ஒரு சமயம் பகவான் கிருஷ்ணனிடம்,அர்ஜுனன், தானத்தில் சிறந்தவர் எங்கள்
அண்ணன் தருமர் தானே,எல்லோரும் கர்ணனையே சிறந்தவர் என்கின்றனர்,நீங்களே
சொல்லுங்கள் யார் சிறந்தவர் என்று கேட்டார்.அதற்கு கிருஷ்ணர்,இருவருக்கும்
தானம் செய்ய சொல்லி வாய்ப்பு கொடுக்கிறேன்,நீயே முடிவு செய்து கொள்
என்றார்.
முதலில் தருமரை கூப்பிட்டு,தன் சக்தியால் ஒரு தங்கமலையை
உருவாக்கி,அதை தருமரை தானம் செய்ய சொன்னார்.அந்த மலையின் சிறப்பு
வெட்ட,வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும்.தருமர் காலையிலிருந்து வரும்
நபர்களுக்கெல்லாம் வெட்டி,வெட்டி கொடுத்தார்.ஆனால் தங்கமலையின் அளவு
குறையவில்லை.இதற்குமேல் முடியாது என கலைத்து உட்கார்ந்து விட்டார்.
பின்பு,கர்ணனை கூப்பிட்டு தங்கமலையை தானம் செய்ய சொன்னார்.கர்ணன் அந்த
வழியே சென்ற இருவரை கூப்பிட்டு,இந்த த்ங்கமலையை நீங்கள் இருவரும்
எடுத்துகொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.அர்ஜுனனை அர்த்தத்துடன்
பார்த்தார் கர்ணன்.
அர்ஜுனனுக்கு,தானத்தில் சிறந்தவர் யார் என்று இனிமேலும் சொல்லவும் வேண்டுமா?
No comments:
Post a Comment