Saturday, 1 September 2018

மரணம் எப்ப‍டி இருக்கும்?


மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்க ள் எப்படி இருக்கும்? இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.

மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்ப டுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல் களிலும் விரிவாக எழுதப்படவில்லை.

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு ள்ளதாவது,
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும்போது நான் ஒரு செவியர் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன். டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற் காலியில் அமரும் அள விற்கு குணம் பெற்று இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார், அவரது உடல் குளிர்ந்த து. எனது எந்த ஒருகேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.
நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை. வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங் கள் தெரிய ஆரம்பித்தன.

நான் உடனடியாக அவருக் கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்த பின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம். மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை.

பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்டபோது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரி வித்தார். முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியி ல்லாத அனுபவமாக இருந்த தாகவும் தெரிவித்தார்.

அடுத்த நொடியே மருத்துவ மனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந் ததாக அவர் தெரிவித்தார்.
அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார். டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னை யும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார்.

அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவி யைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச் சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இரு ந்ததாகவும் தெரிவித்தார்.

டாம் நினைவிழுந்து படுக் கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொ ண்டு இருந்தேன். திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்பபோக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந் து அவரது உடலுக்கு திரும் பியதாகவும் டாம் கூறினார். மேற்கண்ட இந்த அனுபவ ங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத் தில் விவரித்துள்ளார்.


மனிதனின் எலும்புகள்... Human Bone in tamil

மனிதர்கள் 270க்கும் கூடுதலான எலும்புகளுடன் பிறக்கிறார்கள்; சில நீளவாக்கில் இணைந்து தூக்கவெலும்புக்கூடு பிணைந்த அச்செலும்புக்கூடு உருவாகின்றன.
ஓர் முதிய மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன, பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங்கள்.  இந்த உயிரினங்களுக்கு எலும்புகள் தான் உடலமைப்பை கொடுக்கின்றன.  அவற்றின் தகவமைப்புக்கு ஏற்ப எலும்புகள் அமைந்துள்ளன.  ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனிதனும் அடக்கம்.  மனித எலும்புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை.  அவைதான் மனிதனை  நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன.  மனிதனின் செயல்பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன.  இந்த மனித எலும்புகளின் தன்மைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

மனித எலும்புகள்.
எலும்பு என்பது மனிதனின் உடலுக்குள் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும்.  உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.  மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வது எலும்புகள் தான்.  ஒரு இடம் விட்டு ஒரு இடத்திற்கு நகர வைப்பதும் எலும்புகள்தான்.  இவைகள் பாதிக்கப் பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறிவிடுவான்.  எலும்புகள் உடல் உறுப்புகளை பாதுகாப்பதுடன் இரத்த சிவப் பணுக்கள், வெள்ளையணுக்கள் இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் உள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.

பொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன.  இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும்.  அதுபோல் மிகவும் உறுதியான எலும்புகளும்  உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன.  இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு உள்ளன.

எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந்துள்ளன.  இவை தேன் கூட்டு அமைப்பை ஒத்துக் காணப்படும்.  முப்பரிமாண உள்ளமைப்புகளைக் கொண்டு எலும்புகளுக்கு விரைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள்தான்.  மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண்புழை, நரம்பு, இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும்.

உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் இருப்பது எலும்புத் கூடுதான்.

மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன.  இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அமைந்துள்ளன.

எலும்பில் கால்சியம், பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன.  நமது உடல் நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில்  தான் சேமித்து வைக்கப்படுகின்றன.  இந்த கால்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும்.

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தால் தான் சீரான முறையில் அவைகள் செயல்படமுடியும்.  அவ்வாறு பொருந்தும்  இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். அசையும் மூட்டு, அசையா மூட்டு என இரு வகை மூட்டுகள் உள்ளன.  


தலையிலும், இடுப்பிலும் காணப்படும் எலும்புகள் அசையா மூட்டுகள் ஆகும்.  அசையும் மூட்டுகள் நான்கு வகைப்படும்.

பந்துக்கிண்ண மூட்டு
கீழ்  மூட்டு
வழுக்கு மூட்டு
செக்கு மூட்டு


இந்த நால்வகை அசையும் முட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ, தேய்மானமோ ஏற்படாமல் இருப்பதற்கு எலும்புகளின் முனையில் குருத்தெலும்புகள் மூடப்பட்டு அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் அமைந்து அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரந்து மூட்டுகளின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.  மேலும் மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவாமல் இருக்க தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன.


எலும்புகளில் சின்ன எலும்பு காதில் உள்ள ஏந்தி(ண்ச்ணீஞுண்) என்ற எலும்பாகும்.  மிகப் பெரிய எலும்பு தொடை எலும்பாகும்.  மனிதனின் மார்புக் கூட்டில் மார்பெலும்புடன் விலா எலும்புகள் 24 உள்ளன.  இவை 12 ஜோடியாக ஒரு கூடுபோல் காட்சியளிக்கும்.   இவைகள் இதயம், நுரையீரல், போன்றவற்றை பாதுகாக்கிறது. சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு 306 எலும்புகள் காணப்படும்.  பின் குழந்தை வளரும்போது படிப்படியாக பல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய வலுவான எலும்பாக மாறும்.  நன்கு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு 206 எலும்புகள் இருக்கும்.

தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் 8 எலும்புகள் உள்ளன.  

அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கடினமாக உள்ளன.

மண்டையறை எலும்புகள் – 8
முக எலும்பு – 14
காது எலும்புகள்  – 6 
(மேலஸ், இன்கஸ், ஸ்டேப்பிஸ்)
தொண்டை எலும்பு – 1
தோள்பட்டை எலும்பு – 4
(காறை எலும்பு – 2,  தோள் எலும்பு – 2)
மார்புக் கூட்டில் – 25
(மார்பெலும்பு – 1, விலா எலும்பு – 24)
முதுகெலும்புத் தூண்          – 24
மேற்கைகளில் – 6
கைகளில் – 54
இடுப்புக்கூடு – 4
கால்களில்  – 8
கால்களின் கீழ் பகுதியில்– 52


மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.  இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.  எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசை நார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன.

இந்த எலும்புகளின் சேமிப்புகளிலிருந்துதான் உடல் தேவையான கால்சியம், பாஸ்பேட் சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.

இதனால் முதுமையில் எலும்புகள் போதிய பலமின்றி காணப்படுகின்றன.  இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் டி அதிகம் தேவை.  வைட்டமின் டி குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும்.  இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்க இயலாமல் போய்விடும்.  இந்த எலும்பு மெலிவு நோய்க்கான


மனிதனின் இடுப்பு எலும்பு

அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது.  ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது.  இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி அதிகம் கிடைக்கும்.  இதுதான்  குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் முக்கியமானது. மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை.  இதனால் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்த தண்டுக்கீரை,  காரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாலின ஈருருவுடைமை
ஆணின் எலும்புக்கூட்டிற்கும் பெண்ணின் எலும்புக்கூட்டிற்கும் பல வேற்றுமைகள் உள்ளன. மிகவும் முக்கிய வேறுபாடு இடுப்புக்குழியில் உள்ளது. குழந்தை பிறப்புச் செயல்பாடுகளின் சிறப்புத் தன்மைகளுக்காக பெண்ணின் இடுப்புக்குழி தட்டையாகவும் கூடுதல் வளைவாகவும் குழந்தையின் தலை வெளிவருமாறு பெரிதாகவும் உள்ளது. ஆணின் இடுப்புக்குழி 90 பாகைகள் அல்லது அதற்கு குறைவாக இருக்கையில் பெண்ணினுடையது 100 பாகைக்களுக்கும் கூடுதலாக உள்ளது. பெண்ணின் காக்சியம் (வால் எலும்பு கீழ்ப்புறம் நோக்கி இருக்க ஆணின் காக்சியம் வெளிப்புறம் நோக்கி உள்ளது. இதுவும் குழந்தை பிறப்பின்போது கூடுதல் இடமளிக்குமாறு ஏற்பட்டுள்ளது. ஆண்களின் அவயங்களும் விரல்களும் நீளமானதாகவும் தடித்துமிருக்க பெண்களின் விலாக்கூடு குறுகியும், பற்கள் சிறியதாகவும், தாடையெலும்புகள் குறுகிய கோணத்திலும் உள்ளன. பெண்களின் முகக்கூறுகளும் ஆண்களுடையதைவிட வேறுபாட்டுடன் உள்ளன. பெண்களின் தோள்கள் மேலும் வளைவாக உள்ளன.

குழந்தை எலும்புக்கூடு
குழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன:
1.மண்டையறை மற்றும் மண்டையோட்டு எலும்புகள் (21), இவை ஒன்றாகி மண்டையறையை உருவாக்குகின்றன.
2.திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன
3.coccygeal vertebrae (3 to 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி வாலெலும்பைஉருவாக்குகின்றன
4.இடுப்பெலும்பு, கீழ் இடுப்பெலும்பு மற்றும் பொச்செலும்பு (pubis), என்பவை வளர்ந்தோரில் ஒன்றாகி இடுப்பெலும்பைஉருவாக்குகின்றன
வார்ப்புரு

மனித எலும்புகளின் பட்டியல்
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.)


மண்டையறை எலும்புகள் (8)
• 1 நுதலெலும்பு (frontal bone)
• 2 சுவரெலும்பு (parietal bone) (2)
• 3 கடைநுதலெலும்பு (temporal bone) (2)
• 4 பிடர் எலும்பு (occipital bone)
• ஆப்புரு எலும்பு (sphenoid bone)
• நெய்யரியெலும்பு (ethmoid bone)
        முக எலும்புகள் (14)
• 7 கீழ்த்தாடை எலும்பு (mandible)
• 6 மேற்றாடை எலும்பு (maxilla) (2)
• அண்ணவெலும்பு (palatine bone) (2)
• 5 கன்ன எலும்பு (zygomatic bone) (2)
• 9 நாசி எலும்பு (nasal bone) (2)
• கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2)
• மூக்குச் சுவர் எலும்பு (vomer)
• கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2)
        நடுக்காதுகளில் (6):
• சம்மட்டியுரு (malleus)
• பட்டையுரு (incus)
• ஏந்தியுரு (stapes)
        தொண்டையில் (1):
• தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid)
        தோள் பட்டையில் (4):
• 25. காறை எலும்பு (clavicle)
• 29. தோள் எலும்பு (scapula)

மார்புக்கூட்டில் thorax(25):
• 10. மார்பெலும்பு (sternum) (1)
• மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: 
        பிடியுரு (manubrium), உடல் 

மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process)
• 28. விலா எலும்புகள் (rib) (24)

முதுகெலும்புத் தூண் (vertebral column) (33):
• 8. கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7)
• மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12)
• 14. நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5)
• 16. திரிகம் (திருவெலும்பு) (sacrum)
•       வால் எலும்பு (குயிலலகு) (coccyx)
             மேற்கைகளில் (arm) (1):
• 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus)
• 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus)
              முன்கைகளில் (forearm) (4):
• 12. அரந்தி (ulna) (2)
• 13. ஆரை எலும்பு (radius) (2)
• 27. ஆரை எலும்புத் தலை (head of radius)

கைகளில் (hand) (54):
• மணிக்கட்டுகள் (carpal):
• படகெலும்பு (scaphoid) (2)
• பிறைக்குழி எலும்பு (lunate) (2)
• முப்பட்டை எலும்புtriquetrum) (2)
• பட்டாணி எலும்பு (pisiform) (2)
• சரிவக எலும்பு (trapezium) (2)
• நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2)
• தலையுரு எலும்பு (capitate) (2)
• கொக்கி எலும்பு (hamate) (2)
• அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2)
• விரலெலும்புகள் (phalange):
•
• அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2)
• நடு விரலெலும்புகள் (Intermediate phalanges) (4 × 2)
• தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2)
         இடுப்பு வளையம் (pelvis) (2):
• 15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium)


கால்கள் (leg) (8):
• 18. தொடையெலும்பு (femur) (2)
• 17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல)
• 22. பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur)
• 23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur)
• 19. சில்லெலும்பு (patella) (2)
• 20. கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2)
• 21. சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2)

காலடிகளில் (52):
• கணுக்காலெலும்புகள் (tarsal):
• குதிகால் (calcaneus) (2)
• முட்டி (talus) (2)
• படகுரு எலும்பு (navicular bone) (2)
• உள் ஆப்புவடிவ எலும்பு (2)
• இடை ஆப்புவடிவ எலும்பு (2)
• வெளி ஆப்புவடிவ எலும்பு (2)
• கனசதுர எலும்பு (cuboidal bone) (2)
• அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2)
• விரலெலும்புகள் (phalange):
• அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2)
• நடு விரலெலும்புகள் (intermediate phalanges) (4 × 2)
• தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2)


Apple Will Reveal New iPhones On September 12

Apple Will Reveal New iPhones On September 12, But What Does The Circle Mean? 


The 2018 invitation is a little more explicit, with the bokeh effect clearly pointing towards the iPhone x Plus's Portrait Mode ability. Looking at this not knowing what was about to unfold, you could say something like "I bet it has something to do with the camera," and not be wrong. Now we're getting somewhere.




Three new iPhones x

The font colour of the invite is in a colour combination of Gold and Copper. This could mean that Apple might introduces a new colour for the the upcoming iPhones. Rumours have it that there could be a realistic Gold-coloured iPhone.

While your guess as to what The Circle means is as good as any, there's a solid chance that it will come up and mean something at some point on September 12. At that point, this blog will look horribly misinformed and dumb. You know what they say about hindsight.

Here's all the shiny new loot we expect to be unveiled in just 11 days from now.
Apple is almost certainly going to unveil a trio of new iPhones that retain the iPhone X's notch.

They'll include:

iPhone XS – a straight iPhone X successor (possible price: £899), with the same 5.8-inch OLED display, Apple's new A12 bionic processor, and its updated iOS 12 mobile software.

iPhone XS (plus) – the biggest iPhone ever (£999), with a 6.5-inch OLED screen on a body tipped as the same size as as last year's iPhone 8 Plus, which was only able to pack in a 5.5-inch display. Experts say Apple will ditch the "Plus" moniker, meaning both high-end blowers will be dubbed iPhone XS – just to confuse us all.

iPhone – a more budget device (£599) with a 6.1-inch screen that uses a cheaper LCD display and could be available in seven different colors. It's unclear what this handset will be called.

பிரபாகரன் தற்கொலை விவகாரம்


விடுதலைப்புலிகளின் கிழக்குத் தலைவராக இருந்தவர் கருணா அம்மன். பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாக அவர் கூறினார். இந்த விவகாரம் எனக்கு முன்பும், ஒரு சிலரைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.


பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் ஷெல்-தீவுகளால் கொல்லப்பட்டதாக ஒரு இந்திய டிவி சேனலின் பேட்டியில் ஒரு நிருபரிடம் கேள்வி எழுப்பிய முரளிதரன் மேலும் தெரிவித்தார்.   முரளிதரன் தனது யுத்த உத்திகளுக்காக பிரபாகரனை பாராட்டிய போது எல்.ரீ.ரீ.ஈ அதன் தோல்வியுற்ற யுத்த தந்திரோபாயங்கள் காரணமாக தோற்கடிக்கப்பட்டதாக வலியுறுத்தினார். "LTTE ஒரு கொரில்லாப் போரை நடத்தியிருந்தால் never defeat," என்று அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கைது செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக பிரபாகரன் அவதூறாகக் கூறுவது தவறானது என்று அவர் மேலும் தெரிவித்தார். பிரபாகரன் உயிருடன் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்துகொள்ள விரும்பவில்லை, முரளிதரன் கூறினார். 

இயல்பான மரணம் ஏற்பட்டால், கண்கள், பொதுவாகவே இல்லாமல், பொதுவாக மூடப்படும். பயம் காரணமாக ஒரு நபர் தாக்கப்பட்டால், அவருடைய கண்கள் மூடியிருக்கும். ஒருவர் சாகவேண்டுமென்றால், இறந்துவிடுவார் என நினைத்தால், அவர் இறந்துவிட்டால், அவருடைய கண்கள் திறந்திருக்கும். பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாக பல முறை தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியானது. அவரது எதிரிகளால் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காக மரணத்தின்  அவர் தனது சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டிருக்கலாம்.