Saturday, 6 October 2018

கறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை

கறிவேப்பிலை சட்னி


தாளிக்க
நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
கடுகு - 1/2 தேக்கரண்டி 

செய்முறை -
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுக்கவும். பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை வறுக்கவும்.
வறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.
ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.
இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.


கருவேப்பிலை பொடி

கருவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை, சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.

தாளிக்க
கருவேப்பிலை - 1 கப் (நன்கு அடைத்து அளக்கவும்)
உளுத்தம் பருப்பு - ½ கப்
சிகப்பு மிளகாய் - 8-10
துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
பெருங்காயம் - ¼ தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, முதலில் பெருங்காயம், மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக, மிதமான தீயில் வறுக்கவும்.
துருவிய தேங்காய் கடைசியாக சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும்.
அடுப்பை நிறுத்திவிட்டு, அந்த வாணலியில் சூட்டிலேயே கருவேப்பிலையை சேர்த்து, இரண்டு முறை வதக்கி, அப்படியே ஆறவிடவும்.
கருவேப்பிலை காய்ந்து, லேசாகவும் மொறுமொறுப்பாகவும் மாறிவிடும்.
மைக்ரோ வேவ் ஓவென் இருந்தால் அதில் மூன்று நிமிடம் வைத்து அப்படியே ஒரு 2 நிமிடம் விட்டாலும் மொறு மொறு என்று ஆகி விடும். ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும்.
ஆரிய பின், உளுத்தம் பருப்பு தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பொடி செய்யவும்.
கடைசியாக, உளுந்து சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
கருவேப்பிலையை நன்கு கழுவி, சுத்தம் செயது, ஒரு சுத்தமான துணியில் பரப்பி, நிழலிலேயே தண்ணீர் இல்லாமல் உலர்த்தவும். பிறகு தான் இந்த பொடியை செய்ய வேண்டும்.

கறிவேப்பிலை குழம்பு
கறிவேப்பிலையை சாப்பிட்டால், முடி நன்கு கருமையாக வளரும் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தும், அதனை நாம் தூக்கி எறிவோம். ஆனால் நீங்கள் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டுமென்று நினைத்தால், அந்த கறிவேப்பிலையை குழம்பு செய்து சாப்பிடுங்கள். இங்கு கறிவேப்பிலை குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



தேவையான பொருட்கள் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
கறிவேப்பிலை - 2 கப் வெந்தயம் - 1 டீஸ்பூன் 
வரமிளகாய் - 2 
பூண்டு - 15 
பற்கள் சீரகம் - 1 
டீஸ்பூன் கடுகு - 1 
டீஸ்பூன் புளி - 1 
சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் - 1 
டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 
டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 
டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1/4 
கப் உப்பு - 
தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... 
கடுகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கறிவேப்பிலையை சேர்த்து 5-10 நிமிடம் வறுத்து, அத்துடன் பாதி பூண்டை சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரனம், வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளித்து, பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்கவும். இறுதியில் சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அத்துடன் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை குழம்பு ரெடி!

Thursday, 4 October 2018

சரும பாதுகாப்பு

பருவநிலையில் மாற்றம் ஏற்படும் போது, உங்கள் சருமமும் மாறுகிறது. குறிப்பாக கோடை மற்றும் குளிர்காலத்தின் போது, நமது சருமம் வறண்டு போய் விடுகிறது. எந்த பருவநிலையாக இருந்தாலும் சரி, வறண்ட சருமத்தை கையாள நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கக் கூடிய சில எளிய தீர்வுகள் வருமாறு .

கோடைக் காலத்தில் உங்களுக்கு தேவைப்படுவது ஒரு லைட்டான, பிசுபிசுப்பு இல்லாத சரும மாய்ஸ்ட்ரைசர் மட்டுமே, இது உங்கள் சருமத்தை மிகவும் ஸ்டிக்கியாக இல்லாமல் இளக்கமாகவும், நீர்ச்சத்துடனும் வைத்திருக்கவும். இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது பாண்ட்ஸ் சில்க் க்ரீம் மாய்ஸ்சுரைசர், இது ஒரு 24-மணிநேர மாய்ஸ்ச்சர் லாக் ஃபார்முலா கொண்டது. இதனால் உங்கள் சருமம் வறண்டு போவது தடுக்கப்படுவதோடு, கோடைக் காலத்தில் உங்கள் சருமத்தை எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.

வெயில் காலத்தில் நம் சருமத்தை புறஊதாக் கதிர்களிடமிருந்து காக்க, உடலில் மெலனின் அதிகமாகச் சுரக்கிறது. இதுதான் நிறமாற்றத்துக்கான முக்கிய காரணம். சரியான நேரத்தில் பாரமரிப்பு எடுத்துக்கொண்டால், இது எளிதில் சரிசெய்துவிடும் விஷயமே. ஆனால், அந்த முயற்சிகளில் சரியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். விளம்பரங்களில் வரும் மாடல்களைப் பார்த்து மயங்கி, புதுப் புது கிரீம்களை உபயோகிப்பதில் பயனில்லை. எளிமையான பொருள்களைப் பயன்படுத்தியே சன் டேனிங்கை சரிசெய்துகொள்ளலாம். 

சோற்றுக்கற்றாழையை இரண்டாகக் கீறி, உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பொருளைத் தனியே எடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும். பிறகு, மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் போன்று அரைக்கவும். முகம், கை, கால்கள், கழுத்து என நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிடவும். சன் டேன் காணாமல் போகும். 

நன்கு பழுத்த தக்காளியின் சதைப் பகுதியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர், எட்டு சொட்டு தேன் கலந்து நன்கு கலக்கி, டேன் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிட்டால், நிறமாற்றம் பிரச்னையைச் சரிசெய்து விடலாம். 
சிறிதளவு காய்ச்சாத பால், பாதாம் நான்கு, கசகசா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். பாதாமை, தண்ணீரில் ஊறவைத்து, தோல் உரித்துக்கொள்ளவும். அதனுடன் கசகசா, பால் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து, டேனிங் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவிவிடவும். இப்படி தினமுமோ, வாரம் ஒரு முறையோ செய்தால் சன் டேனுக்கு டாட்டா சொல்லலாம். 
சந்தனத்தைச் சிறிது இழைத்து, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து, டேனிங் இடத்தில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும். வெயிலினால் ஏற்படக்கூடிய மற்ற சரும பிரச்னைகளும் வராது. 

குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது, அதனால் தான் உங்களுக்கு அதிகப்பட்ச பராமரிப்பு, மாய்ஸ்சுரைசிங் மற்றும் ஊட்டத்தை கொடுப்பதில் மிக சிறப்பானதாக பாண்ட்ஸ் கோல் க்ரீம் விளங்குகிறது. வறண்ட சருமம் கொண்ட மனிதர்களுக்கு இது அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. ‘‘குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். சரும வறட்சி பரம்பரைத் தன்மையால் சிலருக்கு  இயற்கையாகவே வரும். மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும்.  பருக்கள் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், அதிக நேரம் பயணத்தில் இருக்கிறவர்களுக்கும் இதே பிரச்னை  வரலாம். இதற்கு தண்ணீர் நிறைய குடிப்பது, நல்ல சோப்பை பயன்படுத்துவது, முடிந்தால் குளித்தபிறகு மாய்ஸ்சரைஸர்  பயன்படுத்துவது  போன்ற விஷயங்களைப் பின்பற்றினாலே போதும்.’’

‘‘வைட்டமின் டி’ யைப் பொறுத்தவரை சூரிய ஒளியில் இருந்து கிடைப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல.  எனவே, ‘வைட்டமின் டி’ பற்றாக்குறை இருந்தால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதே சரியானது. அதற்காக  பற்றாக்குறை இல்லாத பட்சத்தில் மாத்திரை எடுத்துக் கொண்டால் தேவையற்ற பக்கவிளைவுகள் உண்டாகும்  என்பதையும் மறக்கக்கூடாது.’’

‘‘இது தனிநபரின் உடல் அமைப்பைப் பொறுத்தது. சிலருக்கு முகம் முழுவதும் பருக்கள் இருந்தாலும் அது ஒரு  பிரச்னையாக இருக்காது. அழகியல் விஷயத்தில் கவனமாக இருப்பவர்கள் சின்ன சுருக்கம் ஏற்பட்டாலும் உடனடியாக  மருத்துவரைத் தேடி வந்துவிடுவார்கள். முடி கொட்டுகிற பிரச்னைக்குக்கூட முதலிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டு  விடுவது நல்லது. முடி நிறைய கொட்டிய பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கேற்றவாறுதான் பலன்  கிடைக்கும். 40 வயதில் சேதம் அடைந்துவிட்டது என்று வருவதைவிட 30 வயதிலேயே பார்ப்பது சிறந்தது.’’

‘‘தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வரும்போது நன்றாக முகம் கழுவிக் கொள்ள  வேண்டும். முடிந்தால் மைல்டு ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம். ஸ்க்ரப் உபயோகப்படுத்துவது சருமத்தை  சேதப்படுத்தும். அதனால் அதைத் தவிர்ப்பதே நல்லது. கருமையடைந்த இடத்தைத் தேய்ப்பதால் இன்னும் அதிகமாகக்  கருமையடையும். ஜங்க் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தலையில் எண்ணெய் வைத்து அழுத்தமாகத்  தேய்க்கக்கூடாது. மென்மையாக மசாஜ் செய்வதுபோல் தேய்ப்பதுதான் முடிக்கு பாதுகாப்பு!’’

சருமம் பளபளப்பாக

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும்.


சருமம் மிருதுவாக

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.


வறண்ட சருமத்தை பாதுகாக்க

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவுஎடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போவதோடு, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


கருமை நீங்க

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.

அழகை கெடுக்கும் தோல் சுருக்கம்
சிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். இதிலிருந்து தப்பிக்க இதோ வழி. தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம்.

முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.

இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும்.

வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.

மேலும் சில முறைகள்

அனைவருக்குமே அழகாகவும், வெள் ளையாகவும், முகம் பளபளப் பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண் டு.

இதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங் கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது.
இதற்கு ஒருசில இயற்கையான முறைகளை பின்பற்றினாலே அழகாக மாறலாம்.

முகத்தை கழுவுதல்
முகத்தில் தூசிகள் படிந்திருப்பதா ல் முகம் பொலிவின்றி காணப் படும்.
எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களி ன்றி இருக்கும்.

ஃபேஸ் பேக்
முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தி ல் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்கு கள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கை யாகவே அதிகரிக்கும்.

எலுமிச்சை
எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொரு ள். இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல் லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத் தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத் தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலி வோடு மின்னும்.

பழங்கள்
பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடிய வை.
எனவே இத்தகைய பழங்களை சாப்பி டுவதோடு சருமத்திற்கு தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சூரியக் கதிர்களின் தாக்கம்
சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும்.
எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும்.
அப்படியே வெயிலில் சுற்றினால் சருமத்தி ற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும்.
குறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும்.

தயிர் மசாஜ்
தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.

கிளின்சிங்
கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனை த்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப் படும்.

தண்ணீர் குடிக்கவும்
தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக் கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

உடற்பயிற்சி
முகத்தில் ஒரு நல்ல பொலிவு வரவேண்டு மெனில் மேற்கூறியவற்றுடன் தினமும் கா லையில் எழுந்து லேசான உடற்பயிற்சிக ளை தவறாமல் மேற்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, இயற்கையாகவே முகம் அழகாக இருக்கும்.

Wednesday, 3 October 2018

குழந்தைகளின் வளர்ச்சிக்கு

ஒவ்வொரு முறையும் உங்கள் குழந்தைகள் ஆடும்போதும், அசையும்போதும், ஓடும்போதும், குதிக்கும்போதும், உங்களை அணைக்கும்போதும் அவர்கள் மூளை உங்களை விடவும் செயல்திறன் மிக்கதாக இயங்குகிறது. ஒவ்வொரு புதிய அனுபவமும் குழந்தையின் மூளையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய தொடர்ச்சியான அனுபவங்கள் மூலம் அவர்களது ஆறு வயதில் மூளையானது 90 சதவிகித வளர்ச்சியை எட்டி விடுகிறது. உணர்வு ரீதியாகவும், சமூக அளவிலும் மூளையின் இயக்க திறன்களை அடைய 6 வயதுக்கு முன் உள்ள காலமே உகந்ததாகும். அவர்களது பார்வை திறம், கேட்கும் சக்தி போன்றவை மாற்றமடைந்து 6 வயதுக்கு முன்னரே அவர்களுடைய பழக்கங்கள் உருவாகி விடுகின்றன.  

இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், குழந்தைகள் அவர்களது 6 வயதுக்கு முன்னதாகவே, இந்த உலகத்தை சந்திக்கும் இயல்பை அடைந்து விடுகிறார்கள். குறிப்பாக, அவர்கள் மூளை செயல்திறன்கள் அளவில் மட்டுமல்லாமல், அதன் மொத்த அளவிலும் பெரியவர்களைவிடவும் பெரிதாக இருக்கும். அதாவது, கற்றல், நினைவுத்திறம், இயக்க நிலை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும்  கிட்டத்தட்ட அவர்களது 5-வது வயதிலேயே உருவாகி விடுகின்றன. 

பொதுவாக, மூளை சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புகள் மற்றும் வளர்ச்சி நிலை ஆகியவை இரண்டு காரணங்களால் மேலும், ஊக்கம் பெறுகின்றன. முதலாவது காரணம், எவ்வாறு மூளை உபயோகப்படுத்தப்படுகிறது என்பதாகும். அதாவது, குழந்தைகள் மூளை ஒவ்வொரு நாளும் எந்தெந்த வகைகளில் புதிய பொருட்கள் மூலம் தூண்டுதல் அடைகிறது என்பதைப் பொறுத்து, சிறப்பாக இயங்கத் துவங்குகிறது. குழந்தைகள் எவ்வளவு தூரம் விஷயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடனும், விதவிதமான  செயல்களை செய்வதிலும் ஈடுபடுகிறார்கள்..! பெற்றோர்களுக்கு நேரடி தொடர்பில்லாத பல காரியங்களையும் அவர்கள் செய்கிறார்கள்..!

பெரும்பாலான ஆரோக்கியமுள்ள, நிறைமாதத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் எடையை நான்கு மாதங்களில் இரட்டிப்பாகவும், முதற் பிறந்தநாளின்போது மும்மடங்காகவும் அதிகரிப்பார்கள்.

ஆயினும், எல்லாக் குழந்தைகளும் தங்கள் சொந்த வேகத்தில் வளருவார்கள் என்பதை மனதில் வைக்கவும். ஒரு சிறிய அல்லது பெரிய குழந்தை பரிபூரண ஆரோக்கியமுடையவனாயிருக்கலாம். அத்துடன், குழந்தைகளுக்கு வேக வளர்ச்சி மற்றும் எடை அதிகரிப்பதில் ஏற்ற இறக்கம் இருக்கிறது.

குழந்தை பிறந்ததும் ஒரு நாளைக்கு அதிக மணித்தியாலங்கள் நித்திரையிலேயே கழிக்கும். இது குழந்தைக்கு விருப்பமானதொரு ஓய்வை பெற்றுக்கொடுக்கும். படிப்படியாக நித்திரையின் அளவு குறைந்து குழந்தையின் முதல் வருடத்தினுள் குழந்தை பெற்றுக்கொள்ளும் அனுபவங்களை பற்றிய பல விடயங்கள் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன

குழந்தை பிறந்ததும் சுமார் 20 மணித்தியாலங்கள் நித்திரை கொள்ளும்.
குழந்தை பிறந்து முதல் முதல் மாத காலம் வரையில் 20 மணித்தியாலங்கள் நித்திரை கொள்ளும். தூங்கும் குழந்தைக்கு பசி எடுக்கும் போதே நித்திரையிலிருந்து விழிக்கும். நித்திரையிலிருந்து விழிக்கும் குழந்தை பாலருந்தி வயிறு நிரம்பி விட்டால் மீண்டும் நித்திரைக்கு செல்லும். நன்று வயிறு நிரம்பியிருந்தால் நீண்ட நேரம் நித்திரை கொள்ளும். இவ்வாறு பிறந்தவுடன் குழந்தை நித்திரை கொள்ளுமளவை பற்றி பயப்படத் தேவையில்லை. நித்திரை கொள்ளுமளவு குழந்தையின் வயதுடன் படிப்படியாக குறைவடையும். வயதுடன் குழந்தையின் நித்திரையில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள். முதல் 2 மாதங்கள் வரை குழந்தையின் நித்திரையில் ஏற்படும் மாற்றங்கள்

பிறந்தவுடனேயே குழந்தைக்கு பகல், இரவு என வேறுபடுத்தி அறிய முடியாது. எவ்வேளையும் நித்திரையிலேயே கழிக்கும். பசிக்கும் போது நித்திரை களையும் அதேவேளை மீண்டும் பாலூட்டி உடைகளை மாற்றி விட்டால் துங்கி விடும்.

2 – 4 மாத காலங்களில்  நித்திரையில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்
இரவு வேளையில் கூடிய நித்திரைக்கு குழந்தை பழக்கப்படும். பொதுவாக குழந்தை இரவு நேரத்தின் 2ஃ3 பகுதியை நித்திரை கொள்ளல் தாய்மார்களுக்கு சாதகமாக அமையும். 5 – 7 மாத காலத்தில் நித்திரையில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் நித்திரைக்கான கூடிய ஈடுபாட்டை குழந்தை காட்டாது. தன் தந்தையுடன் உறவாட விரும்பும். இரவில் தூக்கம் 8 – 9 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.

 8 – 12 மாத காலங்களில் நித்திரையில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்
பகல் நேர தூக்கம் இரண்டு சந்தர்ப்பங்களுக்கு மட்டுப்படுத்தப்படும். விளையாட்டுகளுக்கு கூடிய நேரம் ஒதுக்கப்படுவதுடன் இரவுத்தூக்கம் 8 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படும். இவ்வாறான அறிகுறிகளின் மூலம் குழந்தைக்கு தைரோட்சின் குறைபாடு உள்ளதென்பதை ஊகிக்கலாம். இக்குழந்தைகள் கூடிய தூக்க மயக்கத்தில் இருப்பதோடு வயிறு நிரம்பாத சந்தர்ப்பங்களில் கூட நித்திரைக் கொள்வதை காணலாம்.

தைரொட்சின் ஹோமோன் தைரொயிட் சுரப்பியினால் சுரக்கப்படுவதுடன் அயடின் எனும் கனியுப்பின் மூலம் இச்சுரப்பு கட்டுப்படுத்தப்படும். உடலுக்கு கிடைக்கும் அயடினின் அளவு குறையும் போது தைரொட்சின் சுரப்பினளவு குறையும். இதனால் குழந்தையின் சுறுசுறுப்புத்தன்மை படிப்படியாகக் குறைவடைந்து ஆழ்ந்த தூக்க மயக்கத்தில் குழந்தை காணப்படும்.

நித்திரையின்மைக்கான வேறு காரணங்கள் 
  • குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலி
  • காது வலியினால் பாதிப்புறுதல்
  • மூக்கடைத்தல்
  • உடலில் ஏற்படும் வேறு நோய் நிலைமைகள்


இவ்வாறான வேறுபட்ட பிரச்சினைகள் குழந்தைக்கு காணப்படுமாயின் குழந்தையின் நித்திரை பாதிப்படையும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தூக்கத்திலிருக்கும் குழந்தை எழுந்து அழும். இங்கு குழந்தைக்கு ஏதோ அசௌகரியமான நிலைமை ஏற்பட்டிருப்பதை விளங்கிக் கொள்ளல் வேண்டும். மேலும், வீட்டில் இருக்கும் அசாதாரண சத்தங்களும் குழந்தையின் சீரான நித்திரையைப் பாதிப்புறச் செய்யும்.

தூங்கும் குழந்தைக்கு செய்யக் கூடாதவை
பலாத்காரமான முறையில் எழுப்பி, உணவுப் பான வகைகள், பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இது குழந்தையின் போசனைக்கு மட்டுமன்றி உள வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு நித்திரை அத்தியாவசியமாகும் 
குழந்தை பிறந்தவுடன், சுமார் 20 மணத்தியாலங்கள் நித்திரை கொள்ளல் ஒரு சாதாரண நிலைமை ஆகும். நித்திரையின்போது, சில ஹோமோன்களின் சுரப்பு அதிகளவில் நடைபெறும். இதனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான நித்திரை அவசியமாகும்.

குழந்தையின் நித்திரை குறைதல், நித்திரையின்மை எனும் இரண்டு விடயங்களும் குழந்தையின் வளர்ச்சியை குறைக்கும்.

ஒரு வருடமளவு கழியும் போது குழந்தையின் நித்திரையின் அளவில் கணிசமான மாற்றங்களைக் காணலாம். இவ்வயதில் குழந்தை 8-12 மணத்தியாலங்களுக்கு நித்திரை கொள்ளும்.

சிலவேளைகளில், சுரப்பத்தில் உள்ள நித்திரை கொள்ளும் நேரங்களை முழுமையாக மாற்றும் குழந்தைகளும் இரு;ககின்றனர். இவ்வாறான குழந்தைகளின் காலை வேளையின் தூக்கம் தாமதமாகுமாயின், மாலை வேளையில் தூக்கம் இந்த நேரத்துக்கு முன் நிலையைக் காணலாம். இது சாதாரண நிலையாகும்.

குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயளாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்பதனை பெற்றோர்கள் உணர வேண்டும். பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான  மூளை உணவு: 
மீன் புரதம் மற்றும் "ஆரோக்கியமான" கொழுப்பின், அடங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு மீன் தேர்ந்தெடுக்கும் போது,ஒமேகா -௩ அதிகம் இருப்பதையும் அதிக மெர்குரி உள்ளடக்கத்தை இருப்பதையும்  தவிர்க்கவேண்டும்

அதிக அளவிலான மெர்குரி உள்ளடக்கம் இருப்பதால், சுறா, வாளமீன் , டைல் மீன் என்பதை குழந்தைகளுக்கு யு.எஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) தடைவிதித்துள்ளது.

சூறை மீன், கானாங்கேளுத்தி மீன் ,நெத்திலி, மத்தி, சால்மன், காட் மற்றும் கேளூரு  மீன் ஆகியவற்றில் மெர்குரி உள்ளடக்கம் குறைவு .

ருசிப்பதற்கான மீன் சமையல்!

"சின்ன வயதிலே சுவை அறிமுகப்படுத்துவது நல்லது" ஜெனிபர் பியோட்-மார்ட்டின், ஆய்வின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் TLC  - யில் தெரிவிக்கிறார்."ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்க வேண்டும்."

குழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் திட உணவை ஆரம்பிக்கலாம்.இதில் மசித்த மீனும் அடங்கும். குறிப்பிட்ட சில மீன்களுக்கு ஒவ்வாமை இருக்கக்கூடாது என்று உறுதிப்படுத்தவேண்டும். மேலும், எலும்புகள் இருக்கிறதா என்று சோதித்து பார்க்கவேண்டும். தொண்டையில் சிக்கும் வாய்ப்புகள் இதில் அதிகம்.

பொதுவாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து என்ற 3 வகையான சத்துக்கள் தேவைப்படுகிறது. அதில் மாவுச்சத்து, உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. புரதச்சத்து, தசை, எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து, மூளை, நரம்பு மண்டல வளர்ச்சி, நாளமில்லா சுரப்பிகள் சுரப்பதற்கும் உதவுகிறது. இந்த சத்துகள் அனைத்தும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.குழந்தைகள் பிறந்தபோது இருந்த எடையை விட 2 வருடத்தில் 4 மடங்கு அதிகரிக்கும். எனவேதான் அவர்களுக்கு தாய்ப்பால், ஊட்டச்சத்து ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும்.

அதன்பிறகு, அதாவது 2 வயதுக்குப்பின் ஒவ்வொரு வருடத்துக்கும் 2 கிலோ எடை அதிகரிக்கும். 6 சென்டிமீட்டர் உயரம் வளர்வார்கள். அந்த காலகட்டத்தில் சரிவிகித உணவு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பொதுவாக இந்த காலகட்டத்தை உடல் அதிவேக வளர்ச்சியுறும் காலம் என்பார்கள். இதனை வளர்இளம் பருவம் என்றும் கூறுவதுண்டு.இந்த வளர்ச்சி காலம் என்பது அவர்களின் 14 முதல் 16 வயது வரை இருக்கும். அதனால் சரிவிகித உணவு வழங்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக குழந்தையின் எடையில் சராசரியாக 1 கிலோவுக்கு 110 கலோரி அளவுக்கு சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு இட்லியில் 50 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது. தோசையில் 100-ம், உப்புமாவில் 250-ம், ஒரு பிஸ்கட்டில் 15-ம், ஒரு டீஸ்பூன் எண்ணெயில் 20 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது.

100 மில்லி லிட்டர் தாய்ப்பாலில் 70 கலோரி சத்தும், 3 கிராம் புரதமும் இருக்கிறது. ஒரு முட்டையில் 70 கலோரி அளவுக்கு சத்தும், 7 கிராம் புரதமும் இருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு அவசியம் முட்டையும், சரிவிகித உணவும் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக பால், முட்டை, காய்கறி, பழங்கள் இவற்றில் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து ஆரோக்கியத்துக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு இவற்றை சிறு வயதிலேயே உண்ண கொடுத்து வளர்க்க வேண்டும்.அதேபோல் அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் முடிந்தவரை அசைவ உணவிலான சூப் வகைகளை குடிப்பதும், இறைச்சி உண்பதும் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு அவசியம் தேவை.

இதுபோன்ற அத்தியாவசிய உணவு முறைகளை தவிர்த்து பீட்சா, பர்கர் போன்ற துரித மற்றும் பாக்கெட் உணவுகளை உண்பதால் குறைந்த வயதில் குழந்தைகளின் எடை அதிகரித்து விடுகிறது. பொதுவாக பாக்கெட் உணவுகளால் அதிக கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது என்பதை அறியாமலேயே குழந்தைகளும் அதை உண்கிறார்கள்.

துரித, பாக்கெட் உணவுகளில் புரதச்சத்து இருக்காது. ஆனால் கொழுப்புசத்து அதிகம் இருக்கும். அதனால் எளிதில் உடல் பருமன் ஆகிவிடும். இதுபோன்று உடல் பருமன் உள்ள குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். சோம்பல் அதிகமிருக்கும். அதனால் மற்ற குழந்தைகளை விட அவர்களுக்கு புரிதல் சக்தி குறைந்து விடும். இதுபோன்ற காரணங்களால் அவர்கள் படிப்பில் பின்தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதுமட்டுமின்றி உடல் பருமன் உள்ள குழந்தைகள் தங்களது வாழ்நாளில் 30 முதல் 35 வயதில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, மூட்டுவலி, நாளமில்லா சுரப்பிகள் சரிவர செயல்படாதநிலை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் சுறுசுறுப்பு இன்மை, அறிவில் பின்தங்கியநிலையும் உண்டாகும்.

இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, சிறுவயதில் சரிவிகித உணவு, சரியான நேரத்துக்கு சாப்பிடும் வழக் கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அதனால் அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சி பெருகும். அதனுடன் உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

குழந்தைகலின் வளர்ச்சி நிலைகள்

2 மாதங்கள் – புன்சிரிப்பு,லேசான சிரிப்பு

4 மாதங்கள் - கழுத்து நிற்பது,கை,கால்களை சிறித்ளவு அசைக்கும்

8 மாதங்கள் - எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காருதல்

12 மாதங்கள் - எழுந்து நிற்பது

பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்

தலையை ஒருபுறமாகத் திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக்கொண்டு இருக்கும்.

திடீரென்று உருவாகும் சத்தம் கேட்டு குழந்தையின் உடல் விறுக்கென்று சிலிர்த்துக் கொள்ளுதல்.

கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருத்தல்.

குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாகப் பிடித்து வைத்து கொள்ளுதல்.

குழந்தையிடம் ஏதாவது பொருள்,கைகளை கொடுத்தால் அவை தன்னுடைய உறுப்பால் ஒன்று என நினைத்துக் கொள்ளும்.

6 முதல் 12 வாரங்கள்
குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.
பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.
குழந்தை திடீரென அழுகும்

3 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகை சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.
குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.
குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.
அம்மாவை தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.

6 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும்.
தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.
குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும்.
எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும்.
தாய் (அ) பிறர் உதவி செய்தால் அதை மறுத்து தானே செயல்பாட முயற்சி செய்யும்.
குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய உடல் எடையை நீட்டிய நிலையில் உள்ள கைகளைக் கொண்டு தாங்கிக்கொள்ளும்.

9 மாதங்கள்
கைகளை ஊன்றியோ ,எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும்
குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.
அருகிலுள்ள பொருள்களை தள்ளி விட ஆரம்பிக்கும்.

12 மாதங்கள்
குழந்தை எழுந்து நிற்கும்
தாத்தா,பாட்டி,மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.
வீட்டில் உள்ள பொருட்களையும் சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.
பிறரின் கையை பிடித்துக் கொண்டு நடக்க முயலும்.

18 மாதங்கள்
யாருடைய உதவியும் இல்லாமல் டம்ளரை,கப்பை பிடித்துக்கொண்டு குடிக்கும். பால் புட்டிகள் ஏதும் இனிமேல் தேவைப்படாது.
கீழே விழாமலும் தடுமாறாமலும் வீட்டில் நடை பழகும்.
ஓரிரு வார்த்தைகளை பேசப்பழகிவிடும்.
குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பித்துவிடும்.
உடல் நலக்குறைவான குழந்தைகள் நடக்க சிறிது கஷ்டப்படுவர்.

2 வருடங்கள்
கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும்.
கீழே விழாமல் ஓடிச் செல்லும்.
புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்க்க ஆர்வப்படும்.
தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும்.
பிறர் சொல்லுவதைத் திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.
உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.

3 வருடங்கள்
தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.
சில எளிய வகையான கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
பொருட்களை இங்கேயும் அங்கேயும் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும்.
குறைந்த பட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சொல்லும்.
மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்கும்.

4 வருடங்கள்
மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும்.
புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.
உறவினர்களிதம் கொஞ்சு மொழியில் பேசப் பழகும்

5 வருடங்கள்
துணிகளை உடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு சில பட்டன்களையாவது (பொத்தான்களை) போட்டுக்கொள்ளும்.
குறைந்த பட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும்
படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.
குதித்தும் தாண்டியும் செல்லத் தொடங்கும்.
வார்த்தை உச்சகட்டங்களை நன்றாக உச்சரிக்கும்.

உயரமாக வளர உதவும் உணவுகள், வழிமுறைகள்!
``குழந்தைகளின் உயரம் குறைவாக இருந்தால், அதற்கு மரபணு மட்டும் காரணமாக இருக்காது. உடல் வளர்ச்சி ஹார்மோன் தூண்டப்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். சரியான அளவில், போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடாததும், உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடாததும்தான் இந்தப் பிரச்னையை ஏற்படுத்தும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள். 

நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் உயரத்தை அதிகரிக்கும் மனித வளர்ச்சிக்கான ஹார்மோனை (Human Growth Hormone -HGH) சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பைத் தூண்டவும், அதைச் சீராக வைத்திருக்கவும் சில அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உயரமாக வளர  கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள், சாப்பிடவேண்டிய சில உணவுகளைப் பார்ப்போம்...

ஆழ்ந்த தூக்கம்
தூங்கும்போது, திசுக்கள் புதுப்பிக்கப்படும். அதோடு, உடலும் சீராக வளர்ச்சியடையும். எனவே, உயரமாக வளர, உடலுக்குப் போதிய ஓய்வு தேவை. அதிலும், வயதுக்கேற்ற தூக்கம் அவசியம். சிறு வயதினர் (0-12) தினமும் 8-11 மணிநேரமும், பெரியவர்கள் 7-8 மணிநேரம் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்டால், நன்கு உயரமாக வளர முடியும்.  

கால்சியம்  சத்துள்ள உணவுகள்
ஒருவரின் எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், அவரின் உயரம் போதுமான அளவுக்கு இருக்காது. எலும்புகள் வலுப்படும்போதுதான் உயரம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எலும்புகள் வலிமையாவதற்குத் தேவை கால்சியம். பால்பொருள்கள், முட்டை, மீன்,  காளான், பச்சை நிறக் காய்கறிகளில் கால்சியம் சத்துகள் நிறைவாக உள்ளன.

தண்ணீர்
காஃபைன், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் (வளர்ச்சிதை மாற்றம்) அதிகரிக்கும்; நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

வைட்டமின் டி
கால்சியம் சத்துகளை நம் உடல் கிரகித்துக்கொள்ளத் தேவையானது வைட்டமின் டி. அதேபோல, இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரியக்கூடியது. சூரிய ஒளி உடலில் படுவதால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. சிறு வயதிலேயே குழந்தைகளை வெயிலில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளச் செய்தால், அவர்களுக்கு வைட்டமின் டி எளிதாகக் கிடைக்கும்.

டயட் டைரி
தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு சில மாதங்களுக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிப்போம். அப்படி உணவு கொடுக்க ஆரம்பிக்கும் 6 மாதங்களுக்குப் பிறகான காலகட்டத்திலிருந்து 2 வயது வரை என்னென்ன உணவுகள் குழந்தைக்குக் கொடுக்கலாம் என்பது பற்றிய தெளிவு பெற்றோருக்கும், வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் இருக்க வேண்டும். 

திட உணவு
குழந்தைகளுக்கு முதல் 4-6 மாதம் வரை தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையின் தலை நின்ற பிறகு குழந்தை உட்கார ஆரம்பித்த பிறகு திட உணவை ஆரம்பிக்கவும். திட உணவை தேக்கரண்டியின் உதவியினால் கொடுப்பது குழந்தைக்கு எளிதாக இருக்கும். முதலில் தானிய உணவு கொடுக்க வேண்டும். அத்துடன் இரும்புச்சத்து சேர்த்து  தரவேண்டும். பின்னர் பழம், காய்கறி மற்றும் இறைச்சி உணவு கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு உணவு தரும்போது நம் பாரம்பரிய உணவான சிறுதானியத்தை சிறிதளவாக கொடுத்து வந்தால், அந்தக் குழந்தை பிற்காலத்தில் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்படாது. இதனால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். உடல் வலிமை அதிகரிக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான எல்லா வகை ஊட்டச்சத்தும் சிறுதானியம் மூலம் கிடைக்கும்.

மேலும் குழந்தைக்கு இதுபோன்ற ஆரோக்கியமான உணவு கொடுத்து பழக்கும்போது அவர்கள் பெரிய வயது அடையும்போது இதுபோன்ற ஆரோக்கியமான உணவையே தேடுவார்கள். இது ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்க உதவும்.

எளிதாக குழந்தை உணவருந்த சில வழிகள்

  • குழந்தைக்கு கொடுக்கும் திட உணவுகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகப்படுத்த வேண்டும்.
  • திட உணவு அதிக உப்பு, காரம், இனிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
  • குழந்தைக்கு கொடுக்கும் திட உணவு கைக்கு இதமான சூட்டில் இருப்பது அவசியம்.
  • குழந்தையின் வயிறு சிறிதாக இருப்பதால் அதற்கு கொடுக்கும் உணவு சிறிய அளவில் இருக்க வேண்டும்.
  • இடைவேளை விட்டு உணவை மறுபடியும் கொடுக்க வேண்டும்.
  • உணவை உண்ணும் முன்னர் பால், பழரசம், இனிப்பு உணவு இவற்றை அதிகம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.


இனிய சூழ்நிலையில் உணவூட்டுதல்
  • குழந்தை சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் இருக்க பலவித உணவு அருந்துவது நல்லது. இப்பழக்கம் உடல் வளர்ச்சி தடையின்றி முன்னேற உறுதுணையாக இருக்கிறது. 
  • குழந்தைகள் உணவு அருந்தும்போது அவசரப்படுத்தாமல், தேவையான நேரத்தைக் கொடுக்கவும்.
  • கட்டாயப்படுத்தி உணவு கொடுப்பது தவறானது. குழந்தையின் விருப்பு, வெறுப்பு அறிந்து அதன்படி உணவு அளிக்க வேண்டும்.
  • சாப்பிடும்முன் படங்கள் வரைவது, புத்தகங்கள் படிப்பது போன்றவைசெய்தால் பசியைத் தூண்டும்.


1 - 2 வருடங்களில் குழந்தைக்கான வளர்ச்சி சில குழந்தைகள் வயதுக்கான வளர்ச்சி, திடமான உடல் அமைப்பு இல்லாமல் இருக்கும். இதுபோன்ற குழந்தைகளுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் அதிக சத்துள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் அவற்றை சரி செய்ய இயலும். குழந்தைக்கு எல்லாவித உணவு வகைகளும் கலந்து சரிவிகித உணவை ெகாடுக்க வேண்டும்.

பிள்ளைகள் வளர வளர அவர்களின் உணவுப் பழக்கம் மாறுபடும். அதனால், வளரும் குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை கொடுப்பது அவசியமானது. இந்த மாதிரி ஊட்டச்சத்து உள்ள உணவு கொடுப்பதால் பிள்ளைகளுக்கு வரக்கூடிய நோய்களை தடுக்க முடியும்.

சக்தியும் புரதச்சத்தும் தரும் உணவுகள்பால் மற்றும் பால் சார்ந்த உணவு, முட்டை, கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன், பருப்பு வகைகள் இவற்றில் அதிக புரதச்சத்து உள்ளது. வெண்ணெய், தேன், ஜாம், சர்க்கரை, வெல்லம், க்ரீம் போன்ற சக்தி அதிகம் உள்ளதை உணவில் கலந்து சாப்பிடவும். 

எண்ணெயில் பொரித்த பலகாரங்களை கொடுப்பதில் தவறு இல்லை. ஆனால், அவற்றில் உப்பு அதிகமாக இருக்கக் கூடாது. சாதம், பருப்பு இவற்றில் நெய் அல்லது வெண்ணெய் சேர்ப்பது நல்லது. சூப் கொடுக்கும்போது அதில் சிறிது முட்டை கலந்து வேக வைத்துக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு திட உணவை எந்த வயதில் அறிமுகப்படுத்தலாம்?
வயது                 உணவு
4 - 6 மாதம்   -  அரிசி, தானியம்
5 - 7 மாதம்   -  காய்கறி
6 - 8 மாதம்   -  பழம் மற்றும் பழச்சாறு.
7 - 9 மாதம்   -  மாமிசம் (மீன், கோழிக்கறி, பருப்பு வகைகள்)
8 - 10 மாதம்  -  பாலில் தயாரிக்கப்பட்ட உணவு.
9 - 11 மாதம்  -  வேக வைத்த முட்டையின் மஞ்சள் கரு மட்டுமே.
11  மாதம்     -  வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கரு.
11 மாதம் மேல் - பசும்பால்.

உணவு பாதுகாப்பு முறை
உணவு கெட்டுப்போய் விட்டால் அந்த உணவை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. உணவை தயாரிக்கும்போது சுத்தமான சூழ்நிலையில் சமைக்க வேண்டும். உணவை கையால் தொடுவதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். 

குழந்தை உணவை சாப்பிடாவிட்டால் உணவைக் குளிர்பெட்டியில் வைக்கவும். அந்த உணவை ஒருமுறை மட்டும் சுடவைத்துக் 
கொடுக்கவும்.

முதல் ஐந்து வருடங்களில் நல்ல சத்துள்ள உணவு முறையைப் பழக்கப்படுத்தினால் குழந்தைக்கு நல்ல உடல்நலமும் வளர்ச்சியும் கிடைக்கும். ஊட்டச்சத்துள்ள உணவை பழக்கப்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் நல்ல உடல் நலத்துடன் இருக்க முடியும்.

ஒவ்வொரு முறையும் உங்கள் குழந்தைகள் ஆடும்போதும், அசையும்போதும், ஓடும்போதும், குதிக்கும்போதும், உங்களை அணைக்கும்போதும் அவர்கள் மூளை உங்களை விடவும் செயல்திறன் மிக்கதாக இயங்குகிறது. ஒவ்வொரு புதிய அனுபவமும் குழந்தையின் மூளையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய தொடர்ச்சியான அனுபவங்கள் மூலம் அவர்களது ஆறு வயதில் மூளையானது 90 சதவிகித வளர்ச்சியை எட்டி விடுகிறது. உணர்வு ரீதியாகவும், சமூக அளவிலும் மூளையின் இயக்க திறன்களை அடைய 6 வயதுக்கு முன் உள்ள காலமே உகந்ததாகும். அவர்களது பார்வை திறம், கேட்கும் சக்தி போன்றவை மாற்றமடைந்து 6 வயதுக்கு முன்னரே அவர்களுடைய பழக்கங்கள் உருவாகி விடுகின்றன. 

எல்லாக் குழந்தைகளும் ஒரே நிகழ்வு வரிசையின்படி வளருவார்கள். உதாரணமாக, எல்லாக் குழந்தைகளும் நடக்கக் கற்றுக் கொள்வதற்கு முன்னர் உட்காரக் கற்றுக் கொள்வார்கள். ஆயினும், சில பிள்ளைகள் உட்காருதல் மற்றும் நடத்தல் போன்ற விசேஷ முக்கிய சம்பவங்களை மிக விரைவில் எட்டுவார்கள். மற்றவர்கள் சற்றுத் தாமதமாக அடைவார்கள்.

பொதுவாகக் குழந்தைகள் மேலிருந்து கீழாக வளர்ச்சியடைவார்கள். வளர்ச்சியடையவேண்டிய முதற் காரியம் தலை அசைவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கழுத்துத் தசைகளை நேராக்குதல் ஆகும். அதற்குப் பின்னர், கை ஒருங்கிணைப்பு மேம்பாடு; இது ஒரு குழந்தை எப்படித் தவழுவது என்று கற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக அவனை முன்னோக்கி இழுக்க அனுமதிக்கும். ஒரு குழந்தைக்குத் தன் உடலின் கீழ்ப்பாகத்தை நன்கு கட்டுப்படுத்த முடியும்போது, தவழுவதற்கு அவனால் கைகளையும் முழங்கால்களையும் உபயோகிக்க முடியும். நடப்பதற்குக் கற்றுக்கொள்வதற்குத் தயார் செய்வதில் இவை எல்லாம் சம்பவிக்கும்.

ஓரு குழந்தையின் நடு நரம்புத் தொகுதி முதிர்ச்சியடையும் போது அவன் மேம்பாடடைகிறான். காலப்போக்கில், பொருட்களைப் பற்றிப் பிடித்தல் மற்றும் நடத்தல் போன்ற, அவன் குழந்தையாக இருந்தபோதிருந்த ஆரம்பகால அனிச்சையான அநேக செயல்கள் இப்போது மறைந்து விட்டன. குழந்தை தானாகவே முன்வந்து இயங்கக் கற்றுக்கொள்வதற்கு இந்த ஆரம்பகால அனிச்சையான செயல்கள் மறைந்துவிட வேண்டும். உதாரணமாக, வாழ்க்கையின் முதல் மாத முடிவில் நடப்பதற்கான அனிச்சையான செயல் மறைந்துவிடும். பொருளைப் பற்றிப் பிடிக்கும் அனிச்சையான செயல் இரண்டு அல்லது மூன்று மாத வயதில் மறைந்துவிடத் தொடங்கும். அத்துடன், வயது குறைந்த ஒருகுழந்தை தன் கைகள் மற்றும் கால்களை எல்லாத் திசைகளிலும் கட்டுப்பாடற்ற முறையில் அசைக்கும்போது, வயதுவந்த குழந்தை குறிப்பிட்ட சில பிரதிபலிப்பைக் காட்டக் கற்றுக்கொள்ளும். 

உங்கள் குழந்தையின் கண்பார்வை, காது கேட்டல், மற்றும் தொடர்பு கொள்ளுதல் போன்ற ஆற்றல்கள் அவனது வாழ்க்கையின் முதல் வருடத்தில் முன்னேற்றமடையும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதலில் அவர்களுக்கு முன்பாகவிருக்கும் 25 செமி (10 அங்குலம்) பொருட்களையே பார்க்கமுடிகையில், அவர்கள் எட்டு மாத வயதை அடையும்போது அவர்களின் கண்பார்வை பெரியவர்களின் கண்பார்வை அளவுக்குச் சமமாக முன்னேற்றமடையும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பிறக்கும்போதே காது கேட்கக் கூடியவர்களாயிருப்பார்கள். சத்தங்களுக்கு அவர்கள் பிரதிபலிக்கும் திறமை மற்றும் அவர்களின் பேச்சுத்தொடர்பு ஆற்றல் என்பன முதல் வருடம் முழுவதும் முன்னேற்றமடையும்.

இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், குழந்தைகள் அவர்களது 6 வயதுக்கு முன்னதாகவே, இந்த உலகத்தை சந்திக்கும் இயல்பை அடைந்து விடுகிறார்கள். குறிப்பாக, அவர்கள் மூளை செயல்திறன்கள் அளவில் மட்டுமல்லாமல், அதன் மொத்த அளவிலும் பெரியவர்களைவிடவும் பெரிதாக இருக்கும். அதாவது, கற்றல், நினைவுத்திறம், இயக்க நிலை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும்  கிட்டத்தட்ட அவர்களது 5-வது வயதிலேயே உருவாகி விடுகின்றன. 

Monday, 1 October 2018

கறிவேப்பிலையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைஇலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளர்கின்றன. இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன. தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம். தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம்.
இங்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்த கறிவேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம். ஆனால் இந்தக் கறிவேப்பிலையின் நன்மைகள் ஒருசிலர் (பலர் என்று கூடச் சொல்லலாம்) தெரியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் சாப்பாட்டிலிருந்துத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். தூக்கி எரியாமல் உண்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்த கறிவேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர்.
கொழுப்புக்கள் கரையும்: காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
இரத்த சோகை: இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது மட்டும் இரத்த சோகைக்கான (Anemia) காரணம் இல்லை. இரும்புச்சத்தினை உறிஞ்சுவதிலும் உறிஞ்சிய இரும்புச் சத்தினைப் பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடும் இரத்தசோகைக்கான மற்றுமொரு காரணமாகும். கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் (Folic Acid) கொண்டுள்ளது. எலும்புகளை வலுவடையச் செய்வதில் போலிக் அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு கறிவேப்பிலைகள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வருவது இரத்த சோகைக்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.
சர்க்கரை நோய்:சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு: புதிய கறிவேப்பிலைச் சாற்றுடன் எலுமிச்சைக் கலந்து உண்பதன் மூலம் குமட்டல் மற்றும் தலைச்சுற்று போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக விளங்கும். அதிகப்படியானக் கொழுப்பினைக் குறைக்கப் பயன்படுகிறது. நீங்கள் விரும்பினால ஒரு சிறிய கரண்டி கறிவேப்பிலை சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்துப் பருக வேண்டும். மேலும் கறிவேப்பிலை மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் கொனோரியா (Gonorrhea) நோய் போன்றவற்றை சுவாரஸ்யமாகவும் திறம்படவும் கையாள்கிறது. அதோடு கறிவேப்பிலைச் சாறு பருகுவதினால் கற்பினிப் பெண்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் மயக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறாது
இதய நோய்: கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
கண்பார்வை:கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ நிறைந்து காணப்படுகிறது. இந்த இலைகளில் இருக்கும் வைட்டமின் ஏ கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளது. எனவே வைட்டமின் – ஏ செய்ல்பாடு கண்ணின் கார்னியா சேதமடைவற்கான ஆபத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. வைட்டமின் – ஏ குறைபாடு கண்களில் ஒரு விதமான பார்வை குறைபாட்டினை றேபடுத்த நேரிடலாம். கண்களில் ஏற்படும் குறைபாடுகளில் குருட்டுத்தன்மை, பார்வை இழப்பு, மாலைக் கண் நோய் போன்றவற்றைக் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்தக் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளைக் கறிவேப்பிலை குறைக்கவும் மேலும் முற்றிலுமாகக் குணம் பெறவும் கூட உதவுகிறது. இதனால் கறிவேப்பிலை இலைகளை அதிகம் உண்பதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் – ஏ கண்களில் குறைபாடு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
செரிமானம்: நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
கறிவேப்பிலை வயிற்றுப் போக்கிற்கு சிறந்தத் தீர்வாக உள்ளது. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) உள்ளன. இவை பாக்டீரியா மற்றும் அழற்சியை எதிர்க்கும் சக்க்தியினைக் உடலுக்குத் தருகின்றன. எனவே பாக்டீரியாவிற்கான எதிர்ப்புச் சக்தி கறிவேப்பிலையில் இருப்பதனால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த நிவாரணமாக உள்ளது.
கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால் வயிற்றுப் போக்கு குணமாகும். மேலும் கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொள்வது கூட வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய்க்கான மற்று மருந்தாக இருக்க முடியும்.
கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்தும் விடுபட முடியும்.
முடி வளர்ச்சி: கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
சளித் தேக்கம்: சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
தோலில் ஏற்படும் நோய்த் தொற்றினைக் குணப்படுத்துகிறது: கறிவேப்பிலை இலைகளில் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants), பாக்டீரியா எதிர்ப்பொருள் (Antibacterial) மற்றும் அழற்சி எதிர்ப்பொருள் (Anti-inflammatory) போன்ற எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளன. எனவே கறிவேப்பிலை இலைகள் நோய்த் தொற்றுகளுக்கான மிகப்பெரியத் தீர்வாக அமைகிறது. அதிலும் குறிப்பாகப் பூஞ்சையினால் ஏற்படும் தோல் பிரச்சினைகளில் முகப்பரு, கால்களில் ஏற்படும் ஆணி போன்றவற்றைக் குணப்படுத்துவதில் கறிவேப்பிலை முக்கியப் பங்கினை வகிக்கின்றது. கறிவேப்பிலை நோய்த் தொற்றினைக் தடுப்பதற்குக் காரணம் அதில் உள்ள வைட்டமின் ஈ ஆகும்.
கீமோதெரபி பக்க விளைவுகளைக் குறைக்கிறது: புற்று நோய்க்கு எதிராக அளிக்கப்படும் சிகிச்சைகளில் முக்கியமானவை கதிரியக்க சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை (ஆங்கிலத்தில் கீமோதெரபி என்பர் – Chemotherapy) ஆகும். இத்தகைய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போது பிற விளைவுகளையும் ஏற்படுத்த நேரிடலாம். வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை முறைகளால் ஏற்படும் பின் விளைவுகளில் மன அழுத்தம், முடி உதிர்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் கறிவேப்பிலையை வழக்கமாகச் சாப்பிட்டு வந்தால் வேதிச்சிக்கிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளை எளிதில் குறைத்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை உட்கொள்வதனால் புற்று நோய் சிகிச்சையின் பாதகமான விளைவுகளிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கறிவேப்பிலையை உணவில் எடுத்துக் கொள்வது குரோமோசோம்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவற்றை உடலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் இலவச கதிரியக்கத்தினால் பாதிக்கப்படுவதைத் திறம்படத் தடுக்கிறது.
கல்லீரல் பாதிப்பு: நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். கல்லீரல் சேதமடைவதிலிருந்து கறிவேப்பிலையால் பாதுகாக்க முடியும். ஏனெனில் கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ மற்றும் வைட்டமின் – சி உடன் கேம்ப்ரல்பல் (Camprefol ) என்னும் சத்துக்கள் உள்ளன. இந்தச் சத்துக்கள் கல்லீரல் சுமூகமாகச் செயல்படுவதற்கு மிகவும் உதவி செய்கின்றன. இதனால் நாம் உண்ணும் கறிவேப்பிலை இலைகள் நம்முடையக் கல்லீரலைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன,
மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும். மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை. தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள். குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்?
கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.
‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்
இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!
கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்: கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய்,இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில்10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.