Sunday, 30 September 2012

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால்...
அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

நீதி:- பயத்தை தூக்கி எறி, சிந்தி, வெற்றி பெறுவாய்..!

பொறாமை என்பது என்ன?

பொறாமை என்பது என்ன?
அது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தலேயாகும்.நம்மை அடுத்தவர்களுடன் ஒப்பிடத்தான் நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம்.ஒப்பிடுவது ஒரு முட்டாள் தனமான செயல்.ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.ஒப்பிட முடியாதவர்கள்
.நீ எப்போதும் நீதான்.உன்னைப்போல யாரும் இல்லை.நீயும் யாரையும் போல இருக்கத் தேவையில்லை.கடவுள் எப்போதும் அசல்களையே உருவாக்குகிறார் .நகல்களை அல்ல.
பக்கத்து வீட்டைப் பார்த்தால் மிகப் பெரிய விஷயங்கள் நடப்பது போல நமக்குத் தெரியும்.புல் பச்சையாகத் தெரியும்.நமது வீட்டு ரோஜாவை விட அடுத்த வீட்டு ரோஜா அழகாகத் தெரியும்.உன்னைத் தவிர மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றும்.இதே கதைதான் மற்றவர்களுக்கும்.அவர்களும் தங்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.அவர்களுக்கு உன் வீட்டுப் புல் பச்சையாய்த் தெரியும்.அவர்கள் நீ நல்ல மனைவியை அடைந்ததாக நினைக்கலாம்.நீயோ அவளைப் பார்த்து சலித்துப் போயிருப்பாய்.
...
ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட்டு நரகத்தை உருவாக்கி விடுகிறோம்.கீழ்த்தரமானவர்கள் ஆகி விடுகிறோம்.எல்லோரும் துன்பப்பட்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.எல்லோரும் எல்லாவற்றையும் இழந்தால் நல்லது என்று நினைக்கிறோம்.எல்லோரும் வெற்றி பெற்றால் நமக்கு கசக்கிறது.

நீ உனது உள் பக்கத்தை அறிவாய்.ஆனால் அடுத்தவர்களின் வெளிப் பக்கத்தை மட்டுமே அறிவாய்.அதுதான் பொறாமையை உருவாக்குகிறது. யாரும் உன்னுடைய உட்புறத்தில் எப்படிப்பட்டவன் என்பதை அறிவதில்லை.நீ உனது உட்புறத்தில் வெறுமையை,மதிப்பில்லாத தன்மையை உணர்கிறாய் .அதேபோல்தான் மற்றவர்களும்.வெளியில் பார்த்தால் சிரித்த முகத்துடன் இருப்பார்கள்.ஆனால் அவர்களது சிரிப்பு போலியாக இருக்கும்.ஆனால் அது போலியானது என்று உன்னால் எப்படி கண்டு கொள்ள முடியும்/.ஒரு வேளை , அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி இருக்கலாம்.ஆனால் நீ வெளியில் மட்டும் சிரிப்பது போலியானது என்பதை நிச்சயமாக உணர்வாய்.ஏனெனில் உனது உள்ளத்தில் நீ மகிழ்ச்சியுடன் இல்லை.எல்லோரும் வெளித்தோற்றத்தை அழகாக,பகட்டாக ஆனால் எமாற்றிபவையாகக் கொண்டுள்ளனர்.a

-ஒஷோ

Sunday, 23 September 2012

அகிம்சை

"வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்".. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்..."வலுத்தவன் வாழ்வான்" -

Saturday, 22 September 2012

Opinion Meaning in tamil

கருத்து என்றால் என்ன?
ஐந்து புலன்களால் உணரமுடியாத விஷயங்களை நாம் கருத்து என்கிறோம். உதாரணமாக, அன்பு, பொறாமை, மகிழ்ச்சி, போன்ற அரூபமான விஷங்களை கருத்து என்போம். இவை உலகில் உள்ள அனைவருக்கும் தனிப்பட்ட அனுபவத்தை தருபவை. ஓரிடத்தில் இருக்கும் அனைவரும் ஒரே விதமான கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை.

Tuesday, 18 September 2012

ஏழு வள்ளல்

"முதல்  ஏழு  வள்ளல் "

(1) செம்பியன் 
(2) காரி  (சகரி  )
(3) விரதன் 
(4) நிறுத்தி 
(5) துண்டுமாரன் 
(6) சாகரன் 
(7) நலன் 

"இடை  ஏழு  வள்ளல்"
(1) அக்குரன்
(2) சந்திமான்
(3) அந்திமான்
(4) சிசுபாலன்
(5) வக்ரன்
(6) கண்ணன்
(7) சண்டன்

"கடை  ஏழு  வள்ளல்"
1. பாரி 
2. வாழ்வில்  ஊறி 
3. காரி  (மலையமான்)

4. பேகன் 
5. எழினி  (அதியமான் )
6. நல்லை 
7. ஐ  கண்டிரன் 

Monday, 17 September 2012

மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .
...
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .

தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள் .

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார் .

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் .

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் . வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது .

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார் . அதன் பிறகு
ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது .


ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .

வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான் .

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக .

இந்தியர்களே தமிழர்களே நன்றி மறப்பது நன்றன்று.. எனவே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம் இந்நாளில் அந்த வீரனை நினைவு கொள்வோம்.

Monday, 10 September 2012

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா


இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல.100சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர். தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப்பழங்களில் கால்ஷியம் சத்துஅதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே,கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், "கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப்பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம்,அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
சிகிச்சைகள்
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது,அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy),பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

"திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம்50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர். அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.

கர்ணன்

ஒரு சமயம் பகவான் கிருஷ்ணனிடம்,அர்ஜுனன், தானத்தில் சிறந்தவர் எங்கள் அண்ணன் தருமர் தானே,எல்லோரும் கர்ணனையே சிறந்தவர் என்கின்றனர்,நீங்களே சொல்லுங்கள் யார் சிறந்தவர் என்று கேட்டார்.அதற்கு கிருஷ்ணர்,இருவருக்கும் தானம் செய்ய சொல்லி வாய்ப்பு கொடுக்கிறேன்,நீயே முடிவு செய்து கொள் என்றார்.
முதலில் தருமரை கூப்பிட்டு,தன் சக்தியால் ஒரு தங்கமலையை உருவாக்கி,அதை தருமரை தானம் செய்ய சொன்னார்.அந்த மலையின் சிறப்பு வெட்ட,வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும்.தருமர் காலையிலிருந்து வரும் நபர்களுக்கெல்லாம் வெட்டி,வெட்டி கொடுத்தார்.ஆனால் தங்கமலையின் அளவு குறையவில்லை.இதற்குமேல் முடியாது என கலைத்து உட்கார்ந்து விட்டார்.
பின்பு,கர்ணனை கூப்பிட்டு தங்கமலையை தானம் செய்ய சொன்னார்.கர்ணன் அந்த வழியே சென்ற இருவரை கூப்பிட்டு,இந்த த்ங்கமலையை நீங்கள் இருவரும் எடுத்துகொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.அர்ஜுனனை அர்த்தத்துடன் பார்த்தார் கர்ணன்.
அர்ஜுனனுக்கு,தானத்தில் சிறந்தவர் யார் என்று இனிமேலும் சொல்லவும் வேண்டுமா?

ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா

ஆய கலைகளை அறுபத்து நான்கு வகையாக பிரித்துள்ளனர், அவைகளின் பட்டியல்..

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகரூடணம்
37. உச்சாடணம்
38. விந்து வேடணம்
39. மதன சாத்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. ரசவாதம்
43. காந்தருவவாதம்
44. பைபீலவாதம்
45. கவுத்துக வாதம்
46. தாது வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாயப் பிரவேசம்
51. ஆகாய கமணம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிசயம்
54. இந்திரசாபம்
55. மகேந்திரசாபம்
56. அக்கினித்தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டித்தம்பம்
60. வாக்குத்தம்பம்
61. சுக்கிலத்தம்பம்
62. கன்னத்தம்பம்
63. கட்கத் தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்.

108ன் சிறப்பு தெரியுமா?


படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.
"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).

பிராமண எதிர்ப்பு கொள்கை

``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

பிராமண எதிர்ப்பு என்ற கொள்கை எனக்கு இல்லை !ஏனென்றால் வரலாறு நிகழ்வுகளை அறிந்தவர்கள் இன்று அவர்கள் ஆதிக்கசக்தியாய்--தடைகல்லாய் இல்லை என்பதை அறிவார்கள் !!!

உலகம் முழுவதிலும் ஆதியில் பூசை குலத்தொழிலாய் இல்லை ! அதற்கென்று ஒரு ஜாதி உருவாக்க படவில்லை ! இந்தியாவில் கிரிஸ்ணர் காலம் வரை இந்த நிலைமையே இருந்தது ! இன்று கிடைக்கும் ரிக்,யஜூர்,சாம &அதர்வன வேதங்கள் கிரிஸ்ணருக்கு முன் இருந்தவையல்ல! கிரிஸ்ணர் காலம் வரை ராஜகுருக்களாக பிராமணர்கள் இல்லை!தன்னை உணர்ந்து கடவுளை நெருங்கிய ரிஸிகள். முனிவர்கள், இல்லறத்துடன் கூடிய தவயோகிகளாய் வர்ணசாலை அமைத்து குருகுல கல்வியும் ;வாழ்வு நெறி முறையும் திராவிட சமுதாயத்திற்கு வழிகாட்டினர் ! நாண்கு வேதங்களை உருவாக்கியவர்கள் திராவிடர்களே ! வேதத்தை தொகுத்த வேதவியாசர் வரை அகஸ்த்தியர் ,விசுவாமித்திரர் வசிச்ட்டர் &வால்மீகி திராவிடர்களே!!

ஜலப்பிரளயத்திற்கு பின்பு --4000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து தேசத்தில் அடிமைகளாய் இருந்த யூதர்கள் ``மோசே`` என்ற இறைதூதர் மூலமாக விடுதலை செய்யப்பட்டு இன்றைய இஸ்ரேலுக்கு வந்து குடியேறினார்கள் ! அப்போது யூதர்களுக்கு மோசே மூலமாக ஒரு வேதம் கொடுக்கபட்டது !``தவ்ராத்`` என்பது அதன் பெயர் ! அப்போது ஒரு ``உடன்படிக்கை பெட்டி`` வைத்து அதில் தவ்ராத் வைக்க பட்டு ஒரு வழிபாட்டு கூடம் உருவாக்க பட்டு அருப ஏக இறைவனை அவர்கள் வழிபட தொடங்கினர் ! அப்போது ஆபிரஹாமின் 12 பேரர்கள் பெயரால் 12 குலங்கள் உருவாக்கபட்டன !அந்த 12 கோத்திரத்தில் ``லேவி கோத்திரம்`` என்பது மோசே- யின் கோத்திரமாகும் ! இந்த கோத்திரத்தார் மட்டுமே அந்த கோவிலில் இன்றளவும் ஆசாரிய பணி செய்யும் உரிமை இஸ்ரேலில் உள்ளது !இப்படி கோவிலில் பணி செய்கிறதற்கெண்று ஒரு ஜாதி ``ஆச்சாரியர்கள்`` என்பதாக இஸ்ரேலில் தான் முதன்முதலில் உருவாக்க பட்டது !! அவர்கள் பைபிளில் ``பழைய எற்பாடு`` என்று கிரிஸ்தவர்களால் ஓரங்கட்ட பட்ட யூத வேதத்தின் சொந்தக்காரர்கள் !

இஸ்ரேல் முழுவதும் ஒரே கோவில் மட்டுமே !லேவி கோத்திரம் பெருத்தபோது ஒரு கோவிலை மட்டுமே வைத்து வாழமுடியாத நிலை உண்டாயிற்று !கோவில் பணி தவிற வேறேதும் செய்யாத அவர்கள் உலகம் முழுமையும் பிழைப்பு தேடிசென்று அந்தந்த நாடுகளில் அவரவர்கள் கோவிலில் அவரவர் கொள்கைக்கு எற்ப ஆசாரிய பணி செய்ய தொடங்கினர் 1அப்படி இந்தியாவிற்கு வந்தவர்களே நம்மூர் பிராமணர்கள் ! இவர்களின் ஆதி கொள்கை ஏக இறை அருப வழிபாடாகும் !ஆனால் ஆசாரிய பணி என்ற தொழிலின் நிமித்தம் தாங்கள் சென்ற இடத்தின் பிரபலமான கோவிலுக்கு ஏற்ப தாங்களும் மாறி அதனையும் மெருகூட்டி அழகுபடித்திவிடுவார்கள் !

உதாரணத்திற்கு ஒரு கதையை கூறுகிறேன்!! 1000 ஆண்டுகளுக்கு உட்பட்ட ராஜா --கேரளத்தின் பந்தளம் என்ற சிற்றரசை ஆண்ட ``அய்யப்பன்``! இவர் வாவர் என்ற இசுலாமியரின்-- அரபியரின் நண்பரும் கூட ! இரண்டு மனைவியரை மணந்து இல்லற வாழ்வின் முடிவில் ஆண்மீக தேடலால் துறவறமும் மேற்கொண்டு சபரிமலையில் சமாதியடைந்தவர் ! வாவரும் உடன் சமாதியானவர் ! இது கேரளத்தினருக்கு நன்கு தெறியும் என்பதால் தமிழர்கள் ஆரம்பத்தில் அங்கு சென்று வழிபடும் போது இடைஞ்சல் நிறைய செய்தனர் ! -இப்போது கண்ணகி கோட்டம் சித்திரை பவுர்ணமி அன்று செல்லும் தமிழர்களை கேரளத்தினரும் கேரள அரசும் இடைஞ்சல் செய்வது போல !! கண்ணகி கோட்டத்தில் பிராமணர்களில்லாமல் கிராமதெய்வ வழிபாடு இப்போது நடைபெறுவது போல ஆதியில் அய்யப்பனும் தமிழர்களால் கிராம தெய்வ வழிபாடாகவே இருந்தது !அதனால் எரிச்சலடைந்து கேரள பிராமணர்கள் 1920 வாக்கில் சபரிமலை கோவிலை தீ வைத்து எரித்து விட்டணர் ! அப்போது ஆங்கிலேயருடன் நல்லுறவில் இருந்த சர்.பி.டி.ராஜன் அவர்கள் முயற்சியால் மதுரை மாவட்டம் முழுமையும் நிதி வசூல் செய்து இன்றைக்கு இருக்கும் தங்க சிலை செய்து மதுரை மாவட்டம் முழுவதும் ஊர்வலம் விட்டு சபரிமலையில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டது ! அய்யப்பன் வழிபாடு தமிழகத்தில் பிரபலமடைந்து கூட்டம் பெருகிய போது அதில் பிராமணர்கள் இணைந்து ஹரிவராசணம் முதலான சமஸ்கிரத மந்திரங்கள் புணைந்து பூசை முறைகளை அழகுபடுத்தி அதற்கு மேல்சாந்தியும் ஆகிவிட்டணர் ! அய்யப்பன் அவரது தாயும்தகப்பனும் காட்டிற்கு விறகு எடுக்க சென்ற போது அவதாரமாய் குழந்தையாய் காட்டில் அழுதுகொண்டிருந்ததை கண்டெடுத்த பிள்ளை என புராணகதைகளையும் திறைமையாய் உருவாக்கிணர் ! இப்படி பிரபலமடைந்த கிராமவழிபாடுகளில் பிராமணர்கள் இணைந்து அதனை மெருகூட்டி அழகுபடுத்தி விடுவர் !

கீதை சமூகத்தில் தொழில் அடிப்படையில் எப்போதும் நாண்கு பிரிவுகள் உண்டாகிறது என்கிற உண்மையை சுட்டுகிறது !அது பிறப்பால் அல்ல !செய்யும் தொழிலால்!! இன்றைக்கும் எல்லா ஜாதிகளிலிருந்தும் இந்த நால்வகை மனிதர்கள் உண்டாகியுள்ளனர் ! ஆண்மீகம் தொடர்பான கார்ப்புரேட் சாமியார்கள்; மடாதிபதிகள்; பாதிரியார்கள்; அவுலியாக்க்கள் அந்தணர்கள் என்ற வர்ணமாகவும் ;அரசியல்வாதிகள் IAS IPS அதிகாரிகள் சத்திரியர்களாகவும் ;எல்லா ஜாதிகளிலிருந்தும் வியாபாரிகள் தொழிலதிபர்கள் வைசியர்களாகவும் விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை சூத்திரர்களாகவும் எல்லா ஜாதிகளிலிருந்தும் இந்த ``நால்வர்ணம்`` இன்றைக்கும் இருந்து கொண்டுதான் உள்ளது ! ஆனால் அரசர்கள் காலத்தில் எல்லா ஜாதிகளிலிருந்தும் இந்த நால்வர்ணம் இல்லாமல் கோவிலில் பணி செய்கிற பிராமணர்கள் மட்டுமே அந்தணர்கள் என்ற வர்ணமாய் அரசர்களின் மாணிபங்கள் நிறைய கிடைத்து சமூக அந்தஸ்துடன் ஆதிக்க சக்தியாய் இருந்தனர் !! இன்றைக்கு கோவில் வருமாணம் மட்டுமே இருக்கிறது ; இது வாழ்க்கைக்கு போதுமானதில்லாமல் வறுமையில் உழல்பவர்களாகவே பிராமணர்கள் உள்ளனர் !அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையால் எல்லா ஜாதியினரும் பதவிகள் பெற்று பிராமணர்கள் ஓரங்கட்டபட்டனர் !!

இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கம் பலமுறை முறியடிக்கபட்டுள்ளது ! புத்தர் காலத்திலிருந்து சமணர் காலம் வரை அவர்கள் ஓரங்கட்டபட்டணர் ! அது வரை யாகங்களில் உயிர்ப்பலி செலுத்தி அதை உண்டவர்கள் பிராமணர்கள் !அதனாலேயே புத்தமும் சமணமும் மாற்று கருத்தாக உயிர்ப்பலியை தடைசெய்தது !அப்போது கோவில் பணியில்லாமல் உழவுத்தொழிலுக்கும் பிராமணர்கள் சென்றார்கள் ! 2000 வருடம் இந்த நிலையே நீடித்தது ! சைவக்குறவர்கள் தலையெடுத்து மதுரையில் சைவம் அரச மதமாக மாறியபோது மீண்டும் பிராமணர்கள் சைவர்களாக கோவில்பணியில் ஈடுபடுத்த பட்டணர் ! சைவம் வைணவம் கோலோச்சி தழைத்த பிராமணர்கள் மீண்டும் ``பெரியார்`` மூலம் பலத்த பிண்ணடைவு அடைந்து விட்டணர் !! சுதந்திர இந்தியாவின் இட ஒதிக்கீடு கொள்கை அவர்களை விட ஆதிக்க சக்தியாய் மற்ற ஜாதிகளை மாற்றி விட்டது !! எனவே இப்போது ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Geetha saram

உலகில் அழிவை உண்டாக்கும் எதிரி--இச்சை !!

கீதை 3:33 எல்லா மனிதர்களும் தங்களிடமுள்ள மூவகை குணங்களிலிருந்து எழும்பும் செயல்களை இயற்கையாகவே தன்னையறியாமல் செய்வது போலவே தன்னை உணர்ந்த ஞானியரும் தங்கள் இயற்கையின்படியே செயல்பட்டால் யாரை போய் கண்டிப்பது??

கீதை 3:34 தன்னை சுற்றிய பொருட்களின் மீது ஈர்ப்போ வெறுப்போ கொள்ளுவது புலன்களின் இயல்பாகும் ! அதனை கட்டுப்படுத்தி முறையான வழிகளில் பழக்கவேண்டும் ! மாறாக புலன்களின் ஈர்ப்புக்கும் வெறுப்புக்கும் அடிமையாகக்கூடாது ! ஏனெனில் தன்னை உணர்வதற்கான பாதையில் அவை பெரும் தடைகற்களாகும் !!

கீதை 3:35 ஒருவன் அடுத்தவர் கடமைகளை மிகசரியாக செய்வதைகாட்டிலும் தனக்கு விதிக்கபட்ட கடமைகளை தவறுதலாக கூட செய்வது நல்லது !அடுத்தவர் கடமைகளில் சிக்கிகொள்வதை காட்டிலும் தனது கடமைகளை செய்து அழிவதாயினும் அதுவே தலைசிறந்தது !!

கீதை 3:36 அர்ச்சுணன் கூறினான் : விரிஸ்னி குலத்தோனே ! முழுமனதில்லாமலேயே பலவந்தப்படுத்தப்பட்டது போல ஒருவன் சிலசமயங்களில் பாவகாரியங்களை செய்ய ஏன் தூண்டப்படுகிறான் ??

கீதை 3:37 இறைதூதர் கிரிஸ்ணர் கூறிணார் : இச்சைகள் தான் காரணம் அர்ச்சுணா ! புற உலகாலுண்டாகும் மோகம் ரஜோ குணத்தால் மூர்க்கமாய் மாற்றமடைகிறது ! அந்த மூர்க்கமே எல்லா பாவத்திற்கும் காரணமாகி உலகில் அழிவை உண்டாக்கும் எதிரியாய் விளங்குகிறது !!

கீதை 3:38 நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பது போல ;கண்ணாடியில் தூசி படிந்திருப்பது போல ;அல்லது கரு கருவறையால் சூழப்பட்டிருக்கிறது போல இப்பூவுலகின் எல்லா உயிரிணங்களும் இச்சைகளின் பலவகைப்பட்ட படிமானங்களால் சூழப்பட்டுள்ளன !!

கீதை 3:39 எல்லா மனிதர்களின் அறிவும் ஆண்மாவின் எதிரியான இச்சைகளால் நெருக்கி அமிழ்த்தப்படுகிறது ! அது ஒரு போதும் திரிப்தியடையாதது ;பற்றியெரிகிற நெருப்பாக தூய உணர்வுகளை சுட்டு பொசுக்குவது !!

கீதை 3:40 புலன்கள் , மனம் மற்றும் மதினுட்பம் ஆகியவைகளே இச்சை அமர்ந்து ஆட்சிபுரியும் இடங்களாகும் ! அவைகளை தூண்டி எல்லா மனிதர்களின் அறிவிலும் குழப்பத்தை உண்டாக்குகின்றன !!

கீதை 3:41 அர்ச்சுணா ! பாவத்தின் பெரிய அடையாளமான இச்சையை முளையிலேயே கிள்ளி எறிவாயாக ! பரதவர்களில் சிறந்தவனே ! தன்னை உணர்தலையும் ஞானத்தையும் அழிக்கிற இச்சையை முயற்சித்து வீழ்த்துவாயாக !!

கீதை 3:42 கர்ம இந்திரியங்கள்--புலன்கள் ஜடப்பொருள்களை விட உயர்ந்தவை ! மனம் புலன்களை விட உயர்வானது !அறிவோ மனதையும் விட உயர்வானது !ஆனால் ஆத்துமாவாகிய மனிதனோ அறிவையும் விட மிகமிக உயர்ந்தவன் !!

கீதை 3:43 உலகம் ,புலன்கள் ,மனம் மற்றும் அறிவு எல்லாவற்றையும் விட தனது உண்ணதத்தை ஒருவன் உணரவேண்டும் ! யுத்தத்தில் வல்ல அர்ச்சுணா ! ஆண்ம உனர்வை விரிவடைய செய்து மனதை கீழ் நிலையினின்று உயர்த்தவேண்டும் ! இவ்வாறாக ஆண்ம பலமடைந்து வெல்லவே முடியாத எதிரியாகிய இச்சையை வெல்லவேண்டும் !!

அறுபத்தி மூன்று நாயன்மார்கள்


கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் சிவ வழிபாட்டின் மூலம் புகழடைந்த சிவனடியார்கள் அறுபத்தி மூன்று நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இந்த நாயன்மார்கள் யார்யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

1. அதிபத்தர்

2. அப்பூதியடிகள்

3. அமர்நீதி நாயனார்

4. அரிவட்டாயர்

5. ஆனாய நாயனார்

6. இசைஞானியார்

7. இடங்கழி நாயனார்

8. இயற்பகை நாயனார்

9. இளையான்குடிமாறார்

10. உருத்திர பசுபதி நாயனார்

11. எறிபத்த நாயனார்

12. ஏயர்கோன் கலிகாமர்

13. ஏனாதி நாதர்

14. ஐயடிகள் காடவர்கோன்

15. கணநாதர்

16. கணம்புல்லர்

17. கண்ணப்பர்

18. கலிய நாயனார்

19. கழறிற்ற்றிவார்

20. கழற்சிங்கர்

21. காரி நாயனார்

22. காரைக்கால் அம்மையார்

23. குங்கிலியகலையனார்

24. குலச்சிறையார்

25. கூற்றுவர்

26. கலிக்கம்ப நாயனார்

27. கோச் செங்கட் சோழன்

28. கோட்புலி நாயனார்

29. சடைய நாயனார்

30. சண்டேஸ்வர நாயனார்

31. சத்தி நாயனார்

32. சாக்கியர்

33. சிறப்புலி நாயனார்

34. சிறுதொண்டர்

35. சுந்தரமூர்த்தி நாயனார்

36. செருத்துணை நாயனார்

37. சோமசிமாறர்

38. தண்டியடிகள்

39. திருக்குறிப்புத் தொண்டர்

40. திருஞானசம்பந்தமூர்த்தி

41. திருநாவுக்கரசர்

42. திருநாளை போவார்

43. திருநீலகண்டர் குயவர்

44. திருநீலகண்ட யாழ்ப்பாணர்

45. திருநீலநக்க நாயனார்

46. திருமூலர்

47. நமிநந்தியடிகள்

48. நரசிங்க முனையர்

49. நின்றசீர் நெடுமாறன்

50. நேச நாயனார்

51. புகழ்சோழன்

52. புகழ்த்துணை நாயனார்

53. பூசலார்

54. பெருமிழலைக்

55. மங்கையர்க்கரசியார்

56. மானக்கஞ்சாற நாயனார்

57. முருக நாயனார்

58. முனையடுவார் நாயனார்

59. மூர்க்க நாயனார்

60. மூர்த்தி நாயனார்

61. மெய்ப்பொருள் நாயனார்

62. வாயிலார் நாயனார்

63. விறன்மிண்ட நாயனார்

நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி?

மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.

நவக்கிரங்களில் ஜாதகருக்கு சனி மட்டும்தான் அதிக தொல்லைகளை கொடுப்பவர்.மேலும் சனி மட்டும்தான் ஒரு ராசியில்,மற்ற கிரகங்களைவிட அதிக நாட்கள் இருப்பவர்.அத்னால் நவக்கிரங்களை சனிக்கிழமை வழிபடலாம்.நவக்கிரகங்களை வாரம் ஒருமுறை வழிப்பட்டால் போதும்

சனீஸ்வரனை நாம் நேரிடையாக பார்க்ககூடாது,இருந்தாலும் நவக்கிரங்களை சுற்றும்பொழுதோ அல்லது சனிக்கு அர்ச்சினை செய்யும்பொழுதோ,சனீஸ்வரன பார்க்காமல் இருக்க முடியாது,ஆதலால் நவக்கிரகங்களை வழிபட்டு முடித்தபிறகு,சனீஸ்வரனை நேரிடையாக பார்த்த் தோசம் நீங்க எள்ளும்,ந்ல்ல எண்ணெயில் விளக்கும் ஏற்ற வேண்டும்.

சென் கதையின் பிறப்பு

பேரரசர் லியாங் வு டீ அந்த சமயத்தில் சைனாவை ஆண்டு வந்தார். அவர் புத்த தர்மங்களை மதித்து நடப்பவர். புலால் உண்ணாதவர். பல புத்த விகாரங்களை கட்டியவர். தன்னுடைய நாட்டில் புத்த மதம் இருப்பதற்காக தற்பெருமை கொண்டவர்.

போதிதர்மாவின் வருகையைக் கேட்டவர், ஒராண்டிற்கு பிறகு 527 கிபியில் அரச சபையைக் கூட்டி அவருக்கு மரியாதைகள் வழங்கினார். பின்பு அவர்களுக்குள் நடந்த உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதை ஆகும்.

மன்னர் "நான் பல புத்த மடங்களையும், கோயில்களையும் கட்டினேன். புத்த சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினனாக சேர்ந்து தொண்டு ஆற்றி வருகிறேன்" என்று கூறியவர், சாதுவிடம் "இவ்வளவு தொண்டுகள் செய்த எனக்கு எவ்வளவு புண்ணியம் சேர்ந்திருக்கும்" என்றுக் கேட்டார்.
"ஒரு புண்ணியமும் சேர்ந்ததாக தெரியவில்லை" என்ற பதிலைக் கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் போதிதர்மர்.

மன்னர் பல சிறந்த ஆசிரியர்களிடமும், மதிக்கக் கூடிய குருக்களிடமும் கற்று அறிந்தவர். "விதை விதைத்தவன் விதை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொல்லிற்கு ஏற்ப நல்லது செய்த தனக்கு புண்ணியங்கள் பல சேர்ந்திருக்கும் என்று எண்ணி இருந்தார். ஆனால் இந்த சாதுவின் பதிலைக் கேட்டவர், பேயடித்த மனிதரானார்.
மன்னர் வு சாதுவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை. யார் ஒருவரும் தனக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்றோ, மற்றவர்கள் புகழ வேண்டும், மதிக்க வேண்டும் என்றோ, தன்னுடைய பணபலம், படைபலம் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்றோ எண்ணியவாறு புத்த தர்மங்களை செய்து வந்தால் அதணால் எந்தப் பலனும் சேர்ந்ததாக கூறுவதற்கில்லை என்ற சாதுவின் அர்த்தம் அவருக்கு விளங்கவில்லை.

மன்னர் தன்னுடைய அடுத்தக் கேள்வியைக் கேட்டார். "அப்படி என்றால், புத்த மதத்தின் சாராம்சம் தான் என்ன?"
போதிதர்மா உடனடியாக பதில் அளித்தார். "பரந்த வெற்றிடம், சூன்யம், ஒரு சாராம்சமும் இல்லை!"

பதிலைக் கேட்ட மன்னர் வியப்படைந்தார். "ஒரு சாராம்சமும் இல்லை" என்பதன் முழு அர்த்தத்தையும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்ற எல்லா ஆசிரியர்களும் "புத்தரின் நான்கு சிறந்த பேருண்மைகள்", "கர்மா", "புத்தரின் விக்கிரகங்கள்", "புத்த சூத்திரங்கள்" முதலியவற்றை
அவருக்கு மிகவும் கடினப் பட்டு விளக்கி புரியவைத்த விஷயங்கள் "ஒரு சாராம்சமும் இல்லை" என்ற பதிலை 28வது புத்த தலைமைக் குருவின் வாயில் இருந்து உதிர்த்ததைக் கேட்டு ஆச்சரியப் பட்டார்.

மன்னர் இறுதியாக தன்னுடைய மற்றொரு கேள்வியைக் கேட்டார். "புத்த மதத்தில் ஒரு சாராம்சமும் இல்லை என்று நீங்கள் கூறினீர்கள், அப்படியானால் யார் என் முன்னால் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது?"
போதிதர்மர் "எனக்குத் தெரியவில்லை"

பேரரசர் பதிலைக் கேட்டு திகைப்புற்று கேள்விகள் கேட்பதை நிறுத்திக் கொண்டார். அவரால் போதிதர்மர் கூறியதன் அர்த்தத்தை கொஞ்சமும் புரிந்து கொள்ள இயலவில்லை.குழப்ப முற்ற மன்னன் சபையினை அதோடு முடித்துக் கொண்டு சாதுவினை அனுப்பி வைத்தான்.

இதுதான் முதன் முதலில் சைனாவில் புத்த மதத்தின் "சான்" வாசனையை அறிந்து கற்றுக் கொண்ட முதல் பாடமாகும். மன்னருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து கிளம்பிச் சென்ற போதிதர்மர் அடுத்த ஒன்பது வருடங்களுக்கு ஒரு கிணற்று சுவரின் முன் அமர்ந்து தியானம் செய்தார். போதிதர்மரின் போதனைக் கதைகளே பிற்காலத்தில் "ஸென்" கதைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

எலுமிச்சைப்பழமும் அவற்றின் தத்துவமும்


மனித வாழ்வில் எலுமிச்சைப்பழம் ஒரு இன்றியமையாத பழம் ஆகும்.வாழ்க்கையில் நமக்கு பல வழிகளில் பயன்படுகிறது.பெரிய மனிதர்களுக்கும்,சான்றோர்களுக்கும் எலுமிச்சைப்பழம் கொடுத்து வரவேற்பது பெரிய கவுரமாக மதிக்கபடுகின்றது ஏன் தெரியுமா?
எந்த ஒரு பழமும் அதன் பருவத்தின் ஒவ்வொரு நிலைகளிலும், ஒவ்வொரு சுவை இருக்கும்.உதாரணமாக மாம்பழம் பிஞ்சு பருவத்தில் துவர்க்கும்,காய் பருவத்தில் புளிக்கும்,பழத்தில் இனிக்கும்.ஆனால் எலுமிச்சை பிஞ்சு பருவத்திலும் புளிக்கும்,காய் பருவத்திலும் புளிக்கும்,பழத்திலும் புளிக்கும் அது போல் மனிதர்களாகிய நாம் வாழ்வின் எந்த நிலையிலும் உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும் நம்முடைய குணத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதை உணர்த்தவும்,உணர்ந்து கொள்ளவும் தெய்வத்திற்கும்,பெரிய மனிதர்களுக்கும்,சான்றோர்களுக்கும் எலுமிச்சைப்பழம் வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாடு;
----------------------------
நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.இவர்களுக்கு காவல் தெய்வம்,குல தெய்வம் வழிபாடு இருக்கும்.பிறக்கும் குழந்தைகளுக்கு,முதல் முடி குல தெய்வம் கோயிலில் சென்று மொட்டை போடுவார்கள்.சில்ர் காது குத்துவார்கள்.

குலதெய்வம் வழிபாடு இந்து சமயத்தினருக்கும் முக்கியமான ஒன்றாகும்.அடிப்படையில் நம்முடைய இந்து மதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது.குல தெய்வ வழிபாடு மனிதனின் லௌதீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.அப்படியானால் குலதெய்வமும்,இறைநிலையும் வேறுவேறா?அப்படி கிடையாது,அதாவது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரே இதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.


உலகத்தில் இன்பத்தையும்,பற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்வதற்கு எல்லொராலும் முடியாது,லௌதீக வாழ்வு வாழ்வபவர்களுக்கும் தான் இறைதூதர்களையும்,தேவதைகளயும் இறைவன் படைத்திருக்கிறார்.அவர்களே குலதெய்வங்கள் ஆவார்கள்.

குல தெய்வத்தை கும்பிடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள்,முழுவதும் பங்காளி ஆவார்கள்.இவர்கள் அண்ணன்,தம்பி உறவு முறையாக கருதுபவர்கள்.இவர்களுக்குள் பெண் கொடுக்கவோ,எடுக்கவோ மாட்டார்கள்.

மேலும் நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும்,முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும்.எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும்.மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.