Wednesday, 26 September 2018

சுத்தமான தேன் பல்வேறு மருத்துவ குணங்கள்

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை சித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம். புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம். தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம். தேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம்.

தேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம். தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம். இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம். தேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம்.
காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது.

தேனின் வகைகள்
கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், என தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மலைகளில் கிடைப்பது மலைத்தேன்.  அனைத்து மருந்துகளுடனும் சேர்த்துப் பயன்படுத்தலாம். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இந்த மலைத்தேன் கண் நோயைக் குணப்படுத்தக்கூடியது. மரத்தில், காடுகளில், குகைகளில் கூடுகட்டியிருக்கும் தேன் கூட்டில் இருந்து  கிடைப்பது கொம்புத்தேன்.  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும். பொதுவாக, தேனை நல்ல தூக்கம், தொண்டைக்கட்டு, உடல் எடை, மேனி அழகு, வயிற்றுப்புண், கொப்புளம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

மலைத்தேன்
நோய் எதிர்ப்புத் தன்மையானது இது வயிற்றுப்புண், தொண்டைப்புண், தீக்காயம் போன்றவற்றை குணப்படுத்தும். தேன் குளியல் எடுத்து வந்தால் முடி கருமையாகவும், அடா்த்தியாகவும் இருக்கும். உடல் உறுப்புகளை வலிமைப்படுத்துகிறது. மலைத்தேன் குடித்தால் நரம்பு சம்பந்தமான நோய் வராது. பேதி ஆனவா்களுகக்கு கொடுத்தால் உடனே நிற்கும். இது மலத்தை இறுக்கும் குணமுடையது.

கொம்புத்தேன்
எல்லா மருந்துகளுக்கும் இது ஒரு ஊக்கியாக பயன்படுகிறது.. விளையாட்டு வீரா்கள் சோர்வு அடையாமல் இருக்க இத்தேனை சாப்பிட்டு வரலாம். ஜலதோஷம், காய்ச்சல் அண்டவிடாம் பார்த்துக் கொள்ளும். ஒற்றைத் தலைவலிகாரா்கள் இத்தேனை சாப்பிட்டால் சரியாகிவிடும். வெட்டுக் காயத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம். தேன் அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும். குறைவாக சாப்பிட்டால் பேதி நிற்கும்.

குறிஞ்சிப்பு தேன்
சா்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஒரு தேனாகும். பெரிய நெல்லிக்காய் இத்தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

வேப்பம்பு தேன்
நோய் எதிர்ப்புத் தன்மையுடையது. சா்க்கரை அளவைக் குறைக்கிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

கதம்பப்பு தேன்
தேனில் தினமும் பல் தேய்த்தால் பல் வெண்மையாகவும், வலிமையாகவும் இருக்கும். உடல் உறுப்பு மற்றும் கல்லீரலை வலிமைப்படுத்துகிறது. கோதுமை மாவு, பன்னீா் கலக்கி முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

சிறு தேன்
கேரளா மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. தேன், குழந்தைகளுக்கு தொடா்ச்சியாக ஒரு வருடம் கொடுத்து வந்தால் உடல் உறுப்புகள் வலிமை பெரும். பிற்காலத்தில் நோயின்றி வாழலாம். இது மரப்பொந்து கிணற்று பொந்து சுவா்சந்துகளளில் வளரம் தேன் ஆகும். இதை பொந்து தேன் என்றும் அழைப்பார்கள்.

சூரியகாந்தி புத்தேன்
கசப்பும், புளிப்பும், துவா்ப்பும் கொண்ட தேனாகும். நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உடையது. உடம்பு இளைக்கவும் குண்டாகவும் தேன் சாப்பிடலாம்.

சதும்பப்பு தேன்
விஷம் முறிவுக்கு உகந்ததேன், பாம்பு, தேள், புரான், பல்லி, வண்டு போன்ற புச்சிகள் கடித்தால் முதலுதவி செய்த உடன் தும்பை செடியை தேனில் கலக்கி கொடுத்தால் உடனே விஷ முறிவு ஏற்படும். உயிர் பிழைக்கலாம். இத்தேதை தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் விஷ கடியிலிருந்து தப்பிக்கலாம். உடல் தசைகள் கூடவும் இளைக்கவும் இத்தேனை பயன்படுத்தலாம். நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும்.

நெறிஞ்சிப்பு தேன்
இத்தேன் உடன் நெறிஞ்சி முல்லை அரைத்து தேனுடன் கலக்கி உண்டால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனே குணமாகும். இத்தேனை தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் (கிட்னி) சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். இத்தேனும் நல்ல சுவையாக இருக்கும். உடல் தசைகள் கூடவும், உடல் இளைக்கவும் இத்தேனை பயன்படுத்தலாம். நீரழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும்.

வளா்ப்புத் தேன்
Box Honey சா்க்கரை பாகுவை காய்ச்சி Box-க்குள் வைத்து விடுவார்கள். இதிலுள்ள புச்சிகள் காத்தடிக் காலம், மழை காலம் போன்ற காலங்களில் இதிலுள்ள தேன் புச்சி Box விட்டு வெளியே போகாது. சா்க்கரை பாகையை சாப்பிட்டு அதிலேயே தேன் கட்டும். புச்சிகள் எதை சாப்பிட்டு தேன் கட்டுகிறதோ அதனுடைய தன்மை தான் தேனுக்கு இருக்கும். இது சுகா் பேசன்ட் உண்பது நல்லதல்ல. இதை சூடு செய்வார்கள். தேன் விரைவில் கட்டியாக இருக்கவும். Agmark பாசாகவும் Moister Contain இல்லாமல் இருக்கவும் சூடு பண்ணுகிறார்கள். இதனால் அதில் உள்ள மருத்துவத் தன்மை போய் விடுகிறது. தேன் 42C மேல் சூடு பண்ணக் கூடாது. தேன் சாப்பிடுவதில் சந்தேகம் என்றால் அணுகவும். 

தேனின் மருத்துவ குணங்கள்
நச்சுக் கலக்காத இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் தேனும் ஒன்று. சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடியது தேன் என்று கூறப்பட்டுள்ளது. 
வேப்ப மரப்பூவிலிருந்து கிடைக்கும் தேன் மருத்துவ குணம் உடையது. வயலில் நெல்லிலிருந்து கிடைக்கும் தேன் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. ஒவ்வொரு பூக்களிடமிருந்து கிடைக்கும் தேன் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையதாக இருக்கிறது. 

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை.
தேனை  வெந்நீர்  சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிற்றுப்போக்கு சரியாகும். துளசி, தும்பை மற்றும் தேனை சிறிது சிறிதாய் சேர்க்க, மூச்சுத் திணறல் குறையும்.

ஒரு டீஸ்பூன் அளவு பூண்டு சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும். தேனில் ஊற வைத்த நெல்லிக்காய்  தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்த தேன் நெல்லி, கடைகளிலும் கிடைக்கிறது. இதை தினமும் சாப்பிடுவதால்  ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

கண் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவதிப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிட்டும். அடிக்கடி ஜலதோஷம், தொண்டைப்புண்ணால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டுவர வேண்டும். அதன்மூலம், உடலில் சேர்ந்த சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும், அப்பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகி விடும். முடி கொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் தேன் நெல்லிக்காயைச் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள மருத்துவக் குணங்களால் முடி கொட்டுதல் தடுக்கப்படுவதோடு முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

நாவல் தேன் 
நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியது. நன்மை செய்யும் கொழுப்பு சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தது. ஜீரண சக்தியை அதிகரிக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது. நாவல் பழ மரங்களின் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேன் அதிக மருத்துவ குணம் கொண்டது. மருத்துவ சக்தி கொண்ட நாவல் பழத்துடன் வைட்டமின் சத்து நிறைந்த தேனும் கலந்து சாப்பிடுவதனால் உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கும். தேனும் தினைமாவும் நாவல், வேம்பு, முருங்கை, மா, தும்பை, துளசி, பூண்டு என தேன் வகைகள் பல உள்ளன.  சித்த மருத்துவத்தில் தேன் கிடைக்கக்கூடிய இடத்தைப் பொருத்து, தேனை பலவகையாக பிரிக்கின்றனர். tredyfoods.comல் தேனுடன் கலந்த பேரிச்சை, தேன் நெல்லிக்காய், ரோஜா குல்கந்து, துளசி தேன், தேனும் தினைமாவும் கலந்த குக்கீஸ், உலர் பழங்கள் இணைந்த தேன், லவங்கப்பட்டை தேன் என பல வகையில் தேன் மதிப்புக்கூட்டப்பட்டு விற்பனையாகிறது இதனை  வாங்கி சுவையுங்கள்.

தேனின் பல்வேறு மருத்துவ குணங்கள்
01 உடல் ஆரோக்கியத்திற்கதேன் வழி வகுக்கும் தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.
02 தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம் மற்றும் தலை வலி குணமாகும்.
03 தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
04 தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தா ல் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
05 இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
06 தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
07 உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.
08 தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
09 மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால் ஆறாத புண்கள் ஆறிவிடும்.
10 கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்ச ி அதில் தேன் கலந்து சாப்பிட கீழ் வாதம் போகும்.
11 வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக் குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
12 தேனோடு பாலோ எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
13 அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்த சுத்தியும் இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
14 அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரஇ குணமாகும்.
15 முருங்கைக்காய்ச ் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
16 தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால் தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
17 ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
18 அதிகாலையிலும் படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
19 நெல்லிக்காய்களை த் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய் ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
20 என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
21 சிறந்த மருத்துவரும்இ மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ஒவ்வொரு நேரமும் உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்” என்று கூறினார் அவர்.
22 நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம ் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தா ல் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.
23 ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை கால்கள் விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ்இ நிச்சயம் குணம் காண்பார்கள்.
24 மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது மூட்டுகள் வலிக்காது
25 படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள் பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால் விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார் கள் கொம்புத்தேன் மலைத்தேன் குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.
26 ஆஸ்துமா அலர்ஜி தொல்லைகளிலிருந் து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.
28 நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.
29 சோர்வுற்றநிலை, அதிக வேலை பசியின்மை, அதிக அமிலத்தன்மை பித்தம் சம்பந்தமான தொல்லைகள்
இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி
தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல்
மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு
கர்ப்பிணிகளுக்க ு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள்
ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத ் தேன் மிகுந்த பயனுள்ளது.
30 ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம் பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
31 இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்க ு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
32 காதில் ஞொய் என்று சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதைஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். சப்தம் வருவது நின்றுவிடும்.
33 குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.
34 குழந்தை இல்லாத பெண்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து பெண்களிடத்திலுள ்ள மலட்டுத்தனத்தைத ் தேன் போக்கி விடுகிறது.
35 தோல் தோய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டது என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது.

இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவம். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன்இ இரண்டு ஸ்பூன் பால்இ கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சவற்கார துண்டுகளை போடவும். ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கும். மேலும், சவற்கார உடலை சுத்தமாக்கும் எண்ணெய்கள் தோலை இறுக வைக்கும். மேனி மிளிரும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இதன்படி செய்தாலே போதுமானது உங்கள் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

தேன் குறைந்த அளவு சாப்பிட்டால் மலச்சிக்கலை போக்கும். அதிக அளவு சாப்பிட்டால் மலச்சிக்கலை உண்டு பண்ணும். பேதியை நிறுத்தும். இரத்த சோகையை குணமாக்கும். தூக்கத்தை தரும் நீா் கோவையை சரிசெய்யும். சிறுநீா் கழிவை குறைக்கும். நஞ்சை முறிக்கும். இரத்த அழுத்தத்தை குணமாக்கும். சாப்பாட்டிற்கு பின் தேனுடன் குளிர்ந்த நீா் உடல் எடை கூட்டும். சாப்பாட்டிற்கு முன் வெந்நீா் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் குறையும். களைப்பை நீக்க தேன் சாப்பிடலாம். கறந்த பசும்பாலுடன் தேன் கலந்து அருந்தினால் உடல் வலிமை பெறும். உணவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சதை பெருகும். ஆட்டின் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் ஊறும். ரோஜா இதழ் கற்கண்டு ஆகியவற்றை கலந்து ஊற வைத்து தயாரிக்கும் குல்கந்தை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். காய்ந்த திராட்சி பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, அழகு பெறும். நாட்டு கோழி முட்டையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும். நீரழிவு நோயும் குணமாகும். கணைய சூட்டினால் சில குழந்தைகள் மெலிந்து காண்பாா்கள். அவா்களுக்கு தினசாி ஆட்டுப்பாலில் இரண்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் கணைய சூடு குறையும். உடல் நலம் வரும். இளநீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும். தினசாி இரண்டு ஸ்புன் தேன் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள காமாலை சம்மந்தமான நோய் வராது. செரிமான சக்தி தருவதில் மிகச் சிறந்தது தேன். தேனுடன் இஞ்சி சோ்த்து சாப்பிட்டால் பித்தம் போய்விடும்.

சுத்தமான தேன் எப்படி கண்டு பிடிப்பது (how to identify pure honey).

1.சுத்தமான தேன் எப்படி கண்டு பிடிப்பது பற்றி பார்போம் , ஒரு டம்லர் நீரில் தேன் ஒரு சொட்டு  விடவேண்டும் தேன் ஆனது நேர்ஆக அடிதூரில் பட்டு கரைந்தால் அது நல்ல தேன் 

2.நீயூஸ் பேப்பர் அல்லது காலண்டர் பேப்பர்ரில் ஒரு துளி சுத்த மான தேன் விட்டு பேப்பரை மடித்துபார்த்தால் வெளிபுரம் அல்லது பேப்பர் நமத்து போகாது இது போன்று இருந்தால் அது நல்ல தேன் 

3.குளிர்சாதனப்பெட்டியில் அல்லது குளிர்ஆன பகுதியில் தேன் இருந்தால் அந்த தேன் உரைந்து போக கூடாது 

Tuesday, 25 September 2018

திருமண நாள் பார்க்க பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள்

தனது மகன் அல்லது மகளின் திருமணத்திற்கான நாள் பார்க்கும் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய  முக்கியமான பதினோரு விதிகளை வகுத்துள்ளனர். இந்த விதிகளின் படி திருமணத்தை நிச்சயத்தால், மணமக்கள், சகல சௌபாக்கியங்க ளோடு, குழந்தைப்பேறு பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

1. திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மல மாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
 2. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
 3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
 4. புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
5.ரிஷபம்,  மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான் துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
 9. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
 10. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
  11. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக் கூடாது.

இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்ட பின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்லநாள் பார்த்து விடு வீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.

பெண் லக்னம் ஆண் லக்னம் - ஒரே ராசியில் உள்ளது. சுபம்." பெண் லக்னம் ஆண் சூரியன் - மிகச்சிறப்பு..மிக உத்தமம்." பெண் லக்னம் ஆண் சந்திரன்-மோஷமில்லை." பெண் லக்னம் ஆண் செவ்வாய்-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் புதன்-மோஷமில்லை." பெண் லக்னம் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் லக்னம் ஆண் சுக்கிரன்-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் சனி-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் ராகு- இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் லக்னம் ஆண் கேது- இது பூர்வீக ஜென்ம பந்தம்."மிகச்சிறப்பு." பெண் சூரியன் ஆண் சந்திரன்-மிகச்சிறப்பு." பெண் சூரியன் ஆண் செவ்வாய்-தம்பதியருக்குள் மிகவும் கோபப்படுத்தும். உயிரணுக்குறைபாடுகளை ஏற்படுத்தும்." பெண் சூரியன் ஆண் புதன்-மோஷமில்லை." பெண் சூரியன் ஆண் குரு-நல்ல கௌரவம் ஏற்படும். நல்ல புத்திரம் ஏற்படும். மிகச்சிறப்பு. நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் சூரியன் ஆண் சுக்கிரன்-மோஷமில்லை." பெண் சூரியன் ஆண் சனி-கடுமையான புத்திரதோஷம் ஏஏற்படும். தாமத புத்திரம் உண்டு. உயிரணுக்களiன் வளர்ச்சியில் குறைபாடு. கருமுட்டை உருவாகாமல் இருப்பது இது போன்ற குழந்தை உற்பத்தி திறன்களiல் பாதிப்பு ஏற்படுவதைக் காட்டுகிறது. இருவருக்கும் இருந்தால் கடுமையான புத்திர தோஷமே." பெண் சூரியன் ஆண் ராகு-ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும். மாமனாரை மதிக்காத தன்மை ஏற்படும்." பெண் சூரியன் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்." ஒரே ராசியில் உள்ளது. சுபம்" பெண் சந்திரன் ஆண் செவ்வாய்-ஜாதகருக்கு கண்டிப்பும் ,காவலும் அதிகம்." பெண் சந்திரன் ஆண் புதன்-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையில்லாத நபாகளiன் தலையீட்டை குறைத்துக் கொள்ள வேண்டும், இல்லை எனில் குடும்பம் பிரிய ஆதுவை காரணமாகும்." பெண் சந்திரன் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். விரைவில் குழந்தை உண்டாகும். நல்ல பாதுகாப்பு கிடைக்கும். இது மிக அருமுயான பொருத்தம்." பெண் சந்திரன் ஆண் சுக்கிரன்-அதிகப்படியான ஆசைகள் உண்டாகும். பிறந்த வீட்டுப் பெண்ணுக்கும் புகுந்த வீட்டுப் பெண்ணுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரும்." பெண் சந்திரன் ஆண் சனி-கணவன்,மனைவிக்குள் கடுமையான மனநெருக்கடி ,மனச்சுமை ஏற்படும்.கடுமையான வேலைப்பளு உண்டாகும்." பெண் சந்திரன் ஆண் ராகு-ஜாதகருக்கு கடுமையான பயம்ஏற்பட்டு அதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு நெருக்கடியாக தன்னை உணாந்து மனஉளைச்சலுக்கும் ,மனநோயிற்கும் ஆளாவார்.இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் சந்திரன் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான பயம்,நெருக்கடி,சட்டசிக்கல் ஏற்பட்டு நெருக்கடி மனஉளைச்சலுக்கும் ,மனநோயுக்கும் ஆளாவார்.இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் செவ்வாய் ஆண் செவ்வாய் ஒரே ராசியில் உள்ளது. சுபம்- நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும்.சண்டை வந்தாலும் குறுகிய காலத்தில் சமாதனமாகிவிடுவா.இருவருக்குள் போக வசியம் உண்டு." பெண் செவ்வாய் ஆண் புதன்-இது கடுமையான செவ்வாய் தோஷம் ஆகும்.அறிவினால் பிரச்சனை உருவாகும்.புரிந்துகொள்ளுதலில் பிரச்சனை ஏற்படும்.பலா மோஷமான திருமண வாழ்க்கையை வாழ்கின்றனா" பெண் செவ்வாய் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.நல்ல சுகம் உண்டாகும்.இருகுடும்பத்தினருக்கும் இடையே சுமூக உறவு ஏற்படும்." பெண் செவ்வாய் ஆண் சுக்கிரன்-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.விரைவில் குழந்தை உண்டாகும்.நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.குடும்பத்தில் இரத்த சம்பந்தமான ஒருவா காதல் திருமணம் செய்திருப்பார்." பெண் செவ்வாய் ஆண் சனி-கணவன்,மனைவிக்குள் தொழில்தியான கடுமையான நெருக்கடி ,மனச்சுமை,சோம்பல் ஏற்படும்.இது கடுமையான செவ்வாய் தோஷம் ஆகும்." பெண் செவ்வாய் ஆண் ராகு-நெருக்கடி ஏற்பட்டு பிரிவினை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.உடலில் வியாதி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்." பெண் செவ்வாய் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான சகோதராகளால் பயம்,சகோதராகளால் நெருக்கடி,பூர்வீச்சொத்துக்களiல் சட்டசிக்கல் ஏற்பட்டு நெருக்கடிக்கும்" பெண் புதன் ஆண் புதன் ஒரே ராசியில் உள்ளது - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் குரு - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் சுக்கிரன் - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் சனி-மோஷமில்லை." பெண் புதன் ஆண் ராகு-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்." பெண் புதன் ஆண் கேது-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்." பெண் குரு ஆண் குரு ஒரே ராசியில் உள்ளது. - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் குரு ஆண் சுக்கிரன் - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.ஜாதகருக்கு நல்ல வசதி ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் குரு ஆண் சனி - ஜாதகருக்கு நல்ல வருமானம் ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் குரு ஆண் ராகு - ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்.ஏதேனும் குறையான குழந்தை பிக்க வாய்ப்புள்ளது." பெண் குரு ஆண் கேது - ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்." பெண் சுக்கிரன் ஆண் சுக்கிரன் ஒரே ராசியில் உள்ளது. - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் சுக்கிரன் ஆண் சனி-ஜாதகருக்கு நல்ல வருமானம் ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் சுக்கிரன் ஆண் ராகு-மனப்பிரிவினை வரும் . வாழ்வில் திருப்தி ஏற்படாது. நல்ல வாயாடி மனைவியே வரும்." பெண் சுக்கிரன் ஆண் கேது-மனப்பிரிவினை வரும் .வாழ்வில் திருப்தி ஏற்படாது.நல்ல வாயாடி மனைவியே வரும்.மனைவி மிக நுணுக்கமான அறிவைப் பெற்றிருப்பார். அதுவே பிரச்சனையாகும்." பெண் சனி ஆண் சனி ஒரே ராசியில் உள்ளது-மோஷமில்லை." பெண் சனி ஆண் ராகு-கணவன், மனைவிக்குள் தொழில்ரிதியான கடுமையான நெருக்கடி, சோம்பல் ஏற்படும்." பெண் சனி ஆண் கேது-கணவன், மனைவிக்குள் தொழில்தியான கடுமையான சட்ட நெருக்கடி, மனநோய், சோம்பல் ஏற்படும்." பெண் ராகு ஆண் ராகு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் ராகு ஆண் கேது-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்." "பெண் கேது ஆண் கேது-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்."

1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage)
2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage).
3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்
4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .
5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.
6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.
7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்
8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.
9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.
10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.
11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.
12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்
13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்
14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.
15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.
16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.
17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!
18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்
19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்
20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்
21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும
25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
28. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
29. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
30. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
31. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
32. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
33. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது - ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக் கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
34. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
35. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) - அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
36. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு தேடி வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள் நோரிடும்
37. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
38. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!.
39. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
40. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
41. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
42. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.
43. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
44. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
45. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைப்பது எப்படி?

ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை. அதில் தொப்பை பெரிய பிரச்னை. உடல் எடை பற்றி எந்த கவலையும் படாமல் ஜாலியாக சாப்பிட்டு, நிம்மதியாகத் தூங்கி, வயிறு கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகும் போதெல்லாம் அலட்டிக் கொள்ளாமல், நிறைமாத கர்ப்பிணிபோல் வயிறு ஆனவுடனே ‘அய்யய்யோ’ என்று அலர்ட்டாவதுதான் பல ஆண்களின் பாலிசி அதன்பிறகு வாக்கிங் ஜாக்கிங்கிலேயே தொப்பையைக் குறைத்துவிடலாம் என்றோ, ஜிம்முக்குப் போனால் சரியாகி விடும் என்றோபடாதபாடுபாடுவதையும் பார்க்கிறோம். உடற்பயிற்சியின் மூலம் தொப்பையைக் குறைப்பது எத்தனை சதவிகிதம் சாத்தியம்?


தினமும்  கண்ணாடியை பார்க்கும் போது, முதலில் முகத்தைப் பார்த்தப் பின் வயிற்றைத் தான் பார்ப்போம். அப்படி எப்போதெல்லாம் கண்ணாடியைப் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அனைவரது முகமும் சுருங்கும். ஏன் என்று தெரியுமா? உடலுக்கு ஏற்ற வயிறு இல்லாமல், கர்ப்பிணி போன்று வீங்கி இருப்பதாலே ஆகும். அதே சமயம் அனைவரது மனதிலும் இனிமேல் நாம் கடுமையான டயட்டை பின்பற்றி, ஒல்லியாக மாற வேண்டுமென்ற எண்ணமும் எழும். ஆனால் சிலரைப் பொறுத்தவரை அது வெறும் பேச்சாக இருக்கும். சிலரோ சரியாக சாப்பிடாமல், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காதவாறு டயட் இருப்பார்கள்.


வயிற்று கொழுப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது சரியான வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாம் தோல்வியடைகிறோம். இன்று 40 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானோர்களுக்கு இருக்கும் பிரச்சனை தொப்பை. இதனால் உருவ அழகு கெடுவதோடு, சுறுசுறுப்பாகவும் இயங்க முடியாது.

உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே உடலினுள் தங்கிவிடுகிறது. இதன் விளைவாக பலருக்கும் அசிங்கமாக பானைப் போன்று தொப்பை தொங்கிக் கொண்டிருக்கிறது.


தொப்பைக்கான காரணங்கள்:
கடைகளில் அழகாகக் கவர்ச்சியான நிறங்களில் செயற்கை மசாலா மற்றும் நிறமிகளை வைத்து அழகேற்றப்பட்ட உணவு வகைகளை ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் உண்டு விட்டால் நமக்குப் பலனாகக் கிடைப்பது நம்து உடலின் அழகைக் குறைக்கும் இந்தத் தொப்பைதான். அது மட்டுமல்லாமல் இந்தத் தொப்பைகளால் உடல் நலத்திற்கும் கேடு. தேவையற்ற கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்ந்து அதுவே பலவிதமான நோய்களுக்கு அடித்தளமாகிவிடுகின்றன. உடலின் மற்ற பாகங்களில் தங்கும் கொழுப்பு மற்றும் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்வதால் இரத்தக் கொழுப்புப் பிரச்சனை (கொலஸ்ட்ரால்), இளநரை, முடி உதிர்தல், சர்க்கரை நோய், வாதம், இதய நோய்கள், இளமையிலேயே முதுமையடைதல், குடலில் புண்கள், மாரடைப்பு, வளர்சிதைமாற்றம் (Metabolism) குறைந்து ஆண்களுக்கு ஆண்மையிழப்பு, பெண்களுக்குக் கருத்தரிக்கும் பண்பை இழத்தல் மற்றும் பலவிதமான நோய்களுக்குத் தொப்பை ஒன்றே காரணமாகிவிடுகிறது.

"கார்பாக்ஸிதெரபி" (Carboxytherapy) எனப்படும் இந்தச் சிகிச்சையில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு அடங்கிய பிரத்யேக ஊசியை அதிகக் கொழுப்பு சேர்ந்திருக்கும் இடத்தில் போட்டால், அந்தப் பகுதியிலிருக்கும் கொழுப்புச் செல்களை நீக்கி விடும்’ என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் (Northwestern University) நடத்திய ஆராய்ச்சியில்தான் இந்தப் புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த ஆய்வுகுறித்த விவரங்களை அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி-யின் (American Academy of Dermatology) இதழில் வெளியிட்டிருக்கிறது நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம்.

இந்தச் சிகிச்சை முறை குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் முழுமையாகவில்லை. இப்போதுதான் முதன்முறையாக மனிதர்களிடம் நடத்தப்பட்டிருக்கிறது. `உடல் பருமன் அளவீடு (BMI) 22-லிருந்து 29-க்குட்பட்ட 16 பேருக்கு இந்த ஊசியைப் போட்டு, பல கட்டங்களாக சோதனை நடத்தப்பட்டது. முடிவில், அல்டரா சவுண்ட் மூலம் பரிசோதித்ததில் அந்தப் பகுதியிலிருக்கும் கொழுப்புகள் ஐந்து வாரங்களில் குறைந்திருக்கிறது’ என்கிறது அந்த ஆய்வு.

‘‘உணவின் மூலம் உடலில் அதிகமாக சேர்கிற கொழுப்பு, முதலில் வயிற்றுப்பகுதியில்தான் சென்று படியும். அதனால்தான் தொப்பை வருகிறது. இந்த தொப்பையைக் குறைப்பதில் உடற்பயிற்சிக்கு 20 சதவிகிதம்தான் பங்கு இருக்கிறது. மீதி 80 சதவிகிதத்தைத் தீர்மானிப்பது உங்கள் உணவுப்பழக்கம்தான்.அதனால், தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் ஜிம்முக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தால் மட்டும் போதாது. முறையான உணவுப்பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். ஓட்டல் உணவுகள், துரித உணவுகள், எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ குடிக்கிற பழக்கம் உள்ளவர்கள் அதற்குப் பதிலாக கிரீன் டீ, லெமன் டீ குடிக்கலாம்.

காலை உணவாக எண்ணெய் சேர்க்காத 3 சப்பாத்தி அல்லது உலர்ந்த பழங்கள், காய்கறிகள் சேர்க்கப்பட்ட ஓட்ஸ் ஒரு கப் சாப்பிடலாம். மதிய உணவுக்கு ஒரு கப் சாதம், கீரை அல்லது காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம். அசைவத்தை விரும்புகிறவர்கள் எண்ணெய் சேர்க்காத மீன் அல்லது கோழி இறைச்சியை சேர்த்துக் கொள்ளலாம். இரவு உணவாக, எண்ணெய் இல்லாத சப்பாத்தி 3 உடன் ஃப்ரூட் சாலட் ஒரு கப் சாப்பிடலாம். பால் குடிப்பதாக இருந்தால் சர்க்கரை சேர்க்காமல் ஒரு டம்ளர் குடிக்கலாம். இந்த உணவுக்கட்டுப்பாட்டுடன் ஃபிட்னஸ் டிரெயினர் அறிவுரைப்படி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். 45 நிமிடம் நடைப்பயிற்சியும், அதன்பிறகு, 45 நிமிடம் வொர்க்-அவுட்டும் செய்ய வேண்டும். வார்ம்-அப் செய்த பிறகுதான் வொர்க்-அவுட் ஆரம்பிக்க வேண்டும். வொர்க்-அவுட்டில் Floor Exercise, Leg Extension, Obliques (4 கிலோ எடையுள்ள தம்புல்ஸ் 2 கையிலும் வைத்தவாறு உடலை வலது, இடது பக்கமாக வளைத்தல்) போன்றவற்றை செய்ய வேண்டும். உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இந்த இரண்டும் ஒன்று சேரும்போது தான் தொப்பையைக் குறைப்பது சாத்தியமாகும்’

தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது.  உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்தால் போதும். இதொ அந்த உணவுகள்..

1. தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடல் எடையை குறைக்கும்.

2. இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரைய செய்யும்.

3. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது  வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

4. கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

5. பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும்.

6. சக்கரவள்ளிக்கிழங்கு இதில் மிகக் குறைந்த அளவிலான கொழுப்பே உள்ளது. அதோடு இது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதிக நேரம் நீங்கள் எனர்ஜியுடன் இருக்க முடியும்.

7. புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது.

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைப்பது எப்படி?

1. நமது ஹார்மோன்கள் மூலம் தொப்பை கொழுப்பை கரைப்பது மிக‌ கடினமாக இருக்கலாம். அத்தகைய ஒரு ஹார்மோன் கார்டிசோல் ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் அதிக மன அழுத்தத்த்னை கொடுத்து அதிக கொழுப்பு சேர்வது வரை இந்த‌ கார்டிசோல் சுரப்பு வழிவகுக்கிறது. இது அடிவயிற்று உறுப்புகளை சூழ்ந்துள்ளது. மன அழுத்தம் இருந்தால் விரைவில் தொப்பையை குறைக்க முடியும் என்பது ஏமாற்றம்தான். எனவே இதற்கு இசையை கேட்டோ அல்லது ஒரு இனிமையான பொழுதுபோக்கு மூலமாகவோ, தியானம், குமிழி குளியல் போன்ற மன அழுத்தம் இல்லாத‌ நடவடிக்கைகள் மூலம் மன அழுத்ததினை குறைக்கலாம்.

2. சரியான அளவு தூக்கம் இல்லாமல் இருந்தால், மக்கள் இதனால் மந்தமாக இருப்பதாக‌ உணர முனைகின்றார்கள். இதனால், தினமும் குறைந்த பட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்கினால் நீங்கள் நன்கு எடையை பராமரிக்க உதவும். உங்கள் மின்னணு கருவிகளை நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் அனைத்தையும் அணைத்து விட்டே படுக்க செல்ல வேண்டும். சில ஆய்வுகள் மூலம் நீங்கள் தூங்கும் நேரத்தில் மின்னணு கருவிகளை பயன்படுத்தினால் சரிவர தூக்கமின்மையே ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் நல்ல முறையில் உங்கள் மனம் மற்றும் உங்கள் உடலுக்கு நன்கு ஓய்வினை தர வேண்டும்.

3. ஒவ்வொரு தடவையும் உணவு உண்ணும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. நீரானது உங்கள் வயிற்றை ஒரு பகுதியாக நிரப்பி விடும். இதனால் நீங்கள் அளவுக்கு அதிகமான உணவு உண்பதை தடுக்கலாம். இதற்கு மாற்றாக, நீங்கள் உங்கள் சாப்பாட்டுக்கு இடையேயும் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்தலாம்.

4. உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க வேண்டும் என்றால், நீங்கள் மேலும் அதிக அளவில் கலோரிகளை எரிக்க வேண்டும். ஒரு மாதம் முழுவதும் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை ஒரு பவுண்டு எரிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு சுமார் 500 கலோரிகளை இழக்க வேண்டும். இதற்கு காரணமான துரித உணவு மற்றும் கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும், இது ஜீரணிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இதற்கு பதிலாக, உயர் நார்ச்சத்துள்ள உணவுகள் சாப்பிடவும். இவை உங்களுக்கு போதுமான மற்றும் சரியான வடிவில் உங்கள் வளர்சிதை மாற்றத்தினை தக்க வைக்கும்.

5. சாப்பிடும் போது, பெரிய அளவில் சாப்பிடாமல்உங்கள் உணவை பிரித்து சிறு சிறு பகுதிகளாக சாப்பிடலாம். இறைச்சியை சிறிய துண்டுகளாகவும், ரொட்டி துண்டுகளை சிறிய அளவிலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரேடியாக 3 வேளைக்கு அதிகமாக சாப்பிடுவதை விட, 3 முதல் 5 வேளைகளாக பிரித்து மிதமாக சாப்பிடலாம். இதனால் உங்கள் வளர்சிதை மாற்ற‌த்தினை அதிகமாக வைத்திருக்கும் மற்றும் உகந்த அளவில் இரத்தத்தில் சர்க்கரையின் அளாவை வைத்து இருக்கும்.

6. சமச்சீரற்ற உணவு மற்றும் ஒரு உட்கார்ந்தே பணியாற்றுகின்ற வாழ்க்கை முறையில் எடை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்று. எனவே, தொப்பையை குறைக்க‌ சிறந்த வழி ஒரு சீரான உணவை பின்பற்றுவதுதான். முக்கியமாக பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் உள்ளடக்கிய உணவும் மற்றும் குறைந்த கொழுப்பு உணவும், எளிதில் தொப்பையை இழக்க உதவுகிறது. இவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைய கொண்டிருக்கும் உங்கள் பசியை அடக்க நார்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும். துரித வகை உணவுகள் மற்றும் பொரித்த உணவுகள் மற்றும் கொட்டைகள் இவற்றில் இருந்து விலகியே இருங்கள்.

7. நீங்கள் உங்கள் நடுப்பகுதி வரை கொழுப்பை இழக்க வேண்டும் என்றால் நன்றாக நீரேற்றம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீரேற்றமானது வெறுமனே நீராக இல்லாமல் மூலிகை தேநீர் போன்றவற்றை பயன்படுத்தி பெறுவது மிகவும் நல்லது. பச்சை தேனீர், நீங்கள் ஒழுங்காக தொப்பையை குறைக்க வேண்டும் என்றால் இந்த தேனீர் மிகவும் உதவியாக உள்ளது, இது மற்றொரு சிறந்த பானம் ஆகும், இது உடலின் கொழுப்பு வளர்சிதை அதிகரிக்கிறது மேலும் இதில் கேட்டச்சின்கள் என்ற கலவைகள் அதிக அளவில் உள்ளது. இது எளிதாக வயிற்றில் இருந்து கொழுப்பை குறைக்க செய்கிறது. எனவே நிங்கள் கேஸ் நிறைந்த‌ பானங்கள் மற்றும் ஆல்கஹால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

8. நடைபயிற்சி நிரந்தரமாக வயிற்றில் உள்ள கொழுப்பு இழக்க சிறந்த வழிகளில் ஒன்றாகும். நடைபயிற்சி எடையை மட்டும் குறைக்க உதவுவதில்லை, ஒட்டுமொத்த சுகாதாரத்திற்கும் இது வழிகாட்டியாக உள்ளது.

9. உங்கள் காலை உணவை ஒரு போதும் தவிர்க்க கூடாது. ஆய்வுகள் முடிவின் படி ஒரு ஆரோக்கியமான காலை உணவு சாப்பிட்டால் உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகமாக தொடங்கும் என்று சொல்கின்றன. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தினை நாள் முழுவதும் வேலை செய்யும்படி வைத்திருக்கிறது. காலை உணவு கைவிடுதவதால் நீண்ட நேர‌த்திற்கு உங்களை பசியோடு வைத்து இருக்கும் நிலைக்கு உங்களை வைக்கிறது. எனவே காலை உணவை கைவிடாமல் இருந்தால் இது உங்கள் ஆற்றல் தசை திசுக்களை உடைத்து மற்றும் கொழுப்பை குறைத்து உங்கள் உடலை பாதுகாப்பாக வைக்க‌ வழிவகுக்கும்.

தொப்பையை குறைக்க செய்யக் கூடிய உடற்பயிற்சிகள் நமக்கு மிக அதிக வேலையை தருவதோடு சில பல விறுவிறுப்பான பயிற்சிகளையும் செய்ய வேண்டியதாக இருக்கும். ஆனால் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க இந்த எளிய குறிப்புகள் பின்பற்றுவதன் மூலம் மிக எளிதாக குறைக்கலாம். இது ஒரு நீண்ட கால தீர்வாக‌ நீங்கள் பின்பற்ற உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என்று மற்ற குறிப்புகள் மூலம் இந்த‌ குறிப்புகள் நமக்கு சொல்கிறது!