ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர். அதற்காகவே கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து, கண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனாலும், பலருக்கு முடி உதிர்வது குறைந்திருக்காது; சிலருக்கு ஆசைப்பட்டபடி அடர்த்தியான கூந்தலும் வளர்ந்திருக்காது. என்ன காரணம்?
முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும். மேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்று உணர்ந்து, தற்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமென்று இணையதளத்தில் தேடி அலைகின்றனர்.
உங்கள் முடியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
உங்களுக்கு எத்தனை தலைமுடி இருக்கிறது தெரியுமா? சராசரியாக, சுமார் 1,00,000.
முடி வளர்ந்துகொண்டே இருப்பதில்லை, மாறாக இரண்டு முதல் ஆறு வருடங்கள்தான் வளருகிறது. பின்னர் அது உதிர்ந்து, சிறிது இடைவெளிக்கு பிறகு அதே துளையிலிருந்து மற்றொரு புதிய முடி வளர ஆரம்பிக்கிறது. ஒரு முடியின் வாழ்நாள் காலம், முடி சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. (பக்கம் 15-ல் உள்ள பெட்டியைக் காண்க.) ஒருவருக்கு தலைமுடி சம்பந்தமாக எந்த பிரச்சினையும் இல்லாதிருந்தாலும்கூட, இந்த சுழற்சியால் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 70 முதல் 100 முடிகள் தானாகவே உதிர்கின்றன.
தலைமுடி பல்வேறு நிறங்களில் இருப்பதற்கு காரணம் என்ன? “மெலனின் என்ற கரும் பழுப்பு நிறமியின் அளவும் அது பரவியிருக்கும் விதமுமே தலைமுடியின் நிறத்தை பெருமளவு தீர்மானிக்கின்றன” என த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா விவரிக்கிறது. மெலனின் என்பது முடி, தோல், கண்கள் ஆகியவற்றில் காணப்படும் உயிரியல் நிறமியாகும். நிறமி அதிகளவில் இருந்தால் தலைமுடியின் நிறமும் கன்னங்கரேல் என்று இருக்கும். மெலனின் அளவு குறைய குறைய முடியின் நிறமும் கருப்பிலிருந்து பழுப்பு, சிவப்பு அல்லது பொன்னிறமாக மாறும். முடியில் கொஞ்சம்கூட மெலனின் இல்லையென்றால் அது வெண்ணிறத்தில் பளபளக்கும்.
பொடுகு தவிர தலைமுடி உதிர்வதும் தலைமுடி நரைப்பதும்கூட அநேகரின் கவலைக்கு காரணமாகின்றன. இனி அந்தக் கவலை எதுவும் தேவையில்லை. வீட்டிலிருக்கும் ஒரு பொருளைக்கொண்டு தலைமுடியை எளிதாக பராமரிக்கலாம். பால், எல்லார் வீடுகளிலும் இருக்கும். இந்தப் பாலைக்கொண்டு உங்களின் தலைமுடியை எளிதாக பராமரிக்க சில குறிப்புகள்.
பால்: பாலில் இரண்டு விதமான ப்ரோட்டீன் இருக்கிறது. வே( whey) மற்றும் கேசின் (caesin) இவை உங்கள் தலைமுடிக்க மிகுந்த ஆரோக்கியத்தை கொடுத்திடும். ப்ரோட்டீன் குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் தலைமுடி வலுவிலக்கும். உங்களது ஆரோக்கியத்தை பொறுத்தே தலைமுடியின் ஆரோக்கியமும் இருக்கும் என்பதால் நேரடியாக தலைமுடிக்கு ஊட்டச்சத்து ஏற்ற வேண்டும் என்று நினைக்காமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.
வலு: தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம், போதிய ஊட்டச்சத்து இன்றி தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது தான். இதனை தவிர்க்க முட்டை, தேன் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். இது தலையின் வேர்கால்களை வலுப்படுத்தும்.
முடி வளர்ச்சி: முடியை உதிராமல் தடுத்தால் மட்டும் போதாது, புதிய முடியையின் வளர்ச்சியும் நமக்கு அவசியம். பாலில் அதிகப்படியான க்ளுடமைன் எனப்படுகின்ற ஒரு வகையான அமினோ அமிலம் இருக்கிறது. இது முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
ஸ்ட்ரைட்னிங்: பாலைக் கொண்டு முடியை ஸ்ட்ரையிட்னிங் செய்ய முடியும். முக்கால் கப் பாலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். சாதாரண பால் பயன்படுத்தலாம், அல்லது தேங்காய் பால் பயன்படுத்தினால் இன்னும் சீக்கிரமாக பலன் கிடைக்கும். தலை முழுவதும் அந்தப் பாலை ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.
மசாஜ்: முடியின் எல்லா பகுதிகளிலும் பால் சேருமாறு ஸ்ப்ரே செய்து தலைக்கு மசாஜ் செய்திடுங்கள். பாலுக்கு பதிலாக பால் பவுடரையும் ஹேர்பேக்காக போட பயன்படுத்தலாம். ஒரு மணி நேரம் காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள். ஷாம்பு போட்டு தலைக்குளித்தால் பால் வாசனை வராது.
ஆயில் மசாஜ்: முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிப்பதாகும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
முட்டை அவசியம்: முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.
சீப்புகளை பயன்படுத்தவும்: சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஹேர் ட்ரையரை தவிர்க்கவும்: தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும். அதிலும் இதனை தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலர வையுங்கள்.
உருளைக்கிழங்கு மசாஜ்: முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
நறுமணமிக்க எண்ணெய்கள்: முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமானால், நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.
வெங்காயச் சாறு: வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.
பீர் வாஷ்: மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
வினிகர்: வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.
கண்டிஷனர் வேண்டாம்: கண்டிஷனர் முடிக்கு நல்லது தான். இருப்பினும் அந்த கண்டிஷனரானது ஸ்காப்பில் பட்டால், அது முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான கண்டிஷனர்களான தயிரைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
மன அழுத்தத்தைத் தவிருங்கள்: தற்போது மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அதிகம். அப்படி மன அழுத்தமானது அதிகம் இருந்தால், முடியானது ஆரோக்கியத்தை இழந்து கொட்ட ஆரம்பிக்கும். ஆகவே மன அழுத்தத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய ஆரம்பியுங்கள்.
சரியாக சாப்பிடவும்: காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.
போதிய தூக்கம்: அன்றாடம் 6-7 மணிநேரம் தூக்கமானது அவசியம். அப்படி இல்லாவிட்டால், முடியானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். எனவே தினமும் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றி வாருங்கள். முடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி...
குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல் முறைகள் இருந்தன. ஆனால், இன்றோ, தலையில் எண்ணெய்யே படக் கூடாது என்று பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்கள் அட்வைஸ் பண்ணும் அளவுக்கு இருக்கிறது. எண்ணெய் தேய்ப்பதால் பலன் உண்டா இல்லையா என்றால், சருமத்திற்கு மென்மையையும், பளபளப்பையும் கூட்டி, உடலைப் புத்துணர்ச்சியாக்குவதில் பெரும் பங்கு எண்ணெய்க்கு உண்டு. சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க எண்ணெய் நிச்சயம் உதவும். தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது.
பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும்.
குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி, வாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.
ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு எடுத்து வார ஆரம்பிக்கலாம். வாரும்போது மேலிருந்து கீழாக வார வேண்டும். இதனால் முடி அடர்த்தியாக வளரும்.
பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டை பின்னல் போடுவதால் நீளமும், அடர்த்தியும் அதிகரிக்கும்.
ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் அவசியம். ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவினால் பயத்தமாவு தேய்த்துக் குளிப்பட்டலாம். அடுத்த முறை நல்லெண்ணெய் தேய்க்கும்போது, கடலை மாவு கொண்டு குளிப்பாட்டலாம். பயத்த மாவு எண்ணெய்ப் பசையை எடுக்காமல், பார்த்துக்கொள்ளும். கடலை மாவு சுத்தமாக்கும். தலையில் இருக்கும் அடைப்புகளை நீக்கி முடி வளர்ச்சியைத் தூண்டும்.
குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டுவது, மேல் நோக்கித் தூக்கி வாருவது கூடாது. இதனால் முன் நெற்றி மேடு பெரிதாகி, முடி வளர்ச்சியைப் பாதிக்கும்.
மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்று நினைக்கிறார்கள். ஆனால், மொட்டை அடித்ததும் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், முடி வளர்வது குறைந்துவிடும். மொட்டை அடித்ததும், நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும். இல்லை எனில், குளிர்ச்சிக்காக சந்தனத்தைப் பூசுவதும் தவறு. இதனால், தலையில் செதில்கள் வந்து முடி வளர்வது தடைபடும்.
வழுக்கை விழுவதைத் தடுக்க...
வழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான். வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை. கூடுமானவரையில், வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். இந்தப் பிரச்னையால் வாழ்க்கையே இழந்தவர்கள் பலர். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது பெண்களுக்கும் இது ஏற்படுகிறது. ஆண் பெண் இருவருக்கும் முடிப் பராமரிப்பில் அக்கறையின்மை, ஸ்ட்ரெஸ் என வழுக்கைக்கு நிறைய காரணங்கள் உண்டு. உறுதியான கூந்தலுக்கு வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எனவே இந்த சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன; எந்ததெந்தச் சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியம்; எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment