Saturday, 8 September 2018

மாதுளை பழத்தின் மருத்துவ குணங்கள்


மாதுளை பழத்தின் மருத்துவ குணங்கள் – விதமான பயன்கள்


மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக இருக்கிறது. இந்த மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அவையே நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது.  மேலும் இந்த மாதுளம் பழத்தில் கூந்தல் மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக உள்ளன. இந்தக் கட்டுரையில் முதலில் மாதுளைப் பழத்தைப் பற்றிப் பார்த்துவிட்டு அதன் நன்மைகளை அதன்பிறகுக் காணலாம்.

பழங்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பக ஒரு சில பழங்களில் உள்ள நன்மைகள் அளவிட முடியாதவை. இவ்வாறு அளவிட முடியாத நன்மைகள் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளம் பழத்திற்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. மாதுளை குறுமர வகையைச் சார்ந்தது. இதன் பூர்வீகம் ஈரான் என்று சொல்லப்பட்டாலும் 5000 ஆண்டுகளாக ஈரானில் மட்டுமல்லாது ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பயிரிடப்பட்டு வருகிறது. மாதுளை வெப்ப காலங்களிலும், மிதவெப்ப காலங்களிலும் நன்றாகப் பலன் தரும். மாதுளை பழத்தினை தமிழில் பீசபுரம், மாதுளம், மாதுளங்கம், தாடிமம் மற்றும் கழுமுள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் பொமேகிரானட் (Pomegranate) என்று அழைக்கப்படுகிறது. மாதுளையின் தாவிரவியல் பெயர் புனிகா கிரனேட்டம் (Punica granatum) என்பதாகும். மாதுளைப் பழத்தில் மூன்று வகையான சுவைகள் இனிப்பு, புளிப்பு மற்றும் ஆகியவை உள்ளன. எனவே இப்பழத்தைப் பெரியோர் முதல் சிறு குழந்தைகள்வரை அனைவரும் விரும்புகின்றனர்.

மாதுளை பழத்தின் 35 வகையான மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்:

மாதுளம் பழத்தின் ஒவ்வொரும் பகுதியும் எண்ணற்ற நன்மைகளை நமக்குத் தருகின்றன. அவை சரும அழகைக் கூட்டக்கூடிய பழமாகவும், கூந்தல் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் பழமாகவுக் இந்த மாதுளைப் பழம் விளங்குகிறது. இந்த 35 விதமான மருத்துவ குணங்களையும் பயன்களையும் கீழே காணலாம்.

மாதுளை: ‍சருமத்திற்கானப் பயன்கள்:

ஒரு ஆரோக்கியமான சருமம் என்பது அழகாக இருப்பது மட்டுமல்லாமல் தொற்றுநோய்க் காரணிகளை எதிர்த்துப் பாதுகாப்பு அடுக்கினை வழங்குவதும் ஆகும். மாதுளைப் பழமானது உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்” (Antioxidants), நுண்ணுயிர் எதிர்ப்பு (Antimicrobial) மற்றும் அழற்சி எதிர்ப்புகளைக் (Anti-inflammatory) கொண்டிருப்பதனால் பிரகாசமான மற்றும் பொலிவான சருமத்தினை ஊக்குவிக்கிறது. பல ஒப்பனை மற்றும் தோல் பராமரிப்பு பொருட்களின் உற்பத்தியாளர்கள் இப்போது தங்கள் பொருட்களில் மாதுளைச் சாற்றினைச் சேர்த்து தயாரிக்கின்றனர். உலர் சருமம் வயதானப் பகுதிகள் மற்றும் உயர் நிறப்பிரிகை போன்ற சருமப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தோல் பராமரிப்பு பொருட்களில் மாதுளைப் பழத்தின் சாறு சேர்க்கப்பட்டுள்ளது. மாதுளை பழச் சாறு அல்லது ஒரு நடுத்தர மாதுளையானது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நிறைந்த அளவில் வழங்குகின்றன.

1. தோல் அழற்சி பிரச்சனையிலிருந்து விடுதலை:

மாதுளைப் பழம் தோல் அழற்சிக்காக மேற் கொள்ளப்படும் சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாதுளையானது எந்தவொரு மருந்தகங்களிலும் கிடைக்கும் களிம்புகளை விடத் தோல் அழற்சிக்கு மேலான பயன்களைத் தருகிறது. பழத்தில் பாலிபினால்கள் மற்றும் பல சேர்மங்கள் உள்ளன. இவை சிறிய வெட்டுக்கள் மற்றும் காயங்களைக் குணப்படுத்த உதவுகின்றன. மாதுளைப் பழங்களை உட்கொள்ளுதல் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாகக் குணமைடையச் செய்வதை உறுதிப்படுத்துவதற்காக மாதுளைப் பழத்தின் சாற்றினை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஏற்பட்ட காயங்கள் சிறிய வெட்டுக்களை மிக விரைவில் குணப்படுத்துகின்றன. எனவே தோல் அழற்சியினைக் குணப்படுத்துவதில் மாதுளைப் பழத்தின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

2. உலர் சரும பிரச்சனைக்குத் தீர்வு:

உலர் சருமத்தைக் கொண்டுள்ளப் பெண்களுக்கு மாதுளைப் பழம் ஒரு வரமாக் அமைகிறது. மாதுளைப் பழத்தின் விதைகள் ஒரு சிறு மூலக்கூறு அமைப்பினைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மூலக்கூறு அமைப்பானது தோலில் ஊடுருவி எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைய வழிவகை செய்கிறது. எனவே இப்பழம் உலர்ந்த மற்றும் சீரற்ற தோலுக்கு அழகு சேர்க்கிறது. மேலும் சருமத்திலிருந்து ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுத்து ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

3. பாக்டீரியா எதிர்ப்பு:

மாதுளைப் பழத்தில் ப்யூனிசிக் அமிலம் (Punicic acid) உள்ளது. இந்த அமிலமானது பாக்டீரியாவைத் தொடர்ந்து நீக்கி விடும். மேலும் நாள் முழுவதும் ஈரமான மற்றும் ஆரோக்கியமான சருமம் இருபதை உறுதி செய்கிறது. இப்பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு (Antibacterial) இருப்பதால் பாக்டீரியாவின் தொற்றிலிருந்து முழுமையாகச் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.

4. வயதான தோற்றத்திற்கான எதிர்ப்பு:

மாதுளை வயதான தோற்றத்திற்கானப் பண்புகளை, தோலின் உட்புறமும், வெளிப்புறமும் புத்துணர்ச்சி ஊட்டுவதின் மூலம் எதிர்க்கிறது. சூரிய ஒளியில் நமது உடலின் தொடர்ந்து வெளிப்படுவதன் காரணமாக ஏற்படும் வயதான தோற்றாத்திற்கான அறிகுறிகளைக் குறைப்பதன் மூலம் முன்கூட்டிய வயதான தோற்றத்திலிருந்து நம்மை நல்ல உணவுகள் பாதுகாக்கின்றன. எனவே மாதுளை சருமத்திற்கு அழகு சேர்க்கும் கொலஜனை பராமரிக்க உதவுகிறது. மேலும் நம்முடைய சருமத்தினை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைக்கிறது. கொலாஜன் என்பது சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் நிலைத்தன்மையையும் பராமரிக்கும் அடிப்படைக்கூறு ஆகும். மாதுளைப் பழங்களில் சில கலைவைகல் உள்ளன. இக்கலவைகள் கொலாஜன் உடைக்கப்படுவதைத் தடுத்து தோலினை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது. மேலும் இந்த மாதுளம் பழத்தில் உள்ள கலவைகள் ஃபைப்ரோபிளஸ்ட்ஸ், எலாஸ்டின் மற்றும் கொலாஜனை உற்பத்தி செய்யும் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் மூலம் தோல் மென்மையாக மற்றும் மிருதுவாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே தோலின் மீது மாதுளை எண்ணெய் தடுவுவதன் மூலம் சுருக்கங்கள் உருவாகுதல் மற்றும் விரைவில் முதுமையடைவதல் தொடர்பான அறிகுறிகளையும் குறைக்கிறது.

5. உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் அதிகமுள்ள பழம் மாதுளை பழம்:

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (Antioxidants) இயற்கையாகவே இலவச மூலக்கூறுகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் அனைத்துத் தாவரங்களிலும் காணப்படுகின்றன. இத்தகைய உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் உடலின் உள்ளிருந்து வேலை செய்கின்றன. மேலும் நாம் பயன்படுத்தப்படும் எந்த உலர்தன்மை நீக்கிகள் (Moisturizer) அல்லது சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் களிம்புகளை (Creams) விட மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இலவச அடிப்படைக் கூறுகள் தோல் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கும் சாதாரன உயுரணுக்களின் செயல்பாடுகளைத் தடுக்கின்றன. மாதுளைப் பழங்களில் உள்ள அந்தொசியனின் (Anthocyanin) மற்றும் நீரோட்டங்கள் சருமத்திற்கு எதிரான அடிப்படைக் கூறுகளை எந்தவொரு அறையில் வளர்வதையும் தடுக்கின்றன. இதன்மூலம் சருமம் மென்மையாகவும் உறுதியாகவும் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் சருமத்தின் ஆரோக்கியமான செல்களை அழிப்பதிலிருந்து வயதாவற்கான அடிப்படை மூலக்கூறுகளைத் தடுக்கின்றன. மேலும் மாதுளைப் பழத்தில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கின்றன.

6. இயற்கையான முகத் தேய்ப்பான்:

முகத்தின் தோலிற்கு மாதுளைப் பழத்தினை முகத் தேப்பானாகக் (Facial Scrub) கூடப் பயன்படுத்தலாம். செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட முகத்தேய்பான்களை விட மாதுளம் பழத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட முகத் தேய்ப்பான் மிக நல்ல பயன்களைக் கொடுப்பதோடு எந்தவித பக்கவிளைவுகளையும் தருவதில்லை.
செய்முறை: ஒரு தேக்கரண்டி மாதுளைப் பழ விதைகள், பழுப்பு சர்க்கரை ஒரு தேக்கரண்டி, இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆனைக்கொய்யா எணணெய் (Avocado oil) பயன்படுத்தி முதக் தேப்பானை உருவாக்கலாம்.
இந்த முதக் தேய்ப்பானைத் தினமும் பயன்படுத்துவதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்பட்டு சுத்தமான மற்றும் ஒளிரும் சருமத்தினை ஒரு சில நிமிடங்களில் பெறலாம். உடற்சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைப் போக்குவதற்கு மாதுளம் பழத்தின் விதைகளை அரைத்து உடல் தேய்ப்பானாகப் (Body scrub) பயன்பத்தலாம்.  

7. சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு:

சூரியக் கதிர்களிலிருந்து வெளிப்படும் புற ஊதாபிகதிர்வீச்சு (Ultraviolet B) புகைப்பட வயதாகுதல் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற தோல் நிலைமைகளுக்கான முக்கியக் காரணம் என்று அறியப்படுகிறது. கடுமையான சூரியக் கதிர்களின் விளைவுகளை மாற்றியமைப்பதற்கு மாதுளைப் பழங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மாதுளைப் பழம் சூரியனிலிருந்து பாதுகாக்கும் கலவைகளைக் கொண்டுள்ளது. இதனால் சருமத்தின் தீவிரமான சேத்த்திலிருந்து பாதுகாக்கிறது. இவற்றில் எலியாகிக் அமிலம் (Ellagic acid), உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளான பாலிபினோல் (Polyphenol) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தோல் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கிறது. தோலி நிலைகளான் நிறமி மற்றும் வயதான இடங்கள் போன்றவற்றைத் தடுப்பதில் மாதுளை மிகுந்த பயனளிக்கிறது. மேலும் இது சூரியனால் ஏற்படும் எரிச்சல் மற்றும் சூரியனால் ஏற்படும் சேதத்திற்கான அறிகுறிகளையும் குறைக்கப் பயன்படுகிறது.

8. மாதுளை பழத்தின் மூலம் மென்மையான சருமம்:

மாதுளைப் பழத்தில் இரும்புச் சத்து அதிக அளவு செறிவுடையதாக‌ உள்ளது. எனவே இப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் பகுதிப் பொருளாக இருப்பதால் ஆக்சிஜனின் போக்குவரத்திற்கு உதவுகிறது. ஆக்சிஜன் அனைத்து சரும உயிரணுக்களையும் சென்றடைவதினால் சருமம் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளைமையாகவும் இருக்கச் செய்கிறது. மாதுளை பழச் சாற்றில் ஒரு பருத்திப் பந்தினை தோய்த்து முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் தோலில் உள்ள கரும்புள்ளிகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் மாதுளைபழச்சாறு கரும்புள்ளிகளைக் கட்டுப்படுதுகிற மிகச் சிறந்த டோனர் (முக்ப்பூச்சு) (Facial Toner) ஆகச் செயல்படுகிறது.

9. காயங்களை ஆற்றுதல்:

மாதுளம் பழம் புண்கள் மற்றும் காயங்களைத் துரிதமாகக் குணப்படுத்துவதற்கு உதவுகிறது என்று பல ஆய்சு முடிவுகள் தெரிவிக்கின்றன. மாதுளையின் விதைகள் காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவ பண்புகள் சிறந்த அளவில் பெற்றுள்ளன. இத்தகைய குணப்படுத்தும் பண்புகள் சருமத்தின் வெளிப்புற அடுக்கினைப் பாதுகாக்கவும் மற்றும் உயிரணுக்களின் மருஉருவாக்கத்திலும் உதவி செய்கிறது. இவ்வாறு காயங்களின்போது இறந்த உயிரணுக்களுக்குப் பதிலாகப் புதிய உயிரணுக்கள் உருவாகுவதின் மூலம் காயங்கள் மற்றும் புண்கள் விரைவில் குணமடைகின்றன.

10) முகப்பரு பிரச்சினைக்குத் தீர்வு:

உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றாத்தாழ்வின் காரணமாகத் தான் முகப்பரு ஏற்படுகின்றது. மாதுளைப் பழமானது முகப்பரு ஏற்படுவதன் மூலக்காரணத்தை அகற்றுவதன் மூலம் முகப்பருவினைக் குறைக்கிறது. மேலும் இப்பழம் உடலில் உள்ள செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்து இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. சருமத்தில் உள்ள செபேசியஸ் சுரப்பியானது எண்ணெய் சுரப்பியான சீபம் என்ற பொருள் சுரப்பதற்குத் தேவையான வைட்டமின் சி, மாதுளைப் பழத்தில் அதிக அளவில் உள்ளது. மாதுளை வடுக்களின் தோற்றத்தைக் குறைப்பதற்காகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திசுக்களை உருவாக்குகிறது. நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாதுளை பழச்சாற்றினைத் தேய்ப்பதன் மூலம் முகப்படுக்களை அகற்றலாம்.

11) 15% துத்தநாகம் உள்ள பழம்:

மாதுளை துத்தநாகத்திற்கு (Zinc) ஒரு நல்ல ஆதாரமாக விளங்குகின்றது. இந்தத் துத்தநாகம் தோலின் ஆரொக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் தேவைப்படுகிறது. துத்தநாகம் முதிர்ந்த தோல் திசு வளர்ச்சி மற்றும் காயத்தினைக் குணப்படுத்துதல் போன்றவற்றிற்கு உதவும் முன்னோடி உயிரணுக்கள் மற்றும் அடிப்படை உயிரணுக்களின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் துத்தநாகம், சருமத்தின் சேதத்திலிருந்துப் பாதுகாக்கும் ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருளை செயல்படுத்துவதற்கு உதவி செய்கிறது. ஒரு நடுத்தர அளவுள்ள மாதுளை 1.1 மில்லிகிராம் அல்லது தினசரி பரிந்துரைக்கப்படும் அளவுகளில் சுமார் 15 சதவீதம் துத்தநாகத்தினைக் கொண்டுள்ளது.

12) வைட்டமின்’:

சருமத்தின் ஆரோக்கியத்தைப் பரமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின்மாதுளைப் பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு குவளை புதிய மாதுளைப் பழச்ச்சாற்றில் 1.8 மில்லிகிராம் அல்லது தினசரி பரிந்துரைக்கப்படும் மதிப்புகளில் 14 சதவீதம் வைட்டமின்யினைக் கொண்டுள்ளது.

13) செம்பு:

மாதுளை ஓரளவு செம்பினைக் கொண்டுள்ளது. செம்பானது (Copper) மெலனின் எனப்படும் தோல் நிறமியினை உற்பத்தி செய்வதற்குத் தேவையானக் கனிமங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மெலனின் எனப்படுவது ஒரு வகையான நிறமி ஆகும். இந்நிறமி தான் கண்கள், தோல் மற்றும் முடிகளுக்கு நிறத்தினைக் கொடுக்கிறது. மேலும் இது சருமத்திற்கு இயற்கையான சூரிய ஒளி பாதுகாப்பினை வழங்குகிறது. ஒரு குவளை மாதுளைப் பழச்சாறு செம்பு உட்கொள்ளுதலை ஏறத்தாழ 500 மைக்ரோ கிராம்கள் வரை ஊக்கபடுத்துகிறது. அல்லது தினசரி பரிந்துரைக்கப்படும் அளவுகளில் சுமார் 53 சதவீத்தினை அளிக்கிறது.

மாதுளையின் கூந்தலுக்கானப் பயன்கள்:

இந்த இனிமையான மாதுளை பழம் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் இப்பழம் உங்கள் முடிக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. மாதுளைப் பழம் முடிக்கு வழங்கும் நன்மைகள் சில பின்வருமாறு:

14) முடிவளர்ச்சி மற்றும் உறுதிக்கான வைட்டமின்கள்:

மாதுளைப்பழம் வைட்டமின்மற்றும் வைட்டமின்கேஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் முடிக்கு உகந்த ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கின்றன. வைட்டமின்கேமுடியின் வேர்க்கால்களை வலிமை அடையச் செய்கிறது. மேலும் வைட்டமின்உச்சந்தலையினை அதிக முடியினைத் தயாரிப்பதற்காக ஊக்குவிக்கிறது.

15) இள நரைக்குத் தீர்வு:

திசுக்களின் ஆக்சிஜனேற்றம் அடிக்கடி தடைபடுவது முன்கூட்டியே தலைமுடி சாம்பல் நிறமாவது அல்லது இளநரையை ஏற்படுத்துகிறது. மாதுளையில் உள்ள‌ உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் ஆக்சிஜனேற்றத்தைத் தூண்டுகிறது. இதனால் மாதுளை திசுக்களின் அரிப்பைத் தடுக்கிறது. மேலும் மாதுளம் பழம் இந்த ஆக்சிஜனேற்றத்தின் காரணமாக முன்கூட்டியே முடி சாம்பல் நிறமாவது அல்லது இளநரை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது.

16) பொடுகு மற்றும் பூஞ்சை தொல்லைக்குத் தீர்வு:

உச்சந்தலையிலிருந்து உலர் மற்றும் சீரற்ற துண்டுகளை உருவாக்கும் மாலசீசியா (Malassezia) எனப்படும் ஒரு வகைப் பூஞ்சையை ஏற்படுத்துகிறது. மாதுளைப் பழங்களில் உள்ள செலினியம் இந்தப் பூஞ்சையைக் கொல்ல உதவுகிறது. தலையில் உள்ளப் பொடுகினை அகற்றி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறாது. மேலும் தலையின் மேற்பகுதியில் உள்ள குப்பைப் போன்றப் பொருட்களை அகற்றுவதற்கும் உதவுகிறது.

17) அழற்சி மற்றும் வலுக்கைத் தலைக்குத் தீர்வு:

மாதுளையில் உள்ள மெக்னீசியம் தலையில் ஏற்படும் அழற்சியினைத் தடுக்கிறது. மேலும் உச்சந்தலையில் ஏற்படும் நிலைமைகளானப் பொடுகு, எக்ஸ்மோ மற்றும் சோரியாசிஸ் போன்றவற்றிற்கு மெக்னீசியம் ஒரு சிகிச்சைப் பொருளாக அமைகிறது. மேலும் மாதுளையில் உள்ள மெக்னீசியம் வளர்சிதை மாற்ற நோய்த்தாக்கத்தினை மேம்படுத்துவற்கு உதவுகிறது. மேலும் இது மனிதர்களுக்கு முன்கூட்டியே தலையில் வழுக்கை ஏற்படுவதனைத் தடுக்கிறது. கடுமையான முடி உதிர்வதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மன அழுத்தம் ஆகும். மாதுளையில் மெக்னீசியம் எனப்படும் ஒரு கனிமத்தைக் கொண்டுள்ளது. இக்கனிமம் உடலின் கார்டிசோல் அளவினைக் குறைக்கப் பயன்படுகிறது.

18) துத்தநாகம் ஊட்டச்சத்து கிடைக்கிறது:

மாதுளையில் துத்தநாகம் எனப்படும் ஒரு ஊட்டச்சத்து உள்ளது. இவை உச்சந்தலையில் சீபம் என்றப் பொருளிற்கான உற்பத்தியில் தேவையான ஒன்றாக உள்ளது. மேலும் துத்தநாகம் உச்சந்தலையின் உயிரணுக்களை மீளுருவாக்கம் அடைவதை ஊக்குவிக்கிறது. முடிக்கற்றை மற்றும் முடியின் வேர் நீரேற்றமடைவதற்கு உதவி செய்கிறது.

19) வைட்டமின்சிபயன்:

மாதுளைப் பழத்தில் உள்ள வைட்டமின்சிமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவி செய்கிறது. மேலும் உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடியின் இயற்கையான நிறத்தினைப் பாதுகாக்க உதவுகிறது. முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகக் கொலாஜன் என்று அழைக்கப்படும் இணைப்புத் திசுக்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. மேலும் வைட்டமின்சிமுடி உதிர்தல், முடி பலவீனமாதல் அல்லது மெலிதாகுவதற்குக் காரணமான அடிப்படைக் கூறினை முற்றிலும் அழிக்கிறது.

20) இரும்புச் சத்து:

முடியின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தினை இரும்புச்சத்து மாதுளையில் அதிக அளவில் உள்ளன. முடிக்குத் தேவையான அளவு இரும்புச்சத்துக் கிடைக்கவில்லை என்றால் முடியானது வலுவிழந்து முடி இழப்பு ஏற்படுகிறது. இரும்புச்சத்துக் குறைபாடு பெரிய அளவில் ஏற்படுவதன் மூலம் தலைமுடியில் மந்தமான மற்றும் உயிரற்றா நிலை ஏற்படலாம். இதனால் கடுமையான முடி இழப்பு ஏற்படலாம். உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதன் மூலம், இரும்புச்சத்து முடி வளர்ச்சியினை அதிகரிக்கிறது.

21) முடி நுண்குமிழை வலிமைப்படுத்துகிறது:

மாதுளைப் பழத்தை உணவில் எடுத்துக் கொள்வது முடி நுண்குமிழை (Hair follicle) வலுவூட்டுவதற்குப் பயன்படுகிறது. மாதுளை விதை எண்ணெய் பீயூனிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இதன்மூலம் முடி ஆரோக்கியமானதாகவும் வலுவானதாகவும் உள்ளது. மேலும் இது முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தினை அதிகப்படுத்துகிறது.

மாதுளையின் உடல் ஆரோக்கியத்திற்கானப் பயன்கள்:

ஊட்டச்சத்து இயக்கங்களின் முன்னனியில் மாதுளை ஒருஅதிசயப்பழம்என்று அழைக்கப்படுகிறது. இப்பழமானது ஆரோக்கியமான மற்றும் உகந்த வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்களை உள்ளடக்கியது. மாதுளையின் மூலம் ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் பலன்கள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

22) நல்ல செரிமானம்:

செரிமானத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்சைம்களை உற்பத்தி செய்வதில் மாதுளை முக்கியப் பங்கினைக் கொண்டுள்ளது. மாதுளைப் பழச்ச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், தலைசுற்று களைப்பு மற்றும் சோரிவினைக் குணப்படுத்துகிறது. மேலும் இப்பழம் அதிகப்படியான அமிலத்தன்மைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்பழத்தில் காரத்தன்மை நிறைந்துள்ளதால், அமிலத்தன்மையை சீராக்க உதவுகிறது. மாதுளைப் பழம் அல்லது மதுளம் பழச்சாற்றினை ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் ஒரு மாதத்திற்குச் சாப்பிட்டு வந்தால் நேர்மறையான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

23) மூலம் நோய்க்கு இயற்கை மருந்து மாதுளம் பழம்:

மூல வியாதிக்கான சிகிச்சையில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிச்சயமாகத் தினமும் காலையில் மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்குத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பழச்சாற்றில் உப்பிற்குப் பதிலாகத் தேனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்ளுவதன் வழியாக மூல நோயின் தீவிரம் குறையலாம். உலர்ந்த மாதுளைப் பட்டையின் தூளினை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு அதனுடன் மோர் கலந்து தடவுவதன் வழையாக மூல நோயினால் இரத்தப்போக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எனவே மூல நோயின் தீவிரத்தைக் குறைக்க மாதுளைப் பழத்தினை நாடுவதே நலம் பயக்கும்.

24) உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் மிகுதியாக உள்ள மாதுளை பழம்:

மாதுளைப் பழத்தின் நன்மைகளில் ஒன்று இந்தப் பழத்தில் உள்ள நம்பமுடியாத அளவில் காணப்படும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (Antioxidants) தான். மாதுளைப் பழமானது பச்சைத் தேநீர் அல்லது பசும் தேநீர் (Green tea) மற்றும் சிவப்புத் திராட்சை மதுவை (Red Wine) விட மூன்று மடங்கு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளைக் கொண்டுள்ளது. இவற்றில் மூன்று வகையான பாலிபினால்களைக் கொண்டுள்ளது. அவை நோயெதிர்ப்பு மண்டல அமைப்புக்கு ஆதரவளிக்கக் கூடியதும் மேலும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கக் கூடியதுமான அந்தொசியனின் (Anthocyanin), எல்லாஜிக் அமிலம் (Ellagic acid), மற்றும் டானின் (Tannin) போன்றவையாகும். அதிக அளவு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் பாலிபினால்கள் உடலில் நோய்கள் ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் கூறுகளைக் குறைக்கப் பயன்படுகிறது. எனவே மாதுளைப் பழத்தின் மூலம் எண்ணற்ற உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் பாலிபினால்கள் நம் உடலுக்கு நேரடியாகக் கிடைக்கின்றன.

25) நார்ச்சத்து அதிகம்:

மாதுளையான கரையத் தக்க மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுக்கு மிகப்பெரிய நிறைவான ஆதாரமாக உள்ளது. இவை மென்மையான செரிமானத்திற்கும் குடல் இயக்கங்களை எளிமையாக்குவதற்கும் உதவுகிறது. 100 கிராம் மாதுளை பழம் 4 கிராம் நார்ச்சத்தினை வழங்குகிறது. இப்பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் காரணமாக எடை குறைப்புத் திட்டங்களில் ஊட்டச்சத்து நிபுணர்களால் இப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் உடலைப் போதுமான அளவில் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆரோக்கியமான நன்மைகளை அனுபவிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு குவளை மாதுளைப் பழச்சாறு அல்லது நடுத்தர அளவிலான மாதுளைப் பழத்தைச் சாப்பிட்டு வர வேண்டும்.

26) மார்பகப் புற்றுநோய்க்குத் தீர்வு:

மாதுளைப் பழத்தில் உயிர்வளி ஏற்ற எதிர்ப்பொருளான எல்லாஜிட்டனின் (Ellagitannin) உள்ளது. இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமான ஈஸ்ட்ரோஜனைத் தடுக்கிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் உருவாகுவதற்குப் பயன்படும் அரோமடேசைத் (Aromatase) தடுக்கிறது. இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபயாத்தைக் குறைக்கிறது.

27) கர்ப்பத்தில் உதவி:

மாதுளை பழமானது பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்சி’, ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்துப் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. எனவே இப்பழம் கருவுற்றப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், உயிரணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மாதுளைப்பழம் பயன்படுகிறது. கர்ப்பகாலத்தின்போது பருகப்படும் மாதுளைச் சாறு தசைப்பிடிப்புகள் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கப் பயன்படுகிறது. மேலும் மாதுளைப் பழமானது குழந்தையின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் மூளை சேதத்தின் அபாயத்தைக் குறைப்பதாக அறியப்படுகிறது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் மாதுளை பழத்தை உண்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

28) இரத்த சோகையிலிருந்து விடுதலை:

மாதுளைப் பழங்களில் உள்ள அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையினைக் குணப்படுத்துகிறது. வழக்கமான முறையில் மாதுளைப் பழங்களை உண்பது இரத்தக் குழாய்களில் இரத்த உறைக் கட்டிகள் உருவாகுவதைத் தடைசெய்கிறது. எனவே மாதுளைப் பழங்களை உண்டு இரத்தசோகையிலிருந்து விடுபடலாம்.

29) செரிமான மண்டலம்:

மாதுளை பழச்சாற்றில் செரிமானத்திற்கு உதவக்கூடிய, நுண்ணுயிர்ப் பண்புகள் கொண்ட என்சைம்கள் உள்ளன. மேலும் இப்பழம் மூலநோய், குமட்டல், வயிற்றுப் போக்கு மற்றும் குடல் புழுக்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறாது. மாதுளைப் பழச்சாற்றினை அருந்துவதன் மூலம் மலச்சிக்கலைக் குணப்படுத்தலாம். மாதுளைப் பழத்தை உண்பதனால் செரிமான மண்டலம் வழுவடைகிறது.

30) புரோஸ்டேட் புற்றுநோய்:

மாதுளைப் பழஙக்ள் குறிப்பிட்ட புரோஸ்டேட் ஆன்டிஜென்களைக் குறைப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. மாதுளைப் பழச்சாறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மற்றும் புற்றுநோய் செல்கள் பரவுவதற்கான ஆபத்தையும் குறைக்கிறது. மாதுளைச் சாற்றில் உள்ள உயர் பைட்டோகெமிக்கல் (Phytochemical) ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

31) பல் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு:

குறிப்பிட்ட பல் நிலைமைகளின் சிகிச்சையில் மாதுளை சிறந்த பயனளிக்கிறது. மாதுளைப் பழச்சாற்றில் உள்ள அதிக அளவு பாலிபினோல் மற்றும் பிளவனாய்டுகள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய கலவையாக இருப்பதால் வாய் துர்நாற்றத்தினை நீக்குகிறது. மேலும் சிறந்த வாய் கழுவியாகப் (Mouthwash) பயன்படுகிறது. மாதுளைப் பழச்சாற்றினைத் தொடர்ந்து குடித்து வருவதனால் பல் தகடு (Dental Plaque) உருவாகுவது தடுக்கப்படுகிறது. மேலும் மாதுளைச் சாறு பாக்டீரியாவினால் பற்களில் ஏற்படும் துவாரங்கள் மற்றும் ஈறு அழற்சியினை குணப்படுத்த உதவுகிறது. எனவே மாதுளையையும், மாதுளைச் சாற்றினையும் தினமும் பருகி, வாய் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

32) இதயக் குழலிய நோயிலிருந்து பாதுகாப்பு:

இதயக் குழலிய நோய் (Cardiovascular disease) அல்லது இதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதுதான் இந்த அற்புதமான மாதுளைப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளில் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். தினமும் ஒரு குவளை மாதுளைப் பழச்சாறு குடிப்பது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தின் பணிச்சுமையைக் குறைக்கிறது. மாதுளை இரத்தத்தை மெலிதாக்கி தமனிகளில் தகடு ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் பெருந்தமனி தடிப்பு (Atherosclerosis) ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. மாதுளைப் பழச்சாறு அருந்துவதனால் உடலில் உள்ள குறையடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பின் (கெட்ட கொழுப்பு) அளவினை மிகையடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பினை (நல்ல கொழுப்பு) பாதிக்காத வகையில் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாதுளைச் சாறு மற்றும் விதைகள் சாப்பிடுவதனால் இதயத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது.

33) அல்சீமர் நோயின் எதிரி:

அல்சீமர் நோய் வளர்வதைத் தடுப்பதில் மாதுளை மிகுந்த பயனளிக்கிறது. ஒரு ஆய்வகத்தில் சில எலிகள் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. பாதி எலிகளுக்கு மாதுளைப் பழச்சாறு வழக்கமான அளவில் வழங்கப்பட்டது. மீதி எலிகளுக்குச் சாதாரண உணவு வழங்கப்பட்டது. மாதுளைச் சாறு உணவாக அளிக்கப்பட்ட எலிகள் அல்சீமர் நோய்க்கு முக்கிய பங்களிப்பாளராகக் கருதப்படும் அமிலாய்டு பிளாக்கைக் குறைந்த அளவில் உருவாக்கி இருந்தனர். மேலும் இந்த எலிகள் மனநலப் பணிகளைச் செய்வதைல் மேம்பட்ட திறனுடனும் மனபுதிர்களுக்கு சிறப்பான முறையில் பதிலளிக்கவும் செய்கிறது.

34) எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

ஆஸ்டியோபோரசிஸ் எனப்படும் எலும்புருக்கி நோயினால் பதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளை உதவி செய்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் வெளியிடுகின்றன. மாதுளையில் உள்ள நொதிகள் குருத்தெலும்புகள் சேதமடைவதையும் இதனால் கீழ்வாதம் ஏற்படுவதையும் தடுக்கின்றன. மேலும் உடலில் உள்ள அழற்சியின் எதிர் விளைவுகளைத் தடுக்கிறது. இதனால் மாதுளைப் பழம் எலும்புப் புரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன் அளிக்கிறது.

35) புற்றுநோயை விரட்டும் மாதுளம் பழம்:

மாதுளைப் பழமானது புரோஸ்டேட் தோல் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்று நோய்களுக்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மாதுளையில் உள்ள உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள், புற்றுநோய்க்குக் காரணமான அடிப்படைக் கூறுகளை அழிப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மாதுளையின் வகைகள்:

கண்டதாரி, மஸ்கட் ரெட், தோல்கா, ஸ்பேனிஷ் ரூபி, பிடானா, ஆலந்தி, காபூல், மற்றும் வெள்ளோடு போன்றவை மதுளைப் பழ வகைகளின் பெயர்கள் ஆகும்.
இந்த ரகங்கள் அனைத்தும் தனக்கென்று ஒரு தனிப்பட்ட சுவையினையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. மாதுளை பெனிகேஸஸ் குடிம்பத்தைச் சேர்ந்த பெர்ரி வைகையின் உறுப்பினராக உள்ளது. உணவு, சாறு, சுவை மற்றும் வண்ணம் போன்றவற்றிற்காகப் பயிரிடப்படும் மிகவும் பிரபலமானப் பழங்களில் மாதுளையும் ஒன்று. பொமேகிரனட் என்று அழைக்கப்படும் ஆங்கில வார்த்தையானது பிரெஞ்சு வார்த்தைகளானபொம்மே கர்னேட்டேஎன்பதிலிருந்து பெறப்பட்டதாகும். அதாவது இதற்கு விதையுள்ள ஆப்பிள் என்று பொருள். மாதுளைப் பழமானது கிமு 1600ல் எகிப்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு இப்பழத்தினை ஒரு முக்கிய உணவு ஆதாரமாக் மட்டுமில்லாமல் இதன் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதுளைப் பழம் ஓவியங்கள் மற்றும் எகிப்திய கல்லறைகள் ஆகியவற்றிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சித்தரிக்கப்படுபவை மரணத்திற்குப் பிறகு வாழ்க்கைக்கு அடையாளமாக இருந்து வருகிறது. நிறமுள்ள விதைகள் சில கலாச்சாரங்களில் கருவுறுதல், சுகாதாரம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாதுளைப் பழம் பல கலாச்சாரங்களில் திருமண சடங்குகலில் பயன்படுத்தப்படுகிறது. சீனர்களின் குறியீட்டில் மாதுளையானது அதன் பிரகாசமான தோல் மற்றும் சுவையான விதைகளின் மூலம் கருவுறுதல் மற்றும் செழுமையின் சின்னமாக விளங்குகிறது.
ஒவ்வொரு மாதுளைப்பழமும் ஏறத்தாழ 840 விதைகளைக் கொண்டுள்ளன. மாதுளையின் உட்புற சவ்வுகள் மற்றும் தோல் பகுதிகள் அவற்றில் நிறைந்துள்ள அமைலத்தன்மையின் காரணமாக யாரும் உட்கொள்வதில்லை. ஆனால் மாதுளைப் பழத்தின் தோல் மற்றும் உட்புற சடைப்பகுதி தோல் பராமரிப்புப் பொருட்களின் முக்கிய மூலப் பொருளாக ஒப்பனை நிறுவனங்கள் பலவற்றில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றன. மாதுளைப் பழத்தின் உள்ளே வெள்ளையான பஞ்சு போன்ற சவ்வுகளால் பிரிக்கப்பட்டுள்ளன. பழத்தின் ஒவ்வொரு பிரிவும் இனிப்பான சாறு நிறைந்த உண்ணக்கூடிய இளஞ்சிவப்பு அரைகளுடன் நிரம்பியுள்ளது. மாதுளையின் சக்தியுள்ள விதைகள் மட்டுமல்லாது இலை, பழம், பட்டை, மற்றும் வேர் ஆகியவைக்கூட உண்ணக்கூடியதும் மற்றும் மருத்துவ நலன்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன.
இயற்கையாகவே இத்தனை நன்மைகளையும் மருத்துவ குணங்க்களையும் இந்த ஒரு மாதுளை பழத்தால் நமக்குக் கிடைத்துவிடுகிறது.


No comments:

Post a Comment