ஒவ்வொரு முறையும் உங்கள் குழந்தைகள் ஆடும்போதும், அசையும்போதும், ஓடும்போதும், குதிக்கும்போதும், உங்களை அணைக்கும்போதும் அவர்கள் மூளை உங்களை விடவும் செயல்திறன் மிக்கதாக இயங்குகிறது. ஒவ்வொரு புதிய அனுபவமும் குழந்தையின் மூளையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய தொடர்ச்சியான அனுபவங்கள் மூலம் அவர்களது ஆறு வயதில் மூளையானது 90 சதவிகித வளர்ச்சியை எட்டி விடுகிறது. உணர்வு ரீதியாகவும், சமூக அளவிலும் மூளையின் இயக்க திறன்களை அடைய 6 வயதுக்கு முன் உள்ள காலமே உகந்ததாகும். அவர்களது பார்வை திறம், கேட்கும் சக்தி போன்றவை மாற்றமடைந்து 6 வயதுக்கு முன்னரே அவர்களுடைய பழக்கங்கள் உருவாகி விடுகின்றன.
இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், குழந்தைகள் அவர்களது 6 வயதுக்கு முன்னதாகவே, இந்த உலகத்தை சந்திக்கும் இயல்பை அடைந்து விடுகிறார்கள். குறிப்பாக, அவர்கள் மூளை செயல்திறன்கள் அளவில் மட்டுமல்லாமல், அதன் மொத்த அளவிலும் பெரியவர்களைவிடவும் பெரிதாக இருக்கும். அதாவது, கற்றல், நினைவுத்திறம், இயக்க நிலை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் கிட்டத்தட்ட அவர்களது 5-வது வயதிலேயே உருவாகி விடுகின்றன.
பொதுவாக, மூளை சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புகள் மற்றும் வளர்ச்சி நிலை ஆகியவை இரண்டு காரணங்களால் மேலும், ஊக்கம் பெறுகின்றன. முதலாவது காரணம், எவ்வாறு மூளை உபயோகப்படுத்தப்படுகிறது என்பதாகும். அதாவது, குழந்தைகள் மூளை ஒவ்வொரு நாளும் எந்தெந்த வகைகளில் புதிய பொருட்கள் மூலம் தூண்டுதல் அடைகிறது என்பதைப் பொறுத்து, சிறப்பாக இயங்கத் துவங்குகிறது. குழந்தைகள் எவ்வளவு தூரம் விஷயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடனும், விதவிதமான செயல்களை செய்வதிலும் ஈடுபடுகிறார்கள்..! பெற்றோர்களுக்கு நேரடி தொடர்பில்லாத பல காரியங்களையும் அவர்கள் செய்கிறார்கள்..!
பெரும்பாலான ஆரோக்கியமுள்ள, நிறைமாதத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் எடையை நான்கு மாதங்களில் இரட்டிப்பாகவும், முதற் பிறந்தநாளின்போது மும்மடங்காகவும் அதிகரிப்பார்கள்.
ஆயினும், எல்லாக் குழந்தைகளும் தங்கள் சொந்த வேகத்தில் வளருவார்கள் என்பதை மனதில் வைக்கவும். ஒரு சிறிய அல்லது பெரிய குழந்தை பரிபூரண ஆரோக்கியமுடையவனாயிருக்கலாம். அத்துடன், குழந்தைகளுக்கு வேக வளர்ச்சி மற்றும் எடை அதிகரிப்பதில் ஏற்ற இறக்கம் இருக்கிறது.
குழந்தை பிறந்ததும் ஒரு நாளைக்கு அதிக மணித்தியாலங்கள் நித்திரையிலேயே கழிக்கும். இது குழந்தைக்கு விருப்பமானதொரு ஓய்வை பெற்றுக்கொடுக்கும். படிப்படியாக நித்திரையின் அளவு குறைந்து குழந்தையின் முதல் வருடத்தினுள் குழந்தை பெற்றுக்கொள்ளும் அனுபவங்களை பற்றிய பல விடயங்கள் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன
குழந்தை பிறந்ததும் சுமார் 20 மணித்தியாலங்கள் நித்திரை கொள்ளும்.
குழந்தை பிறந்து முதல் முதல் மாத காலம் வரையில் 20 மணித்தியாலங்கள் நித்திரை கொள்ளும். தூங்கும் குழந்தைக்கு பசி எடுக்கும் போதே நித்திரையிலிருந்து விழிக்கும். நித்திரையிலிருந்து விழிக்கும் குழந்தை பாலருந்தி வயிறு நிரம்பி விட்டால் மீண்டும் நித்திரைக்கு செல்லும். நன்று வயிறு நிரம்பியிருந்தால் நீண்ட நேரம் நித்திரை கொள்ளும். இவ்வாறு பிறந்தவுடன் குழந்தை நித்திரை கொள்ளுமளவை பற்றி பயப்படத் தேவையில்லை. நித்திரை கொள்ளுமளவு குழந்தையின் வயதுடன் படிப்படியாக குறைவடையும். வயதுடன் குழந்தையின் நித்திரையில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள். முதல் 2 மாதங்கள் வரை குழந்தையின் நித்திரையில் ஏற்படும் மாற்றங்கள்
பிறந்தவுடனேயே குழந்தைக்கு பகல், இரவு என வேறுபடுத்தி அறிய முடியாது. எவ்வேளையும் நித்திரையிலேயே கழிக்கும். பசிக்கும் போது நித்திரை களையும் அதேவேளை மீண்டும் பாலூட்டி உடைகளை மாற்றி விட்டால் துங்கி விடும்.
2 – 4 மாத காலங்களில் நித்திரையில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்
இரவு வேளையில் கூடிய நித்திரைக்கு குழந்தை பழக்கப்படும். பொதுவாக குழந்தை இரவு நேரத்தின் 2ஃ3 பகுதியை நித்திரை கொள்ளல் தாய்மார்களுக்கு சாதகமாக அமையும். 5 – 7 மாத காலத்தில் நித்திரையில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் நித்திரைக்கான கூடிய ஈடுபாட்டை குழந்தை காட்டாது. தன் தந்தையுடன் உறவாட விரும்பும். இரவில் தூக்கம் 8 – 9 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.
8 – 12 மாத காலங்களில் நித்திரையில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்
பகல் நேர தூக்கம் இரண்டு சந்தர்ப்பங்களுக்கு மட்டுப்படுத்தப்படும். விளையாட்டுகளுக்கு கூடிய நேரம் ஒதுக்கப்படுவதுடன் இரவுத்தூக்கம் 8 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படும். இவ்வாறான அறிகுறிகளின் மூலம் குழந்தைக்கு தைரோட்சின் குறைபாடு உள்ளதென்பதை ஊகிக்கலாம். இக்குழந்தைகள் கூடிய தூக்க மயக்கத்தில் இருப்பதோடு வயிறு நிரம்பாத சந்தர்ப்பங்களில் கூட நித்திரைக் கொள்வதை காணலாம்.
தைரொட்சின் ஹோமோன் தைரொயிட் சுரப்பியினால் சுரக்கப்படுவதுடன் அயடின் எனும் கனியுப்பின் மூலம் இச்சுரப்பு கட்டுப்படுத்தப்படும். உடலுக்கு கிடைக்கும் அயடினின் அளவு குறையும் போது தைரொட்சின் சுரப்பினளவு குறையும். இதனால் குழந்தையின் சுறுசுறுப்புத்தன்மை படிப்படியாகக் குறைவடைந்து ஆழ்ந்த தூக்க மயக்கத்தில் குழந்தை காணப்படும்.
நித்திரையின்மைக்கான வேறு காரணங்கள்
- குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலி
- காது வலியினால் பாதிப்புறுதல்
- மூக்கடைத்தல்
- உடலில் ஏற்படும் வேறு நோய் நிலைமைகள்
இவ்வாறான வேறுபட்ட பிரச்சினைகள் குழந்தைக்கு காணப்படுமாயின் குழந்தையின் நித்திரை பாதிப்படையும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தூக்கத்திலிருக்கும் குழந்தை எழுந்து அழும். இங்கு குழந்தைக்கு ஏதோ அசௌகரியமான நிலைமை ஏற்பட்டிருப்பதை விளங்கிக் கொள்ளல் வேண்டும். மேலும், வீட்டில் இருக்கும் அசாதாரண சத்தங்களும் குழந்தையின் சீரான நித்திரையைப் பாதிப்புறச் செய்யும்.
தூங்கும் குழந்தைக்கு செய்யக் கூடாதவை
பலாத்காரமான முறையில் எழுப்பி, உணவுப் பான வகைகள், பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இது குழந்தையின் போசனைக்கு மட்டுமன்றி உள வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு நித்திரை அத்தியாவசியமாகும்
குழந்தை பிறந்தவுடன், சுமார் 20 மணத்தியாலங்கள் நித்திரை கொள்ளல் ஒரு சாதாரண நிலைமை ஆகும். நித்திரையின்போது, சில ஹோமோன்களின் சுரப்பு அதிகளவில் நடைபெறும். இதனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான நித்திரை அவசியமாகும்.
குழந்தையின் நித்திரை குறைதல், நித்திரையின்மை எனும் இரண்டு விடயங்களும் குழந்தையின் வளர்ச்சியை குறைக்கும்.
ஒரு வருடமளவு கழியும் போது குழந்தையின் நித்திரையின் அளவில் கணிசமான மாற்றங்களைக் காணலாம். இவ்வயதில் குழந்தை 8-12 மணத்தியாலங்களுக்கு நித்திரை கொள்ளும்.
சிலவேளைகளில், சுரப்பத்தில் உள்ள நித்திரை கொள்ளும் நேரங்களை முழுமையாக மாற்றும் குழந்தைகளும் இரு;ககின்றனர். இவ்வாறான குழந்தைகளின் காலை வேளையின் தூக்கம் தாமதமாகுமாயின், மாலை வேளையில் தூக்கம் இந்த நேரத்துக்கு முன் நிலையைக் காணலாம். இது சாதாரண நிலையாகும்.
குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயளாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்பதனை பெற்றோர்கள் உணர வேண்டும். பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான மூளை உணவு:
மீன் புரதம் மற்றும் "ஆரோக்கியமான" கொழுப்பின், அடங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு மீன் தேர்ந்தெடுக்கும் போது,ஒமேகா -௩ அதிகம் இருப்பதையும் அதிக மெர்குரி உள்ளடக்கத்தை இருப்பதையும் தவிர்க்கவேண்டும்
அதிக அளவிலான மெர்குரி உள்ளடக்கம் இருப்பதால், சுறா, வாளமீன் , டைல் மீன் என்பதை குழந்தைகளுக்கு யு.எஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) தடைவிதித்துள்ளது.
சூறை மீன், கானாங்கேளுத்தி மீன் ,நெத்திலி, மத்தி, சால்மன், காட் மற்றும் கேளூரு மீன் ஆகியவற்றில் மெர்குரி உள்ளடக்கம் குறைவு .
ருசிப்பதற்கான மீன் சமையல்!
"சின்ன வயதிலே சுவை அறிமுகப்படுத்துவது நல்லது" ஜெனிபர் பியோட்-மார்ட்டின், ஆய்வின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் TLC - யில் தெரிவிக்கிறார்."ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்க வேண்டும்."
குழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் திட உணவை ஆரம்பிக்கலாம்.இதில் மசித்த மீனும் அடங்கும். குறிப்பிட்ட சில மீன்களுக்கு ஒவ்வாமை இருக்கக்கூடாது என்று உறுதிப்படுத்தவேண்டும். மேலும், எலும்புகள் இருக்கிறதா என்று சோதித்து பார்க்கவேண்டும். தொண்டையில் சிக்கும் வாய்ப்புகள் இதில் அதிகம்.
பொதுவாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து என்ற 3 வகையான சத்துக்கள் தேவைப்படுகிறது. அதில் மாவுச்சத்து, உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. புரதச்சத்து, தசை, எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து, மூளை, நரம்பு மண்டல வளர்ச்சி, நாளமில்லா சுரப்பிகள் சுரப்பதற்கும் உதவுகிறது. இந்த சத்துகள் அனைத்தும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.குழந்தைகள் பிறந்தபோது இருந்த எடையை விட 2 வருடத்தில் 4 மடங்கு அதிகரிக்கும். எனவேதான் அவர்களுக்கு தாய்ப்பால், ஊட்டச்சத்து ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும்.
அதன்பிறகு, அதாவது 2 வயதுக்குப்பின் ஒவ்வொரு வருடத்துக்கும் 2 கிலோ எடை அதிகரிக்கும். 6 சென்டிமீட்டர் உயரம் வளர்வார்கள். அந்த காலகட்டத்தில் சரிவிகித உணவு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பொதுவாக இந்த காலகட்டத்தை உடல் அதிவேக வளர்ச்சியுறும் காலம் என்பார்கள். இதனை வளர்இளம் பருவம் என்றும் கூறுவதுண்டு.இந்த வளர்ச்சி காலம் என்பது அவர்களின் 14 முதல் 16 வயது வரை இருக்கும். அதனால் சரிவிகித உணவு வழங்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக குழந்தையின் எடையில் சராசரியாக 1 கிலோவுக்கு 110 கலோரி அளவுக்கு சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு இட்லியில் 50 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது. தோசையில் 100-ம், உப்புமாவில் 250-ம், ஒரு பிஸ்கட்டில் 15-ம், ஒரு டீஸ்பூன் எண்ணெயில் 20 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது.
100 மில்லி லிட்டர் தாய்ப்பாலில் 70 கலோரி சத்தும், 3 கிராம் புரதமும் இருக்கிறது. ஒரு முட்டையில் 70 கலோரி அளவுக்கு சத்தும், 7 கிராம் புரதமும் இருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு அவசியம் முட்டையும், சரிவிகித உணவும் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக பால், முட்டை, காய்கறி, பழங்கள் இவற்றில் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து ஆரோக்கியத்துக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு இவற்றை சிறு வயதிலேயே உண்ண கொடுத்து வளர்க்க வேண்டும்.அதேபோல் அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் முடிந்தவரை அசைவ உணவிலான சூப் வகைகளை குடிப்பதும், இறைச்சி உண்பதும் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு அவசியம் தேவை.
இதுபோன்ற அத்தியாவசிய உணவு முறைகளை தவிர்த்து பீட்சா, பர்கர் போன்ற துரித மற்றும் பாக்கெட் உணவுகளை உண்பதால் குறைந்த வயதில் குழந்தைகளின் எடை அதிகரித்து விடுகிறது. பொதுவாக பாக்கெட் உணவுகளால் அதிக கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது என்பதை அறியாமலேயே குழந்தைகளும் அதை உண்கிறார்கள்.
துரித, பாக்கெட் உணவுகளில் புரதச்சத்து இருக்காது. ஆனால் கொழுப்புசத்து அதிகம் இருக்கும். அதனால் எளிதில் உடல் பருமன் ஆகிவிடும். இதுபோன்று உடல் பருமன் உள்ள குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். சோம்பல் அதிகமிருக்கும். அதனால் மற்ற குழந்தைகளை விட அவர்களுக்கு புரிதல் சக்தி குறைந்து விடும். இதுபோன்ற காரணங்களால் அவர்கள் படிப்பில் பின்தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அதுமட்டுமின்றி உடல் பருமன் உள்ள குழந்தைகள் தங்களது வாழ்நாளில் 30 முதல் 35 வயதில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, மூட்டுவலி, நாளமில்லா சுரப்பிகள் சரிவர செயல்படாதநிலை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் சுறுசுறுப்பு இன்மை, அறிவில் பின்தங்கியநிலையும் உண்டாகும்.
இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, சிறுவயதில் சரிவிகித உணவு, சரியான நேரத்துக்கு சாப்பிடும் வழக் கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அதனால் அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சி பெருகும். அதனுடன் உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
குழந்தைகலின் வளர்ச்சி நிலைகள்
2 மாதங்கள் – புன்சிரிப்பு,லேசான சிரிப்பு
4 மாதங்கள் - கழுத்து நிற்பது,கை,கால்களை சிறித்ளவு அசைக்கும்
8 மாதங்கள் - எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காருதல்
12 மாதங்கள் - எழுந்து நிற்பது
பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்
தலையை ஒருபுறமாகத் திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக்கொண்டு இருக்கும்.
திடீரென்று உருவாகும் சத்தம் கேட்டு குழந்தையின் உடல் விறுக்கென்று சிலிர்த்துக் கொள்ளுதல்.
கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருத்தல்.
குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாகப் பிடித்து வைத்து கொள்ளுதல்.
குழந்தையிடம் ஏதாவது பொருள்,கைகளை கொடுத்தால் அவை தன்னுடைய உறுப்பால் ஒன்று என நினைத்துக் கொள்ளும்.
6 முதல் 12 வாரங்கள்
குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.
பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.
குழந்தை திடீரென அழுகும்
3 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகை சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.
குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.
குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.
அம்மாவை தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
6 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும்.
தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.
குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும்.
எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும்.
தாய் (அ) பிறர் உதவி செய்தால் அதை மறுத்து தானே செயல்பாட முயற்சி செய்யும்.
குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய உடல் எடையை நீட்டிய நிலையில் உள்ள கைகளைக் கொண்டு தாங்கிக்கொள்ளும்.
9 மாதங்கள்
கைகளை ஊன்றியோ ,எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும்
குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.
அருகிலுள்ள பொருள்களை தள்ளி விட ஆரம்பிக்கும்.
12 மாதங்கள்
குழந்தை எழுந்து நிற்கும்
தாத்தா,பாட்டி,மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.
வீட்டில் உள்ள பொருட்களையும் சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.
பிறரின் கையை பிடித்துக் கொண்டு நடக்க முயலும்.
18 மாதங்கள்
யாருடைய உதவியும் இல்லாமல் டம்ளரை,கப்பை பிடித்துக்கொண்டு குடிக்கும். பால் புட்டிகள் ஏதும் இனிமேல் தேவைப்படாது.
கீழே விழாமலும் தடுமாறாமலும் வீட்டில் நடை பழகும்.
ஓரிரு வார்த்தைகளை பேசப்பழகிவிடும்.
குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பித்துவிடும்.
உடல் நலக்குறைவான குழந்தைகள் நடக்க சிறிது கஷ்டப்படுவர்.
2 வருடங்கள்
கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும்.
கீழே விழாமல் ஓடிச் செல்லும்.
புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்க்க ஆர்வப்படும்.
தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும்.
பிறர் சொல்லுவதைத் திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.
உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.
3 வருடங்கள்
தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.
சில எளிய வகையான கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
பொருட்களை இங்கேயும் அங்கேயும் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும்.
குறைந்த பட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சொல்லும்.
மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்கும்.
4 வருடங்கள்
மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும்.
புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.
உறவினர்களிதம் கொஞ்சு மொழியில் பேசப் பழகும்
5 வருடங்கள்
துணிகளை உடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு சில பட்டன்களையாவது (பொத்தான்களை) போட்டுக்கொள்ளும்.
குறைந்த பட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும்
படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.
குதித்தும் தாண்டியும் செல்லத் தொடங்கும்.
வார்த்தை உச்சகட்டங்களை நன்றாக உச்சரிக்கும்.
உயரமாக வளர உதவும் உணவுகள், வழிமுறைகள்!
``குழந்தைகளின் உயரம் குறைவாக இருந்தால், அதற்கு மரபணு மட்டும் காரணமாக இருக்காது. உடல் வளர்ச்சி ஹார்மோன் தூண்டப்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். சரியான அளவில், போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடாததும், உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடாததும்தான் இந்தப் பிரச்னையை ஏற்படுத்தும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் உயரத்தை அதிகரிக்கும் மனித வளர்ச்சிக்கான ஹார்மோனை (Human Growth Hormone -HGH) சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பைத் தூண்டவும், அதைச் சீராக வைத்திருக்கவும் சில அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உயரமாக வளர கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள், சாப்பிடவேண்டிய சில உணவுகளைப் பார்ப்போம்...
ஆழ்ந்த தூக்கம்
தூங்கும்போது, திசுக்கள் புதுப்பிக்கப்படும். அதோடு, உடலும் சீராக வளர்ச்சியடையும். எனவே, உயரமாக வளர, உடலுக்குப் போதிய ஓய்வு தேவை. அதிலும், வயதுக்கேற்ற தூக்கம் அவசியம். சிறு வயதினர் (0-12) தினமும் 8-11 மணிநேரமும், பெரியவர்கள் 7-8 மணிநேரம் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்டால், நன்கு உயரமாக வளர முடியும்.
கால்சியம் சத்துள்ள உணவுகள்
ஒருவரின் எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், அவரின் உயரம் போதுமான அளவுக்கு இருக்காது. எலும்புகள் வலுப்படும்போதுதான் உயரம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எலும்புகள் வலிமையாவதற்குத் தேவை கால்சியம். பால்பொருள்கள், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகளில் கால்சியம் சத்துகள் நிறைவாக உள்ளன.
தண்ணீர்
காஃபைன், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் (வளர்ச்சிதை மாற்றம்) அதிகரிக்கும்; நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
வைட்டமின் டி
கால்சியம் சத்துகளை நம் உடல் கிரகித்துக்கொள்ளத் தேவையானது வைட்டமின் டி. அதேபோல, இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரியக்கூடியது. சூரிய ஒளி உடலில் படுவதால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. சிறு வயதிலேயே குழந்தைகளை வெயிலில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளச் செய்தால், அவர்களுக்கு வைட்டமின் டி எளிதாகக் கிடைக்கும்.
டயட் டைரி
தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு சில மாதங்களுக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிப்போம். அப்படி உணவு கொடுக்க ஆரம்பிக்கும் 6 மாதங்களுக்குப் பிறகான காலகட்டத்திலிருந்து 2 வயது வரை என்னென்ன உணவுகள் குழந்தைக்குக் கொடுக்கலாம் என்பது பற்றிய தெளிவு பெற்றோருக்கும், வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் இருக்க வேண்டும்.
திட உணவு
குழந்தைகளுக்கு முதல் 4-6 மாதம் வரை தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையின் தலை நின்ற பிறகு குழந்தை உட்கார ஆரம்பித்த பிறகு திட உணவை ஆரம்பிக்கவும். திட உணவை தேக்கரண்டியின் உதவியினால் கொடுப்பது குழந்தைக்கு எளிதாக இருக்கும். முதலில் தானிய உணவு கொடுக்க வேண்டும். அத்துடன் இரும்புச்சத்து சேர்த்து தரவேண்டும். பின்னர் பழம், காய்கறி மற்றும் இறைச்சி உணவு கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு உணவு தரும்போது நம் பாரம்பரிய உணவான சிறுதானியத்தை சிறிதளவாக கொடுத்து வந்தால், அந்தக் குழந்தை பிற்காலத்தில் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்படாது. இதனால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். உடல் வலிமை அதிகரிக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான எல்லா வகை ஊட்டச்சத்தும் சிறுதானியம் மூலம் கிடைக்கும்.
மேலும் குழந்தைக்கு இதுபோன்ற ஆரோக்கியமான உணவு கொடுத்து பழக்கும்போது அவர்கள் பெரிய வயது அடையும்போது இதுபோன்ற ஆரோக்கியமான உணவையே தேடுவார்கள். இது ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்க உதவும்.
எளிதாக குழந்தை உணவருந்த சில வழிகள்
- குழந்தைக்கு கொடுக்கும் திட உணவுகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகப்படுத்த வேண்டும்.
- திட உணவு அதிக உப்பு, காரம், இனிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
- குழந்தைக்கு கொடுக்கும் திட உணவு கைக்கு இதமான சூட்டில் இருப்பது அவசியம்.
- குழந்தையின் வயிறு சிறிதாக இருப்பதால் அதற்கு கொடுக்கும் உணவு சிறிய அளவில் இருக்க வேண்டும்.
- இடைவேளை விட்டு உணவை மறுபடியும் கொடுக்க வேண்டும்.
- உணவை உண்ணும் முன்னர் பால், பழரசம், இனிப்பு உணவு இவற்றை அதிகம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
இனிய சூழ்நிலையில் உணவூட்டுதல்
- குழந்தை சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் இருக்க பலவித உணவு அருந்துவது நல்லது. இப்பழக்கம் உடல் வளர்ச்சி தடையின்றி முன்னேற உறுதுணையாக இருக்கிறது.
- குழந்தைகள் உணவு அருந்தும்போது அவசரப்படுத்தாமல், தேவையான நேரத்தைக் கொடுக்கவும்.
- கட்டாயப்படுத்தி உணவு கொடுப்பது தவறானது. குழந்தையின் விருப்பு, வெறுப்பு அறிந்து அதன்படி உணவு அளிக்க வேண்டும்.
- சாப்பிடும்முன் படங்கள் வரைவது, புத்தகங்கள் படிப்பது போன்றவைசெய்தால் பசியைத் தூண்டும்.
1 - 2 வருடங்களில் குழந்தைக்கான வளர்ச்சி சில குழந்தைகள் வயதுக்கான வளர்ச்சி, திடமான உடல் அமைப்பு இல்லாமல் இருக்கும். இதுபோன்ற குழந்தைகளுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் அதிக சத்துள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் அவற்றை சரி செய்ய இயலும். குழந்தைக்கு எல்லாவித உணவு வகைகளும் கலந்து சரிவிகித உணவை ெகாடுக்க வேண்டும்.
பிள்ளைகள் வளர வளர அவர்களின் உணவுப் பழக்கம் மாறுபடும். அதனால், வளரும் குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை கொடுப்பது அவசியமானது. இந்த மாதிரி ஊட்டச்சத்து உள்ள உணவு கொடுப்பதால் பிள்ளைகளுக்கு வரக்கூடிய நோய்களை தடுக்க முடியும்.
சக்தியும் புரதச்சத்தும் தரும் உணவுகள்பால் மற்றும் பால் சார்ந்த உணவு, முட்டை, கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன், பருப்பு வகைகள் இவற்றில் அதிக புரதச்சத்து உள்ளது. வெண்ணெய், தேன், ஜாம், சர்க்கரை, வெல்லம், க்ரீம் போன்ற சக்தி அதிகம் உள்ளதை உணவில் கலந்து சாப்பிடவும்.
எண்ணெயில் பொரித்த பலகாரங்களை கொடுப்பதில் தவறு இல்லை. ஆனால், அவற்றில் உப்பு அதிகமாக இருக்கக் கூடாது. சாதம், பருப்பு இவற்றில் நெய் அல்லது வெண்ணெய் சேர்ப்பது நல்லது. சூப் கொடுக்கும்போது அதில் சிறிது முட்டை கலந்து வேக வைத்துக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு திட உணவை எந்த வயதில் அறிமுகப்படுத்தலாம்?
வயது உணவு
4 - 6 மாதம் - அரிசி, தானியம்
5 - 7 மாதம் - காய்கறி
6 - 8 மாதம் - பழம் மற்றும் பழச்சாறு.
7 - 9 மாதம் - மாமிசம் (மீன், கோழிக்கறி, பருப்பு வகைகள்)
8 - 10 மாதம் - பாலில் தயாரிக்கப்பட்ட உணவு.
9 - 11 மாதம் - வேக வைத்த முட்டையின் மஞ்சள் கரு மட்டுமே.
11 மாதம் - வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கரு.
11 மாதம் மேல் - பசும்பால்.
உணவு பாதுகாப்பு முறை
உணவு கெட்டுப்போய் விட்டால் அந்த உணவை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. உணவை தயாரிக்கும்போது சுத்தமான சூழ்நிலையில் சமைக்க வேண்டும். உணவை கையால் தொடுவதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தை உணவை சாப்பிடாவிட்டால் உணவைக் குளிர்பெட்டியில் வைக்கவும். அந்த உணவை ஒருமுறை மட்டும் சுடவைத்துக்
கொடுக்கவும்.
முதல் ஐந்து வருடங்களில் நல்ல சத்துள்ள உணவு முறையைப் பழக்கப்படுத்தினால் குழந்தைக்கு நல்ல உடல்நலமும் வளர்ச்சியும் கிடைக்கும். ஊட்டச்சத்துள்ள உணவை பழக்கப்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் நல்ல உடல் நலத்துடன் இருக்க முடியும்.
ஒவ்வொரு முறையும் உங்கள் குழந்தைகள் ஆடும்போதும், அசையும்போதும், ஓடும்போதும், குதிக்கும்போதும், உங்களை அணைக்கும்போதும் அவர்கள் மூளை உங்களை விடவும் செயல்திறன் மிக்கதாக இயங்குகிறது. ஒவ்வொரு புதிய அனுபவமும் குழந்தையின் மூளையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய தொடர்ச்சியான அனுபவங்கள் மூலம் அவர்களது ஆறு வயதில் மூளையானது 90 சதவிகித வளர்ச்சியை எட்டி விடுகிறது. உணர்வு ரீதியாகவும், சமூக அளவிலும் மூளையின் இயக்க திறன்களை அடைய 6 வயதுக்கு முன் உள்ள காலமே உகந்ததாகும். அவர்களது பார்வை திறம், கேட்கும் சக்தி போன்றவை மாற்றமடைந்து 6 வயதுக்கு முன்னரே அவர்களுடைய பழக்கங்கள் உருவாகி விடுகின்றன.
எல்லாக் குழந்தைகளும் ஒரே நிகழ்வு வரிசையின்படி வளருவார்கள். உதாரணமாக, எல்லாக் குழந்தைகளும் நடக்கக் கற்றுக் கொள்வதற்கு முன்னர் உட்காரக் கற்றுக் கொள்வார்கள். ஆயினும், சில பிள்ளைகள் உட்காருதல் மற்றும் நடத்தல் போன்ற விசேஷ முக்கிய சம்பவங்களை மிக விரைவில் எட்டுவார்கள். மற்றவர்கள் சற்றுத் தாமதமாக அடைவார்கள்.
பொதுவாகக் குழந்தைகள் மேலிருந்து கீழாக வளர்ச்சியடைவார்கள். வளர்ச்சியடையவேண்டிய முதற் காரியம் தலை அசைவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கழுத்துத் தசைகளை நேராக்குதல் ஆகும். அதற்குப் பின்னர், கை ஒருங்கிணைப்பு மேம்பாடு; இது ஒரு குழந்தை எப்படித் தவழுவது என்று கற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக அவனை முன்னோக்கி இழுக்க அனுமதிக்கும். ஒரு குழந்தைக்குத் தன் உடலின் கீழ்ப்பாகத்தை நன்கு கட்டுப்படுத்த முடியும்போது, தவழுவதற்கு அவனால் கைகளையும் முழங்கால்களையும் உபயோகிக்க முடியும். நடப்பதற்குக் கற்றுக்கொள்வதற்குத் தயார் செய்வதில் இவை எல்லாம் சம்பவிக்கும்.
ஓரு குழந்தையின் நடு நரம்புத் தொகுதி முதிர்ச்சியடையும் போது அவன் மேம்பாடடைகிறான். காலப்போக்கில், பொருட்களைப் பற்றிப் பிடித்தல் மற்றும் நடத்தல் போன்ற, அவன் குழந்தையாக இருந்தபோதிருந்த ஆரம்பகால அனிச்சையான அநேக செயல்கள் இப்போது மறைந்து விட்டன. குழந்தை தானாகவே முன்வந்து இயங்கக் கற்றுக்கொள்வதற்கு இந்த ஆரம்பகால அனிச்சையான செயல்கள் மறைந்துவிட வேண்டும். உதாரணமாக, வாழ்க்கையின் முதல் மாத முடிவில் நடப்பதற்கான அனிச்சையான செயல் மறைந்துவிடும். பொருளைப் பற்றிப் பிடிக்கும் அனிச்சையான செயல் இரண்டு அல்லது மூன்று மாத வயதில் மறைந்துவிடத் தொடங்கும். அத்துடன், வயது குறைந்த ஒருகுழந்தை தன் கைகள் மற்றும் கால்களை எல்லாத் திசைகளிலும் கட்டுப்பாடற்ற முறையில் அசைக்கும்போது, வயதுவந்த குழந்தை குறிப்பிட்ட சில பிரதிபலிப்பைக் காட்டக் கற்றுக்கொள்ளும்.
உங்கள் குழந்தையின் கண்பார்வை, காது கேட்டல், மற்றும் தொடர்பு கொள்ளுதல் போன்ற ஆற்றல்கள் அவனது வாழ்க்கையின் முதல் வருடத்தில் முன்னேற்றமடையும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதலில் அவர்களுக்கு முன்பாகவிருக்கும் 25 செமி (10 அங்குலம்) பொருட்களையே பார்க்கமுடிகையில், அவர்கள் எட்டு மாத வயதை அடையும்போது அவர்களின் கண்பார்வை பெரியவர்களின் கண்பார்வை அளவுக்குச் சமமாக முன்னேற்றமடையும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பிறக்கும்போதே காது கேட்கக் கூடியவர்களாயிருப்பார்கள். சத்தங்களுக்கு அவர்கள் பிரதிபலிக்கும் திறமை மற்றும் அவர்களின் பேச்சுத்தொடர்பு ஆற்றல் என்பன முதல் வருடம் முழுவதும் முன்னேற்றமடையும்.
இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், குழந்தைகள் அவர்களது 6 வயதுக்கு முன்னதாகவே, இந்த உலகத்தை சந்திக்கும் இயல்பை அடைந்து விடுகிறார்கள். குறிப்பாக, அவர்கள் மூளை செயல்திறன்கள் அளவில் மட்டுமல்லாமல், அதன் மொத்த அளவிலும் பெரியவர்களைவிடவும் பெரிதாக இருக்கும். அதாவது, கற்றல், நினைவுத்திறம், இயக்க நிலை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் கிட்டத்தட்ட அவர்களது 5-வது வயதிலேயே உருவாகி விடுகின்றன.
No comments:
Post a Comment