உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக இருக்கும் திராட்சை பழத்தில் பல வகைகள் உண்டு என்றாலும் அதை சாப்பிடும் முறையில் உள்ளது அதன் மகத்துவம். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது. இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.
பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சை சாப்பிட்டால் அது பசியை தூண்டிவிடும். அத்துடன் வயிற்றில், குடலில் ஏதேனு கோளாறுகள் இருந்தாலும் குணப்படுத்திடும்.
பசி ( Hungry ) எடுக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும் அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பெறும் எனபார்கள். ஆனால் அந்த பசியே எடுக்காமல் இருந்தால், சிரமம் தானே!
ஆகவே பசி இல்லாதவர்கள், எடுக்காதவர்கள் திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது பசியை நன்றாக தூண்டி விடும் உணவு உண்ணவும் முடியும். மேலும் குடல் ( Intestine ) சம்பந்தமான கோளாறுகளைக்கூட குணப்படு த்தும் சக்தி திராட்சை ( Grapes )பழத்தில் அதிகளவுள்ளது என்பது வியப்புக்குரியது.
திராட்சை அல்சருக்கு அருமருந்தாக செயல்படுகிறது. வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவற்றையும் குணப்படுத்திடும். கர்ப்பிணி பெண்களுக்கு, குமட்டல், வாய்க்கசப்பு இருக்கும் நேரங்களில், திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும் திராட்சையை எடை குறைவாக உள்ளவர்கள், உடலில் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாம்பழம், திராட்சை போன்ற பழங்களை இரவில் சேர்த்துக் கொண்டால் தூக்கத்தை குறைத்து விடும். அதனால் இரவு நேரங்களில் திராட்சை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
அசிடிட்டி, அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். திராட்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது இவை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாயுத்தொல்லையை ஏற்படுத்திடும்.
No comments:
Post a Comment