Monday, 10 September 2012

Geetha saram

உலகில் அழிவை உண்டாக்கும் எதிரி--இச்சை !!

கீதை 3:33 எல்லா மனிதர்களும் தங்களிடமுள்ள மூவகை குணங்களிலிருந்து எழும்பும் செயல்களை இயற்கையாகவே தன்னையறியாமல் செய்வது போலவே தன்னை உணர்ந்த ஞானியரும் தங்கள் இயற்கையின்படியே செயல்பட்டால் யாரை போய் கண்டிப்பது??

கீதை 3:34 தன்னை சுற்றிய பொருட்களின் மீது ஈர்ப்போ வெறுப்போ கொள்ளுவது புலன்களின் இயல்பாகும் ! அதனை கட்டுப்படுத்தி முறையான வழிகளில் பழக்கவேண்டும் ! மாறாக புலன்களின் ஈர்ப்புக்கும் வெறுப்புக்கும் அடிமையாகக்கூடாது ! ஏனெனில் தன்னை உணர்வதற்கான பாதையில் அவை பெரும் தடைகற்களாகும் !!

கீதை 3:35 ஒருவன் அடுத்தவர் கடமைகளை மிகசரியாக செய்வதைகாட்டிலும் தனக்கு விதிக்கபட்ட கடமைகளை தவறுதலாக கூட செய்வது நல்லது !அடுத்தவர் கடமைகளில் சிக்கிகொள்வதை காட்டிலும் தனது கடமைகளை செய்து அழிவதாயினும் அதுவே தலைசிறந்தது !!

கீதை 3:36 அர்ச்சுணன் கூறினான் : விரிஸ்னி குலத்தோனே ! முழுமனதில்லாமலேயே பலவந்தப்படுத்தப்பட்டது போல ஒருவன் சிலசமயங்களில் பாவகாரியங்களை செய்ய ஏன் தூண்டப்படுகிறான் ??

கீதை 3:37 இறைதூதர் கிரிஸ்ணர் கூறிணார் : இச்சைகள் தான் காரணம் அர்ச்சுணா ! புற உலகாலுண்டாகும் மோகம் ரஜோ குணத்தால் மூர்க்கமாய் மாற்றமடைகிறது ! அந்த மூர்க்கமே எல்லா பாவத்திற்கும் காரணமாகி உலகில் அழிவை உண்டாக்கும் எதிரியாய் விளங்குகிறது !!

கீதை 3:38 நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பது போல ;கண்ணாடியில் தூசி படிந்திருப்பது போல ;அல்லது கரு கருவறையால் சூழப்பட்டிருக்கிறது போல இப்பூவுலகின் எல்லா உயிரிணங்களும் இச்சைகளின் பலவகைப்பட்ட படிமானங்களால் சூழப்பட்டுள்ளன !!

கீதை 3:39 எல்லா மனிதர்களின் அறிவும் ஆண்மாவின் எதிரியான இச்சைகளால் நெருக்கி அமிழ்த்தப்படுகிறது ! அது ஒரு போதும் திரிப்தியடையாதது ;பற்றியெரிகிற நெருப்பாக தூய உணர்வுகளை சுட்டு பொசுக்குவது !!

கீதை 3:40 புலன்கள் , மனம் மற்றும் மதினுட்பம் ஆகியவைகளே இச்சை அமர்ந்து ஆட்சிபுரியும் இடங்களாகும் ! அவைகளை தூண்டி எல்லா மனிதர்களின் அறிவிலும் குழப்பத்தை உண்டாக்குகின்றன !!

கீதை 3:41 அர்ச்சுணா ! பாவத்தின் பெரிய அடையாளமான இச்சையை முளையிலேயே கிள்ளி எறிவாயாக ! பரதவர்களில் சிறந்தவனே ! தன்னை உணர்தலையும் ஞானத்தையும் அழிக்கிற இச்சையை முயற்சித்து வீழ்த்துவாயாக !!

கீதை 3:42 கர்ம இந்திரியங்கள்--புலன்கள் ஜடப்பொருள்களை விட உயர்ந்தவை ! மனம் புலன்களை விட உயர்வானது !அறிவோ மனதையும் விட உயர்வானது !ஆனால் ஆத்துமாவாகிய மனிதனோ அறிவையும் விட மிகமிக உயர்ந்தவன் !!

கீதை 3:43 உலகம் ,புலன்கள் ,மனம் மற்றும் அறிவு எல்லாவற்றையும் விட தனது உண்ணதத்தை ஒருவன் உணரவேண்டும் ! யுத்தத்தில் வல்ல அர்ச்சுணா ! ஆண்ம உனர்வை விரிவடைய செய்து மனதை கீழ் நிலையினின்று உயர்த்தவேண்டும் ! இவ்வாறாக ஆண்ம பலமடைந்து வெல்லவே முடியாத எதிரியாகிய இச்சையை வெல்லவேண்டும் !!

1 comment: