மனித வாழ்வில் எலுமிச்சைப்பழம் ஒரு இன்றியமையாத பழம் ஆகும்.வாழ்க்கையில்
நமக்கு பல வழிகளில் பயன்படுகிறது.பெரிய மனிதர்களுக்கும்,சான்றோர்களுக்கும் எலுமிச்சைப்பழம் கொடுத்து வரவேற்பது பெரிய கவுரமாக மதிக்கபடுகின்றது ஏன் தெரியுமா?
எந்த ஒரு பழமும் அதன் பருவத்தின் ஒவ்வொரு நிலைகளிலும், ஒவ்வொரு சுவை
இருக்கும்.உதாரணமாக மாம்பழம் பிஞ்சு பருவத்தில் துவர்க்கும்,காய்
பருவத்தில் புளிக்கும்,பழத்தில் இனிக்கும்.ஆனால் எலுமிச்சை பிஞ்சு
பருவத்திலும் புளிக்கும்,காய் பருவத்திலும் புளிக்கும்,பழத்திலும்
புளிக்கும் அது போல் மனிதர்களாகிய நாம் வாழ்வின் எந்த நிலையிலும்
உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும் நம்முடைய குணத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதை
உணர்த்தவும்,உணர்ந்து கொள்ளவும் தெய்வத்திற்கும்,பெரிய
மனிதர்களுக்கும்,சான்றோர்களுக்கும் எலுமிச்சைப்பழம் வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment