ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து. பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை..அது ஏன் என்றும் புரியவில்லை...(இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலோ???)ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு.அவர்கள் தான் வெயில்,மழை,தூசியிலும் செல்வார்கள்.ஆனால் அவங்க அழகின் மீது அக்கறை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம் ஆண்களும் அழகுக்குனு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும். வீட்டிலே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்..வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்
மோட்டார் சைக்கிளில் போகும் ஆண்கள் கைகளிலும், முகத்திலும் அரைமணி நேரத்துக்கு முன்பு சன்ஸ்க்ரீன் லோஷன்தடவிக் கொண்டால் சருமம் கறுக்காது.
முன்னாடி எல்லாம் ஆண்கள் தலைக்கு எண்ணை வைத்து அழுத்தி படிகிற மாதிரி தலைவாருவார்கள். இப்போது எல்லாம் ஆண்கள், பெண்களைப் பார்த்தவுடன் ஸ்டைலாக விரலால் தலையை கோதிவிடுகிறார்கள். அதனால் தினமும் தலைக்கு குளிக்கிறார்கள்.
தினமும் தலைமுடியை வாஷ் செய்தால் தலைமுடியிலுள்ள இயற்கையான எண்ணெய்ப் பசப்பு குறைந்து தலைமுடி உலர்ந்து போயிடும். வாரத்துக்கு ரெண்டு அல்லது மூன்று முறை தலைக்குக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
வெய்யிலில் அலைந்து திரிவதாலும், அதிக வேலையினாலும் எப்போதும் முகம் சோர்வாக தெரியும். அதற்கு சிறந்த பலன் கிடைக்க கூடியதானது, அரை கப் பப்பாளியுடன், கொஞ்சம் அவித்த பூசணிக்காயைச் சேர்த்து மசித்து எடுக்கவும், பின்னர் முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். களையிழந்த முகச்சருமம்பளிச்சிடும்.
ஆண்களின் முக அழகிற்கு: பொதுவாக அதிகமாக வெய்யிலில் சுற்றித்திரிபவர்களாகவே ஆண்கள் இருக்கின்றனர். இவ்வாறு வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவுங்கள். ஐஸ் கட்டியை ஒரு துணியில் மூடி ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் முகம் தெளிவடையும்.
சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும் பன்னீரும் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற விடவும். பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தினை கழுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும்.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.
சில ஆண்கள் சிகரெட் பிடிப்பதால் உதடுகள் கறுப்பாக இருக்கும். இவர்கள் பீற்றூட் சாறு, புதினா இலைச்சாறு அல்லது மாதுளை சாற்றை உதடுகளில் பூசிவர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.
ஆண்களின் முக அழகிற்கு: பொதுவாக அதிகமாக வெய்யிலில் சுற்றித்திரிபவர்களாகவே ஆண்கள் இருக்கின்றனர். இவ்வாறு வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவுங்கள். ஐஸ் கட்டியை ஒரு துணியில் மூடி ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் முகம் தெளிவடையும்.
சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும் பன்னீரும் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற விடவும். பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தினை கழுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும்.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.
சில ஆண்கள் சிகரெட் பிடிப்பதால் உதடுகள் கறுப்பாக இருக்கும். இவர்கள் பீற்றூட் சாறு, புதினா இலைச்சாறு அல்லது மாதுளை சாற்றை உதடுகளில் பூசிவர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.
வெள்ளரிக்காய் மாஸ்க்
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தில் இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.
தேன், முட்டை
தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் தடவலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும். தக்காளி பழ மாஸ்க் ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது.
நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.
வேப்பிலை மாஸ்க் (neem leaf mask):
வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும்.
இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம்.
வெங்காயம் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் காலை மற்றும் மாலையில் நான்கு தேய்த்து, பின் அந்த இடத்தில் தேனைத் தொட்டு தேய்க்க வேண்டும் இப்படி செய்வதால் முடி வளர தொடங்கும்.
தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். மேலும் கூந்தலும் நன்கு வளரும்.
செம்பருத்தி பூ, அவுரி விதை, காயவைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்குவதுடன் வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.
உதடுக்கு:
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.(தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)
பற்களுக்கு:
எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
தலைமுடி:
தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்
வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை சிறிது செம்பருத்தி பூ இதனை காய வைத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம்.
உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்
இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.
முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்
ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.
உள்ளாடைகள்:
உள்ளாடைகள் தேர்வு செய்யும் பொழுதும் அதிக கவனம் தேவை அதிக இருக்கமான உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை எப்பொழுதும் நல்லது.
கல்லுரிக்கு போகும் ஆணா நீங்கள் t-shirt போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், அசத்தலாக இருக்கும்.
இது போல் ஃபேஷன் என்று காது, கழுத்தில் எலும்புக்கூடு, மண்டை ஓடை, சைக்கள் செயின் போட வேண்டாம். இளம் இரத்தத்துக்கு அழகாக தெரிவது உங்களை பார்க்கும் பெண்களுக்கு பிடிக்காது.
வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க.
உடலின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு மனதை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் நிஜமான புன்னைகை எப்பொழுதும் முகத்தில் இருக்கனும்,பிறர் மீது அதிக கோபமோ, பொறாமை படுவது உங்களின் முக அழகை கெடுக்கும்.. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதே அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க...
"ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம்" அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும்.
முகம் வரட்சியினை போக்க:கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம்
ஒருமுறை பூசி வரலாம்.
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும். வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்.
No comments:
Post a Comment