து மெல்லியதாவதற்கு இதை அவர் ஒப்பிடுகிறார்.
ஒருவரின் வெற்றிக்கு கண்டிப்பாக பலர் காரணமாக இருக்கலாம், ஆனால் தோல்விக்கு அந்த நபர் தான் காரணம். சிலர் அவனை நம்பி ஏமார்ந்து விட்டேன், அவன் தான் என் தோல்விக்கு காரணம் என்பார்கள். ஆனால், அப்படி ஒரு நபரை நம்பியது உங்கள் தவறு தானே. அப்படி தான் இறப்பும். நாம் பிறக்க நமது பெற்றோர், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெரியோர் பலர் காரணமாக இருக்கலாம். ஆனால், நமது, மரணத்திற்கு நாம் தான் காரணம். அது, இயற்கை, விபத்து, நோய் என எதுவாக வேணுமானாலும் இருக்கலாம்.
ஆனால், மரணம் நம்மை தேடி வர வேண்டும் தவிர, நாம் மரணத்தை தேடி செல்ல கூடாது...தற்கொலை தன்னம்பிக்கை இல்லாதவன் செய்யும் காரியம் என்பது சான்றோர் வாக்கு. ஆனால், தற்கொலைக்கு முயற்சிக்கும் அளவிற்கு தைரியம் இருப்பவன், அதை திசை திருப்பினால் வாழ்வில் பெரும் வெற்றியாளராக திகழ முடியும்...
மனச்சோர்வை குணமாக்க முடியுமாதலால், இப்படிப்பட்ட போக்கை முதலில் கண்டுணர்வது முக்கியம். ஆதரவற்று தவிக்கும் உணர்வை மாற்ற முடியும். அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகள் சரிசெய்யப்படுகையில், பெரும்பாலும் தற்கொலையைத் தூண்டும் மனவேதனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மக்கள் வித்தியாசமாக பிரதிபலிக்கலாம்.
அநேக தற்கொலைகளுக்கு ஒருவருடைய மரபியல் பண்பே அடித்தளத்திலுள்ள முக்கிய காரணியாக இருக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். ஒருவருடைய மனப்போக்கை தீர்மானிப்பதில் ஜீன்கள் பங்கு வகிக்கலாம், மற்றவர்களைவிட சிலருடைய பரம்பரையில் தற்கொலை சம்பவங்கள் நிறைய நிகழ்ந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் காட்டுவதும் உண்மைதான். என்றாலும், “மரபியல் செல்வாக்கு இருப்பதால் தற்கொலை தவிர்க்க முடியாதது என எந்த விதத்திலும் அர்த்தப்படுத்துகிறதில்லை” என ஜேமிசன் கூறுகிறார்.
மூளை இரசாயனமும் முக்கிய காரணியாக இருக்கலாம். மூளையிலுள்ள கோடிக்கணக்கான நியூரான்கள் மின்-வேதியியல் முறையில் தொடர்பு கொள்கின்றன. நரம்பிழைகளின் கிளைபோன்ற முனைகளில், சினாப்ஸிஸ் என்ற சிறிய இடைவெளிகள் இருக்கின்றன, இவற்றை கடந்து நியூரோ-கடத்திகள் (neurotransmitters) தகவல்களை வேதியியல் முறையில் கொண்டு செல்கின்றன. உயிரியல் ரீதியில் எளிதில் தற்கொலைக்கு பலியாகும் ஒருவருடைய விஷயத்தில், செரோடோனின் என்ற நியூரோ-கடத்தி ஒன்றின் அளவு உட்பட்டிருக்கலாம். மூளைக்கு உள்ளே என்ற ஆங்கில நூல் இவ்வாறு விளக்குகிறது: “செரோடோனின் அளவு குறைவாக இருப்பது . . . வாழ்க்கையில் மகிழ்ச்சியை எடுத்துப்போடலாம், வாழ்வதில் விருப்பத்தை குறைத்துவிடலாம், மனச்சோர்வு மற்றும் தற்கொலையின் ஆபத்தை அதிகரிக்கச் செய்யலாம்.”
இருந்தாலும், யாருமே தற்கொலை செய்துகொள்வதற்கு விதிக்கப்படவில்லை என்பதே உண்மை. லட்சக்கணக்கானோர் கடுந்துயரங்களையும் மன அழுத்தங்களையும் சமாளிக்கிறார்கள். தற்கொலைக்கு வழிநடத்தும் அழுத்தங்களுக்கு சிலருடைய மனதும் இருதயமும் எப்படி பிரதிபலிக்கிறது என்பதே தீர்மானிக்கும் காரணி. உடனடியாக தூண்டுகிற காரணங்கள் அல்ல, ஆனால் அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகளையும் சிந்திக்க வேண்டும்.
அப்படியானால், வாழ்க்கைக்கு ஓரளவு மகிழ்ச்சியை ஊட்டும் நம்பிக்கையான நோக்கை உருவாக்க என்ன செய்யலாம்?
ஆண்களைவிட பெண்களில் இரண்டு முதல் மூன்று மடங்கானோர் தற்கொலை முயற்சி செய்யும் சாத்தியம் இருந்தாலும், வெற்றிபெறும் சாத்தியமோ ஆண்களில் நான்கு மடங்கு அதிகம் என ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. ஆண்களைவிட பெண்களில் குறைந்தபட்சம் இரண்டு மடங்கானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர், இதுவே அதிகளவான பெண்கள் தற்கொலை முயற்சி செய்வதற்குக் காரணமாக இருக்கலாம். இருந்தாலும், அவர்களுடைய மனச்சோர்வு வியாதி அதிக தீவிரமின்றி இருக்கலாம், ஆகவே அவர்கள் அதிக தீவிரமல்லாத முறைகளை நாடலாம். மறுபட்சத்தில் ஆண்களோ தற்கொலை முயற்சியில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த அதிக தீவிரமான, திட்டமான முறைகளை பின்பற்ற மனமுள்ளவர்களாக இருக்கலாம்.
இருந்தாலும், சீனாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம் வெற்றி பெறுகின்றனர். சொல்லப்போனால், உலகிலேயே பெண்களில் சுமார் 56 சதவீத தற்கொலைகள் சீனாவில், முக்கியமாக கிராமப்புற பகுதிகளில், நடைபெறுகின்றன என ஓர் ஆய்வு வெளிப்படுத்துகிறது. பெண்களின் தற்கொலை முயற்சிகள் வெற்றிபெறுவதற்குரிய காரணங்களில் ஒன்று பயங்கரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதாகும்.
தற்கொலையும் தனிமையும்
மனச்சோர்வுக்கும் தற்கொலைக்கும் மக்களை வழிநடத்தும் காரணிகளில் ஒன்று தனிமை. பின்லாந்தில் தற்கொலைகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு தலைவராக இருந்த யோயுகோ லூன்குவிஸ்ட் இவ்வாறு கூறினார்: “[தற்கொலை செய்துகொண்ட] பெரும்பாலானோருடைய அன்றாட வாழ்க்கை தனிமையிலேயே கழிந்தது. அவர்களுக்கு நிறைய ஓய்வுநேரம் கிடைத்தது, ஆனால் சமுக கூட்டுறவுகளோ மிக மிகக் குறைவு.” ஜப்பானில் நடுத்தர வயதுடைய ஆண்கள் தற்கொலை செய்துகொள்வது சமீபத்தில் பெருகி வருவதற்கு காரணம் “தனிமை” என கென்ஷிரோ ஓஹாரா கூறினார், இவர் ஹமாமட்ஸு மருத்துவ பல்கலைக்கழகத்தில் உளவியல் மருத்துவராக இருக்கிறார்.
பெரியவர்களுடைய விஷயத்தில், பண மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சினைகளே தற்கொலையை தூண்டும் பொது காரணிகள்.
நகரம் ஒரு சூதாட்டப் பலகையைப் போல சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் எதையோ இதன் முன் வைத்துச் சூதாடத் துவங்குகிறார்கள். சுழலும் வேகத்தில் கைப்பொருள்கள் காணாமல் போகின்றன’ என்று இன்றைய வாழ்வின் இருப்பைச் சித்திரிக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
வாழ்க்கை வெள்ளத்தின் சுழிகளில் சிக்கி எல்லாவற்றையும் இழந்து தங்களையும் இழக்க நேரிடும் சோகங்கள் நிகழாத தேசங்கள் இல்லை. ஆம், தற்கொலை என்பது ஒரு சர்வதேசப் பிரச்னை.
செக்ஸ் பிரச்னைகள் முதல் ஷேர் மார்க்கெட் பிரச்னைகள் வரைத் தற்கொலைக்கு விதவிதமான பின்னணிகள் உள்ளன. ஆகாயக் கோட்டைகள் கட்டி பேராசையில் பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் பங்கு கொண்டோரில், சில ஆண்டு முன் ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியின் போது 16 சதவிகிதத்தினர் உலகமே அஸ்தமித்துவிட்டதாகக் கலங்கி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனன் என்று அதிர்ச்சி தரும் புள்ளி விவர ஆய்வுகள் அறிவிக்கின்றன.
சிறுவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை, மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை தற்கொலையில் ஈடுபடாத சமூகப் பிரிவுகளே கிடையாது. ஏழைகள் மட்டுமா தற்கொலை செய்து கொள்கிறார்கள்? அல்லது தற்கொலையில் ஈடுபடும் அனைவரும் மனநோயாளிகளா? இந்த இரண்டிலும் முழு உண்மையிருப்பதாகக் கூற முடியாது. பிரபல சினிமா அதிபர் ஜி.வி. பிரபல இதய நிபுணர் டாக்டர் செரியன் போன்றவர்கள் கூட தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஒரு மனிதன் ஏதோ ஓர் உந்துதலில் சுய விருப்பத்துடன் சுய தீர்மானத்துடன் தன் உயிரைத் தனக்கு உகந்த ஓர் வழியில் போக்கிக் கொள்வதைத் தான் தற்கொலை என்கிறோம். தற்கொலைக்கான உந்துதலுக்குக் தோறுவாய் காரணங்கள் எவை?
போட்டிகள் நிறைந்த உலகம், போட்டிகளே வாழ்க்கையாகிவிட்ட இறுக்கம், தோல்விகளால், விரக்திகளா, நிறைவேறாத ஆசையால், மன அழுத்தத்தால், துக்கத்தால், குழப்பங்களால், அவமானங்களால், பயங்களால், பாலியல் துன்புறுத்தல், வறுமை, வரதட்சனை, கடன், தேர்வுத் தோலி, காதல் முறிவு, வேலையின்மை, குழந்தையின்மை போன்ற பல்வேறு சமூகப் பொருளாதார மற்றும் குடும்பக் காரணங்களால் உள்ளம் நொறுங்கி தற்கொலை விளிம்புக்குத் தள்ளப்படுகின்றனர்.
'உலகிலேயே மிக நீண்டது எது? சீனாவின் சுவரா? அல்லது நைல் நதி கடந்து செல்லும் வழியா? இரண்டுமில்லை. வேலையற்றவனின் பகல் பொழுது தான்!’ என்று கூறும் எழுத்தோவியர் ஒருவரின் கருத்துக்களில் யார் முரண்பட முடியும்? ஆம்...உண்மை தான்...வேலையற்ற வாலிப நெஞ்சங்களுக்கு நீண்ட நெடிய வேதனைமிக்க பகல்பொழுதுகளை விட இருளும், தற்கொலைகளும் நிம்மதி தருகின்றன.
உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது என்பார்கள். விளைவு? நாட்டுக்கே படியளக்கும் விவசாயிகளில் ஒரு பகுதியினர் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மனப்பாடக் கல்வியே மகத்தான கல்வி, மதிப்பெண்கள் தான் மாணவரின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கும் அளவுகோல் என்று படுமோசமான ஓர் கல்விச்சூழல் நம் வாரிசு செல்வங்களை வாட்டி வதைத்து வருகிறது. அதனால் தான் தேர்வு முடிவுகள் தெரிந்தவுடன் எதிர்கால இந்தியச் சிற்பிகளாய் ஒளிர வேண்டிய இளந்தளிர்களில் சிலர் மன்முடைந்து மரணத்தைத் தழுவுகின்றனர்.
மரணத்தை நேசிப்பவர்கள் யாருமில்லை. மரணம் இனிமையானது அல்ல. மரணம் தன் கோரப் பற்களுடன் நம்மை நெருங்குமானால் பயம் நம்மை கவ்வும். வாழ்வின் அந்திம நேரம் நெருங்கி விட்ட மனிதனுக்கு கூட மேலும் மேலும் வாழத்தான் ஆசை.
இதற்கு மாறாக வாழ்வை உக்கிரமாக வெறுத்துப் புறக்கணித்து மூன்று விதமான மனிதர்கள் தான் தற்கொலை முடிவுக்குச் செல்வதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
1. பிறருடன் இயல்பாகப் பழகாமல், வெளிப்படைத் தன்மையில்லாமல் தனக்குள்ளேயே ஒடுங்கிக் கிடப்பவர்கள் 
2. அதியுணர்ச்சி நபர்கள்
3. அகந்தையும் பிடிவாதமும் உள்ளவர்கள்
தற்கொலை செய்வோரில் பெரும்பாலோர் நஞ்சு அருந்தியே அழிகின்றனர். இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்கின்றனர். நீரில் குதிப்பது, பள்ளத்தில் குதிப்பது, துப்பாக்கியில் சுட்டுக் கொள்வது, வாகனங்கள் முன் விழுவது, தீக்குளிப்பது போன்றவை மற்றவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள்.
கடந்த காலஙக்ளில் கொள்ளை நோய்களிலும் தொற்று நோய்களிலும் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் மாண்டனர். இன்று இருதய நோய், பக்கவாத நோய், புற்றுநோய், குடி போதை மற்றும் தற்கொலை போன்றவற்றால் மாண்டு மடிகின்றனர்.
இதற்கு காரணம் என்ன? டிவிக்களின் ஆதிக்கம். சந்தை மயம், உணவில், உடல்நலத்தில் உண்மையான, உறுதியான அக்கறையின்மை, கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கிப் பாதாளங்களில் விழுந்து பரிதவிக்கும் நிலை. நமது கலாச்சாரம், பண்பாடு, தட்பாவெப்பம், உணவுப் பழக்கம் போன்றவற்றோடு எவ்விதத்திலும் பொருந்தாத சுயதன்மைகளைச் சீரழிக்கிற வெளிநாட்டுப் பொருட்கள், போதைகந்ளை அனுபவிக்கத் துடிக்கும் மோகம் (தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல செய்கிற இவர்களை மகாத்மாவே மன்னிப்பீராக)
அரசுகளின் அனுமதியோடு ஆசிர்வாத்தோடு நடைபெறும் அன்னியக் கலாச்சாரப் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புறம். வறுமைத் தீயிலும் அறியாமைச் சேற்றிலும் மூழ்கிக் கிடக்கும் பரிதாபத்துக்குரிய மக்கள் மறுபுறம், கிராமங்களுக்கு செல்போன் வசதியும் இணைய தளம் வசதியும் வந்துவிட்டால் இந்திய விண்வெளிக் கலன்கள் விண்ணில் மிதந்துவிட்டால் இந்தியா நவீன நாடாகி விடுமா? கல்வியற்ற இந்தியரும், வேலையற்ற இந்தியரும், நோயிலும் வறுமைத் துயரிலும் வெந்து சாகும் இந்தியரும் குவிந்து கிடக்கும் போது இவர்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்ய வழிகாணாமல் நவீன தேசமாக எப்படி மாறும்?


பாதுகாப்பற்ற தன்மையின் (Insecure Feeling) எல்லைக்கே வந்து நிற்கும் போது தான் தற்கொலை தவிர வேறுவழியில்லை என்ற மனநிலை உருவாகிறது. சராசரியாக 20 முதல் 30 சதவிகிதம் பேர்கள் வரை இதுபோன்ற மன முடக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலை நீடித்தால் உறுதியாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய உணர்வும் எண்ணமும் மேலோங்கும் போது முறையான கலந்தாய்வு (Cousellingt) மூலம் ஹோமியோபதி சிகிச்சை மூலமும் தற்கொலை முடிவிலிருந்து வெளியேற முடியும். இதற்கு உதவும் ஒரு சில மருந்துகளை அறிவோம்.
கடுமையான வேதனை, விரக்தி காரணமாக தற்கொலை எண்ணம் - ஆரம்மெட்
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ஏழையாகி விடுவோம் என்ற பயம். வியாதி தீராதென்ற பயம், கவலை காரணமாக தற்கொலை எண்ணம் - சோரினம்.
விஷம் அருந்தி உயிரை மாய்க்கும் எண்ணம் - ஆர்சனிக்கம், பெல்லடோனா, பல்சடில்லா.
தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய எண்ணம் - ஆர்சனிக்கம், பெல்லடோனா
தொழில் கஷ்டாங்களால் தீப்பெட்டி ஆலை மருந்து (பாஸ்பரஸ்) சாப்பிட்டு தற்கொலை செய்ய எண்ணம் - இக்னேஷியா.
ரயில், பஸ், லாரி, போன்ற வாகனங்களின் முன்பு விழுந்து தற்கொலை செய்யும் மனநிலை - ஆர்சனிகம், காலிபுரோம், லாக்கஸிஸ்
மாடி, ஜன்னல், குன்று போன்ற உயரமான இடத்திலிருந்து குதித்து அல்லது நீரில் குதித்து அல்லது தூக்கில் தொங்கி அல்லது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்ள எண்ணம் - ஆரம்மெட்.
நீரில் மூழ்கிச் சாக விருப்பம் - பெல்லடோனா, ஹயாஸ்யாமஸ், டிரோசிரா, ரஸ்டாக்ஸ், உஸ்டிலகோ.
பாலத்தைக் கடக்கும் போதே நீரில் குதித்துச் சாக எண்ணம் - Arg.nit
காதல் தோல்வியால் தற்கொலை முடிவு7 - பெல்லடோனா, காஸ்டிகம், ஸ்டாபிசாக்ரியா.
பிறரால் திருட்டுப்பட்டம் சூட்டப்பட்ட பின் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணுதல் - ஹெல்லிபோரஸ்
நீண்ட கால வீட்டு நினைவுத் துயரால் தற்கொலை எண்ணம் - காப்சிகம்
துப்பாக்கியால் சுட்டுச் சாக எண்ணம் (ஆனால் நிறைவேற்ற பயம்) - பல்சடில்லா, அனகார்டியம்.
பட்டினி கிடந்து சாக விருப்பம் - மெர்க்சால்
மன அழுத்தம், ஆழ் மனவருத்தாங்களால் தற்கொலை எண்ணம் - இக்னேஷியா
கணவன் மீதும், உடலுறவு மீதும் குழந்தை மீதும் உள்ள வெறுப்பால் தற்கொலை எண்ணம் - அக்னஸ் காஸ்டஸ்
மாதவிடாய் நாட்களில் தற்கொலை உணர்வு - மெர்க் வைவஸ்



No comments:

Post a Comment