Friday, 14 September 2018

மன நலம் என்றால் என்ன?

“வாழ்க்கை வெறுத்து விட்டது. வாழ்வதில் எந்தப் பயனும் தெரியவில்லை. எதுவும் மாறும் என்ற நம்பிக்கை இல்லை. எந்தப் பிடிமானமும் தெரியவில்லை. சாவதைப் பற்றி யோசிக்கிறேன்.” இப்படி எண்ணுவோர் எண்ணிக்கை பெருகிவருவது கவலை அளிக்கிறது. வாழ்வில் நம்பிக்கை இழந்து, பிடிமானம் தெரியாமல், ஒரு விளிம்பு நிலையில் மக்கள் யோசிப்பது பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் பின்விளைவு என்றும் சொல்லலாம். பொருட்களின் மதிப்பு உயர்ந்தும் மனிதர்களின் மதிப்பு குறைந்தும் ஒரு அசுர வேகத்தில் பொருட் குவிப்பில் மக்கள் ஓடுவதில் முதலில் நசுங்கிப்போவது மனித உறவுகளே. இல்லாமையில் வாழும் மக்கள் கூட்டங்கள் மரணத்தை யோசிப்பதில்லை. சாலையில் தூங்கும் மனிதர்கள் கூட நாளையைப் பற்றிய நம்பிக்கையில்தான் ஆழ்ந்து உறங்குகிறார்கள். பொருள் வசதியும் தனிமையும் கொண்டோர்தான் அதிகம் மரணம் பற்றி யோசிக்கிறார்கள்.

தற்கொலைக்குப் பல காரணங்கள். துக்க நோய், மனச்சிதைவு, ஆளுமைக் குறைபாடுகள் போன்ற மனநோய்கள், குடி, போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், குடும்பப் பிரச்சினைகள் என நிறைய உள்ளன. ஆனால் இந்த சமூகக் காரணிகளில் நகர வாழ்வின் அன்னியத்தன்மை கொண்ட வாழ்முறை முக்கியமானது.

சமூக உறவுகள் இற்றுப்போய், குடும்ப உறவுகளிலும் இடைவெளி வந்து, வேலை சார்ந்த உறவுகள் இயந்திரகதியாக இயங்கும்போது, துக்கப்படும் மனம் பிடிமானம் இன்றி தவிக்கிறது. இருத்தலியல் தத்துவத்தின் படி வாழ்க்கைக்கு என்று பெரிய அர்த்தமில்லை. நாம்தான் அதற்கு அர்த்தம் கொடுக்கிறோம். வாழ்வில் சலிப்புத்தன்மை வரும்போது குறிக்கோள் இல்லாமல் திரியும் மனம். வாழ்க்கையின் சகலத்தையும் துப்பிவிட்டு எங்காவது போகலாம் என்று தோன்றும். இதைக் குமட்டல் என்று சொல்வார்கள் இருத்தலியல் தத்துவத்தின் ஆதரவாளர்கள். எழுத்தாளர் அம்பை ‘வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை’ என்ற சிறுகதையில் அந்த மார்வாடிப் பெண் தான் வாழ்க்கை முழுவதும் எத்தனை ரொட்டிகள் சுட்டிருப்போம் என்று கணக்கிடுவார். அது போல நம் வாழ்க்கை கூட இயந்திர கதியாக, அர்த்தம் இல்லாமல் தோன்றும்.

என்ன கொடுக்கலாம்? 
ஒவ்வொருவரிடமும் கொடுக்க நிறைய உள்ளது. பெரிதாகப் பணம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை.
பார்வையற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள். உங்கள் பணியாளர் குழந்தைகளுக்குப் பாடம் எடுங்கள். உறுப்பு தானம் செய்யலாம். நீங்கள் பயன்படுத்தாத பல பொருட்களை நல்ல நிலையில் இல்லாதவருக்குக் கொடுக்கலாம். ஆலயத்தைச் சுத்தப்படுத்தலாம். முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் அன்பு பாராட்ட. தேர்வுப் பணம் கட்ட முடியாதவருக்குப் பணம் கட்டலாம். மனம் சோர்ந்தவர்களிடம் உற்சாக வார்த்தைகள் பேசலாம். ஆலோசனை சொல்லலாம்.

வசதி உள்ளவர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு நிறைய செய்யலாம். கொடுப்பது என்பது தான் முக்கியம். யாருக்கு எதைக் கொடுப்பது என்பது அவரவர் தேர்வுகள்.

கொடுப்பது துக்க நிலையை மாற்றும். துக்கம் சுய நலமான உணர்வு. எனக்கு இது இல்லையே என்ற சுய பரிதாபம் தரும் சோகம் தான் துக்கத்தில் பிரதான பகுதி. தன் மேலுள்ள சிந்தனையை மாற்றப் பிறருக்கு உதவ ஆரம்பியுங்கள். துக்கம் விலகும். புதிய நம்பிக்கைகள் பிறக்கும். பல பிடிமானங்கள் வாழ்க்கையில் உள்ளது தெரியும்.

சொந்த வாழ்வில் சோகங்கள் இல்லாதவர்கள் யார்? ஆனால் பிறரின் சோகத்தைத் துடைக்கத் துணிகையில் சொந்த சோகம் இடம் தெரியாமல் போகும். 

எல்லா உலகத் தலைவர்களும் இதை உணர்ந்தவர்கள் தான். டால்ஸ்டாய் மோசமான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்தவர். ஆனால் இலக்கியம் அவரை இளைப்பாற்றியது. தேசத்துக்கே பிதாவான காந்திஜியின் புதல்வர் ஹரிலால். அவருக்கும் காந்திக்கும் ஒரே மோதலும் முரண்பாடும்தான். ஆனால் தேசப்பணி காந்திஜியைச் சோகத்தில் ஆழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது.


நாம் யார், நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதன் பெரும்பகுதி, நாம் எப்படிக் காண்கிறோம் என்பதிலிருந்து வருகிறது. இன்றைக்கு, சமூக ஊடகங்கள் நம்மைக் 'கச்சிதமாக'த் தோன்றத் தூண்டி அழுத்தம் தருகின்றன, நம்மைத் தெரிந்தவர்களிடமிருந்து ஒப்புதல் வாங்கச்சொல்கின்றன, இதனால் நம் தோற்றத்தில் கவனம் செலுத்துவது முக்கியமாகத் தோன்றலாம். அதேசமயம், நம்மில் பெரும்பாலானோருக்கு நாம் எப்படித் தோன்றுகிறோம் என்பதில் நூறு சதவிகிதத் திருப்தி இல்லை. யாரைக் கேட்டாலும், 'என்னுடைய உடலில் இந்த மாற்றங்களைச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்' என்கிறார்கள். ஆனால், இப்படி மாற்றம் வேண்டும் என்ற நினைப்புக்கு முற்றுப்புள்ளி எது?

இதனை, உணவுடனான நம் உறவுக்கு ஒப்பிடலாம். சிலர், தாங்கள் எதைச் சாப்பிடுகிறோம் என்பதை அறிந்திருக்கிறார்கள், ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உண்கிறார்கள், ஆரோக்கியமற்ற உணவுகளைக் குறைக்கிறார்கள்; ஆனால் வேறு சிலர், இதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இஷ்டம்போல் உண்கிறார்கள். சிலர் தங்களுடைய உணவுப்பழக்கத்தை முறைப்படுத்தியுள்ளார்கள்; குப்பை உணவுகளை உண்பதில்லை. இன்னும் சிலர், ஒரு குக்கியோ ஒரு துண்டு கேக்கோ சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சிக்கூடத்தில் பலமணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள், அல்லது, அடுத்த இரண்டு நாட்களுக்குச் சாப்பிடாமலிருக்கிறார்கள், இது ஆரோக்கியமே இல்லை!  
அதேபோல், சிலருக்குத் தங்களுடைய தோற்றத்தில் ஓரிரு அம்சங்கள் பிடிப்பதில்லை, புதிதாக யாரையேனும் சந்தித்தால் அதைப்பற்றிச் சிந்தித்தபடி இருக்கிறார்கள். வேறு சிலர், அந்த அம்சங்களை மாற்றவேண்டும் என்று மிகவும் மெனக்கெடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, சிவப்பழகு க்ரீம்களைப் பூசுவது, தலைமுடிக்கு வண்ணம் பூசுவது, ஃபேசியல் செய்துகொள்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம். சிலர் இதிலேயே இன்னும் தீவிரமாகச் சென்றுவிடுகிறார்கள்: பிளாஸ்டிக் சர்ஜரி, ரைனோப்ளாஸ்டி என மருத்துவ சிகிச்சைமூலம் அழகாகப்பார்க்கிறார்கள். 

"BDD என்பது மேற்கத்திய நாடுகளை மையமாகக் கொண்ட குறைபாடு என்று ஓர் எண்ணம் இருக்கிறது. ஆனால், இது உண்மையில்லை" என்கிறார் டாக்டர் தேஷ்பாண்டே. "என்னிடம் வரும் சிலர் தங்களுடைய குறைகளைப்பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து அதிலேயே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டார்கள். ஓர் இளைஞர் தன்னுடைய ரத்தத்தை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வார்; அதில் அபூர்வமான கனிமங்கள் இருக்கின்றனவா என்று தேடுவார்; ஏனெனில், அதனால்தான் தன்னுடைய தலைமுடி நரைக்கிறது என்று அவர் நம்பினார். இன்னோர் இளம்பெண் தினமும் ஒரு மணிநேரத்துக்குமேல் ஒப்பனை செய்துகொள்வார், தன்னுடைய தழும்புகளை முழுமையாக மறைக்கும்வரை ஒப்பனை செய்வார் அவர். இவர்களில் சிலர் தாங்களே மருந்துகளைத் தேர்ந்தெடுத்து உண்கிறார்கள், நிறைய மருந்துகளைப் போட்டுக்கொள்கிறா, இது ஆபத்தான விஷயம். இது ஒரு தீவிர எண்ணமாக மாறும்போது, அந்த நபருக்கும் அவரைச் சுற்றியிருக்கிறவர்களுக்கும் இது தியரத்தைக் கொடுக்கிறது; அவர்களால் தங்கள் பணிகளைச் செய்ய இயலாதபடி தடுக்கிறது. அதுபோன்ற சூழ்நிலைகளில், உரிய உதவியைப் பெறுவது முக்கியம்." 
இந்தக் குறைபாட்டின் இயல்பு, தோற்றத்தைப்பற்றிய சிந்தனை என்பதால், இவர்கள் முதலில் அணுகும் நபர், ஒரு தோல் சிகிச்சை நிபுணராகவோ அழகுச்சிகிச்சை நிபுணராகவோ இருப்பார். பல நேரங்களில், பிரச்னையானது இந்த நிலையில் அடையாளம் காணப்படுவதில்லை, ஏனெனில், அழகுக்கலைச் சிகிச்சைக்கு முன்னால் உளவியல் அல்லது மனம்சார்ந்த வடிகட்டல் ஏதுமில்லை. இவர்கள் ஏதோ ஒரு சிகிச்சையைச் செய்துகொள்ளக்கூடும், அதன்பிறகு, 'இது எனக்குத் திருப்தியில்லை' என்று சொல்லக்கூடும். 

"எங்களுடைய சிகிச்சைகளில் சுமார் 50-60 சதவிகித முன்னேற்றம் இருக்கும் என்று எங்களால் உறுதி சொல்ல இயலும், ஆனால், 100 சதவிகித முன்னேற்றம் வேண்டும் என்று வலியுறுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அல்லது, அவர்கள் திரும்பத்திரும்ப வந்து வெவ்வேறு சிகிச்சைகளைச் செய்யச்சொல்லிக் கேட்கிறார்கள். அந்த நேரத்தில், என் மனத்தில் ஓர் எச்சரிக்கைக்கொடி உயரும், இவர்களுடைய திருப்தியின்மைக்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறதோ என்று சிந்திப்பேன். இது நம்முடைய ஒழுக்கவுணர்வைப் பொறுத்தது: கடமையே என்று சிகிச்சையைச் செய்யலாம், அல்லது, அவர்களுடன் பேசி இதைப்பற்றி விவாதிக்கலாம். துரதிருஷ்டவசமாக, அழகுச்சிகிச்சை நிபுணர்களுக்கு எந்தவிதமான ஒழுக்கச் சட்டகமும் இல்லை. ஆகவே, எந்தக் கேள்வியும் கேட்காமல் இதைச் செய்யக்கூடிய யாரையாவது அவர்கள் கண்டறிவது சாத்தியம்" என்கிறார் ஓர் அழகுக்கலைச் சிகிச்சை நிபுணர்.

ஒருவர் தன்னுடைய தோற்றத்தை மேம்படுத்த ஒரு சிகிச்சை செய்துகொண்டபிறகு, அதனால் திருப்தியடைந்துவிட்டார் என்றால், அது ஒரு பரவலான சுய மதிப்புப் பிரச்னையோடு இணைந்திருக்க வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மன நல நிபுணர்கள். அதேசமயம், அவர் பல சிகிச்சைகள் அல்லது முறைகளைப் பயன்படுத்தித் தன்னுடைய தோற்றத்தை மாற்ற முயன்றால், அதன் அடித்தளத்தில் இருக்கும் காரணத்தைக் கையாள அவருக்கு உளவியல் ஆதரவு தேவைப்படலாம். இதைச் சமாளிக்க ஒரே வழி, அழகுச்சிகிச்சை நிபுணர் அல்லது பிளாஸ்டிக் சர்ஜன் எந்தவொரு சிகிச்சைக்கு முன்பும் ஓர் உளவியல் வடிகட்டலுக்குப் பரிந்துரைக்கவேண்டும், வந்திருப்பவருடைய சூழலை நியாயமாக மதிப்பிடவேண்டும். "ஒருவர் தன்னைப்பற்றி மோசமாக உணர்கிறார், அந்த உணர்வை மேம்படுத்துவதற்காகப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள நினைக்கிறார் என்றால், அவரைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவேண்டும். இதைச் செய்தால் அவர் உண்மையிலேயே மகிழ்ச்சியாக உணர்வாரா? நெடுநாள் மகிழ்ச்சியை உணர்வாரா? இதைச் செய்தால் சரியாகிவிடும், அதைச் செய்தால் சரியாகிவிடும் என்று நம்பி ஏதேதோ சிகிச்சைகளைச் செய்துகொண்டிருப்பதும் கவலைக்குரிய விஷயம்தான், ஏனெனில், தன்னை மதித்தல் அல்லது ஒரு நேர்விதமான உடல் தோற்றம் அல்லது சுய-மதிப்பு ஆகியவற்றை உள்ளிருந்து வெளியாகப் பெறலாம், வெளியிலிருந்து உள்ளாக இல்லை" என்கிறார் பட்டாச்சார்யா.

சமூகத்தில் வாழும் ஒருவர் தனது பலங்களையும் பலவீனங்களையும் இனங்கண்டு வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களையும் அறிந்து தனக்கும் தன்னைச்சார்ந்திருப்பவர்களுக்கும் எவ்விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு தனது வாழ்க்கைக்கான முடிவுகளை தானே பெற்று முழுமையான மன ஆரோக்கியத்துடன் வாழ்வதே மனநலமாகும். ஒருவனுடைய நல்வாழ்விற்கான அத்திவாரமாகக்கருதப்படுவதே மன நலமாகும். அவனது வீடும் நாடும் பயன்மிக்கதாக செயற்படுவதற்கும் அதுவே வழிவகுக்கிறது. ஒருவனது உடல், உள்ளம், சமூகம், சூழல், ஆன்மீகம் போன்ற அனைத்திலும் சமநிலை பேண உதவுவதும் மனநலமேயாகும்.

மனநலப்பாதிப்பு ஒருவருக்கு வயது வித்தியாசமின்றி எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்படலாம். சிறு வயதிலிருந்து வயோதிபம் வரைக்குமுள்ள ஒவ்வொரு பருவங்களிலும் ஒருவன் உளப்பாதிப்பிற்கு உற்படுவான்.
உதாரணமாக,

• சிறு வயதில் பெற்றோரின் அன்பு அரவணைப்பு கிடைக்காமை
• வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகள்
• அளவுக்கு அதிகமாக வற்புறுத்துதல்
• தனக்கு வேறுபாடு காட்டுதல் என்ற உணர்வு
• தொடர்ந்து உடல் நோய்களுக்கு உட்படுதல்
• உடற் குறைபாடுகள்
• வீட்டிலும் மற்றவர்களாலும் விமர்சிக்கப்படுதல்
• கணவனால் மனைவிற்கும் மனைவியால் கணவனுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள்
• பொருளாதாரப்பிரச்சினைகள்
• சூழல் மாற்றம்
• பிரிவு
• விவாகரத்து
• மாணவர்களாயின் பாடசாலையில் நண்பர்களால் ஏற்படும் பிரச்சினைகள்
• படிக்க முடியாமை அல்லது படிப்பு வராமை
• சரியான தொழிலை தெரிவு செய்யாமை
• புகைப்பிடித்தல், போதைப்பொருள் பாவனை
• திருமணம் தாமதமாதல்
• பொருந்தாத திருமணங்கள்
• திருமணம் செய்ய வசதியின்மை
• குழந்தையின்மை
• பெற்றோரை குழந்தைகள் மதிக்காமை, கவனிக்காமை
போன்ற மேலும் பல காரணங்களினால் ஒருவரது மனநலம் பாதிக்கப்படலாம்

மேற்குறிப்பிட்ட காரணங்களினால் ஒருவரது மன நலம் பாதிக்கப்பட்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும்?

ஒருவர் இங்கு குறிப்பிட்ட ஒரு பிரச்சினையாலோ அல்லது பலவற்றாலோ தொடர்ந்து பாதிக்கப்பட்டு அவருக்கு முறையான தீர்வு கிடைக்காவிட்டால் அவர் அதைப்பற்றி பலவிடுத்தம் யோசிக்க ஆரம்பித்து பிரச்சினைகள் அதிகமாகி உள ரீதியான தாக்கங்களால் அவதிப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.

மனஉழைச்சல், மனச்சோர்வு, மன அழுத்தம், தேவையற்ற முன்கோபம், பதற்றம், உரக்கமின்மை, பயம், தெளிவற்ற எண்ணம், தான் பெருமதியில்லை என்ற உணர்வு, தற்கொலை எண்ணம், தெளிவற்ற பேச்சு, நடத்தை போன்ற உளத்தாக்கங்கள் ஏற்படலாம்.

மனத்தாக்கத்திற்கு உற்பட்ட ஒருவரின் சிந்தனை எவ்வாறு வெளிவரும்?
மனநலப்பாதிப்பிற்கு உட்டபட்ட ஒருவரது சிந்தனையில் நேர் எதிரான எண்ணங்களே அதிகமாக ஏற்பட வாய்ப்புண்டு  உதாரணமாக,
• கதறி அழ வேண்டும் என்ற எண்ணம்
• ஏன் பிறந்தேன் என்ற எண்ணம்
• என்னை புரிந்து கொள்ள இந்த உலகத்தில் யாருமே இல்லை என்ற எண்ணம்
• குழந்தைகளுக்காவதாவது வாழ்வோம் என்ற எண்ணம்
• எங்காவது போய்விட்டால் நல்லம் என்ற எண்ணம்
• தனியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்
• இறந்து விடுவது நல்லது என்ற எண்ணம்
• தனிமைப்பட்டு விடுவேனோ என்ற எண்ணம்
• யாரும் என்னைப் புரிந்து கொள்வதில்லை எனும் மனநிலை
• என் பிரச்சினைக்கு தீர்வேயில்லையா? என்ற எண்ணம்
போன்ற எண்ணங்களில் ஒன்றோ பலவோ அவர்களின் சிந்தனையில் சுழன்று கொண்டிருக்கலாம்

இன்று பலர் மனஇருக்கம் அல்லது மனஅழுத்தம் (tention or stress) என்ற வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவதைக் கேள்விப்படுகிறோம். 
இந்ந மன அழுத்தத்தை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம் அதன் அறிகுறிகள் என்ன?

மருத்துவ ஆய்வுகளின் படி இன்று நால்வரில் ஒருவருக்கு மன நலம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவை பெரிய பிரச்சினைகளாக அல்லது சிறிய பிரச்சினைகளாக இருக்கலாம். ஆனால் தனக்கு மனநலம் தொடர்பான ஒரு பிரச்சினை இருப்பதாக தெரிந்து கொண்டாலும் அதற்கு தேவையான பரிகாரம் காணாமல் அல்லது அதை இன்னுமொருவரிடம் சொல்லாமல் மனதிற்குள்ளே பூட்டிவைத்துக்கொண்டு அவதிப்படுபவர்கள் ஏறாளமாக உள்ளனர். காலம் போகப்போக அது சில சமயம் உடல் உபாதைகளாக வெளிவரும் போது அதற்கு மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியர்களை நாடிச்செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்படுகிறார்கள். அதில் மன அழுத்தம் என்பது அதிகளவில் காணப்படும் ஒரு மனத்தாக்கம் ஆகும்.

மன அழுத்தம் காரணமாக உடல் நோய்கள் அல்லது உடல் உபாதைகள் ஏற்படலாமா?

மன அழுத்தம் உள, உடல் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் ஏற்படுதல், இதய இரத்த நாள அடைப்பு ஏற்படுதல், வயிற்றுவலி அல்லது வயிற்றுப்புண்கள் ஏற்படுதல், தசை விரைப்பு, தாடைப் புண்கள், தலைவலி, இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்ற உடல் நோய்களைப்போன்று திருப்தியில்லாத மனநிலை, ஞாபகசக்தி குறைதல், கவலை, தவிப்புடன் இருத்தல், எளிதில் கோபமடைதல் போன்ற மனத்தாக்கங்களும் ஏற்படுவதாக குறிப்பிடுகிறார்கள். இவற்றுடன் எதிர்பார்ப்பற்ற தன்மை, உற்சாகமின்மை, வேலைகள் மீது மனதை ஈடுபடுத்த முடியாமை, ஏமாற்றம், அன்றாட செயற்பாடுகளில் ஆர்வமின்மை, தீர்மானம் எடுக்க முடியாமை, குற்ற உணர்வு, தன்னையே விமர்சித்துக்கொள்ளல், மற்றவர்களைவிட தான் பின்னடைந்த மனநிலை, என்பனவும் மன அழுத்தத்தின் அறிகுறிகாளாக கருதப்படுகின்றது.
இவ்வாறான மன நலம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் எவ்வாறான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்?

உளரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டால் முதலில் எமது குடும்ப வைத்தியரை நாடி அவை சம்பந்தமாக உரையாடலாம். அவர்கள் பிரச்சினையின் ஆழத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் சிகிச்சை மேற்கொள்வார்கள். மேலதிக சிகிச்சை தேவைப்படுபவர்களை மன நல ஆலோசகரிடம் அல்லது மன நல வைத்தியரிடம் அனுப்பிவைப்பார்கள். அல்லது நேரடியாகவே மனநல வைத்தியர்களை நாடி மருந்து முறையிலான சிகிச்சைகளையும் மன நல ஆலோசகார்களை நாடி மன நல ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மன நல ஆலோசனை என்றால் என்ன?
மன நல ஆலோசனை என்பது வெறுமனே ஆலோசனை கூறுவதோ, வழிகாட்டுவதோ அல்லது பிரச்சினைக்கு தீர்வு கூறுவதோ அல்ல. மன நல ஆலோசனை என்பது ஒருவர் ஏதோ ஒரு விடயத்தால் பாதிப்பிற்கு உட்பட்டு அதிலிருந்து மீள்வதற்காக வேண்டி பயன்படுத்துகின்ற உளவியல் ரீதியான செயல்முறையாகும். மனநல ஆலோசனையின் மூலம் ஒருவருடைய உள உடல் நடத்தை தொடர்பான சிக்கல்களை விஞ்ஞான ரீதியாக பகுப்பாய்வு செய்து அவருக்கு தீர்மானம் எடுப்பதற்கு துனை புரிவதும் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதும் அத்துடன் பொருத்தமானவர்களுடன் சென்று மனநலம் பெருவதற்கு உட்படுத்துவதுமாகும்.

மன நல ஆலோசகர் என்பவர் யார்?
மனநல ஆலோசகர் என்பவர் எமது மன நலம் சார்ந்த பிரச்சினைகளையெல்லாம் நொடிப்பொழுதில் தீர்த்து வைக்கும் உடனடித்தீர்வாளர் அல்ல. மருந்து மாத்திரைகளைக்கொடுத்து நோயைக் குணப்படுத்தும் மருத்துவருமல்ல. பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையின் தீர்மானங்களில் ஆதிக்கம் செலுத்தி முடிவுகளை எடுப்பவரும் அல்ல. மாறாக மன நல ஆலோசகர் என்பவர் மனதைப்பற்றி விரிவாகவும் ஆழமாகவும் அங்கீகரிக்ககப்பட்ட கற்கை நெறியொன்றை பூர்த்தி செய்தவரும் பதிவு செய்யப்பட்ட மனநல ஆலோசகர் சங்கத்தின் உறுப்பினராகவும் அவர்களின் மேற்பார்வையில் செயற்படக்கூடியவரும் ஆவார். மனநல ஆலோசகரை சந்திக்க வருபவருக்கு கதைப்பதற்கு அல்லது அவரது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான சூழலை ஏற்படுத்திக்கொடுத்து அவர் சொல்லுகின்ற விடயங்களுக்கு ஆழமாக செவிமடுத்து அவரது மனப்பாதிப்புக்களை புரிந்து கொள்வார். அத்துடன் பாதிக்கப்பட்டவருடைய பாதிப்புகளுக்கு பொருத்தமான பல்வேறு விதமான மனோ தத்துவ விதிமுறைகளை அல்லது நுற்பங்களை பயன்படுத்தி பாதிப்பிலிருந்து வெளிவருவதற்கு தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பார்.

மன நல ஆலோசகரிடம் செல்வதானால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
எமக்கு ஏற்படும் மனத்தாக்கங்களில் இருந்து மீள்வதற்கான ஒரு முறை எமது கவலைகளை ஆழமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒருவரிடம் சொல்வதாகும். ஆனால் இன்றைய சமூகத்தில் எதிர்பார்ப்புடனும் விசுவாசத்துடனும் சொல்லி பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த நன்பர்களை தேடிக்கொள்வது மிகவும் கடினமான விடயம். அதனால் தேர்ச்சி பெற்ற தொழில் சார்ந்த மன நல ஆலோசகரிடம் சென்று எமது மனநலம் தொடர்பான பிரச்சினைகளை வெளிப்படுத்தும் போது அதற்கு சரியான தீர்வை பெற்றுக்கொள்வதற்கான அவகாசம் கிடைக்கும். அத்துடன் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தகமையும் திறனும் எம்மிடமே உள்ளது என்பதை மன நல ஆலோசனையின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறே எமது திறமைகளுக்கு தக்கவாறு எதிர்கால இலட்சியங்களை அமைத்துக்கொள்ளவும் மனதை ஒரு நிலைப்படுத்தவும், சமநிலைப்படுத்திக்கொள்வதற்கும் மன நல ஆலோசனை துனைபுரியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனநல ஆலோசனையை நாடிச்செல்பவருடைய இரகசியங்கள் பாதுகாக்கப்படும். எமது நிறை குறைகளை ஒளிவு மறைவின்றி உண்மையாகவே வெளிப்படுத்த முடியும்.

நாமே எங்களை நன்கு ஆராய்ந்து எங்களுக்கே உரித்தான வழிமுறையினை தெரிவு செய்ய ஊக்குவிற்கப்படும்.

மன நல ஆலோசனையின் வகைகள் என்ன?
மன நலம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து இழகுவாக வெளிவருவதற்கு மன நல ஆலோசகரின் உதிவ தேவை என்பதை நாம் புரிந்து கொண்டோம். ஒருவனது வாழ்க்கையின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மன நல ஆலோசனைகள் தேவைப்படலாம். அதனால் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறான மனநல ஆலோசனை வகைகள் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment