Wednesday, 29 August 2018

ஆடி அமாவாசை


இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரைபகல் காலம். இதை உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதைதட்சணாயன காலம்” என்றும் அழைக்கப்படுகிறது.


புராணப்படி உத்தராயண காலம் என்பது தேவர்களின் பகல் நேரம். தட்சணாயன காலம் எனப்படும், அதாவது இரவு காலத்தில்தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற அசுரர்களின் அட்டகாசம் அதிகமானதாகவும் அவர்களை தேவர்களால் எதுவும் செய்ய முடியாமல்அவதிப்பட்டார்கள் எனவும், 


இதனால்தான் இந்த மாதங்களில்அம்மனும், கிருஷ்ணரும் தேவர்களை காப்பாற்ற அவதாரம் எடுத்துவந்ததாக புராணம் சொல்கிறது.  துஷ்டசக்திகளின் அட்டகாசத்தால் பூலோகவாசிகளுக்கு பிரச்னை உருவாகும் என்பதால்தான் ஆடிமாதம் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களுக்கு உகந்த மாதமாக அமைத்து அவர்களின் குடும்பத்தை துஷ்டசக்திகளிடம் இருந்துகாக்க அவர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாக கருடபுராணம் சொல்கிறது.

சூரியனை பிதுர்காரகன் அதாவது தந்தையின் நிலை, தந்தை வழிமுன்னோர்களை அறிவது, என்றும் சந்திரனை மாதுர்காரகன் அதாவது தாயின் நிலை, மற்றும் தாய் வழி முன்னோர்களைஅறிவது என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரியனும்சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. அமாவாசையில் முன்னோர்களை வணங்கினால் நன்மை ஏற்படும். அதிலும் ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. ஒரு குடும்பத்தை சார்ந்த இறந்து போன முன்னோர்கள், தம் குடும்பத்தினரின் வம்சம் செழிக்க அருள்தரட்டும் என்ற எண்ணத்தில் இறைவன், ஆடி மாதத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை பூமிக்குஅனுப்பி வைக்கிறார் என்கிறது புராணம்.

இறந்தவர்களின் ஆத்மா மகிழ்ச்சியுடன் தன் வம்சத்தினரை காணப்போகிறோம் என்ற ஆவலோடுவருவார்கள். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கினால் நமது வம்சத்திற்கே எந்த தீங்கும்ஏற்படாது. திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாத நிலை, நோய், வறுமை போன்றவற்றுக்குமுக்கிய காரணமாக இருப்பது முன்னோர்களை வணங்காமல் இருப்பதே என்கிறது கருட புராணம்.

எப்போதோஇறந்துபோனநம்முன்னோர்களின்ஆத்மாஇன்றுவரை வேறு பிறவி 

எடுக்காமல் ஆவியாகவாசுற்றிக்கொண்டிருப்பார்கள்என்கிற கேள்வி எழலாம்.

நாம் ஆடி அமாவாசை போன்ற முன்னோர்களுக்கு உகந்த புனித காலங்களில் தர்பணம் செய்யும்போது தரப்படுகிற பிண்டமும், பசுவுக்கு வழங்குகிற கீரையும், அன்னதானம் போன்றவையும் சிலகாலங்களுக்கு முன்பு இறந்த ஆத்மாக்களையும் சென்று அடைகிறது. அத்துடன் எத்தனையோ பலஆண்டுகளுக்கு முன் இறந்து போன நம் முன்னோர்கள், இன்றைய காலத்தில் வேறு எங்கோ பிறந்துஇருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கிற உணவு, அவர்கள் சாப்பிடுகிற உணவு, நாம் புனித காலங்களில்தர்பணம் செய்த பலனால் கிடைக்கிறது. அதனால் அவர்கள் பசி கொடுமையில்லாமல் வாழ்வார்கள்.

அதாவது இன்னும் சுருக்கமாகச் சொன்னால், நமக்கு வறுமை நிலை இல்லாமல் பசிக்கொடுமை இன்றி சரியான நேரத்தில் உணவு கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம், நம் வம்சத்தினர், எங்கோ முறையாக தர்பணம் செய்து வருவதால்தான் என்பதை கருட புராணம் விளக்கி சொல்கிறது. அதனால் தவறாமல் ஆடி அமாவாசை போன்ற முன்னோர்களுக்கு உகந்த காலங்களில் அவர்களைவணங்க வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.


நம் முன்னோர்கள் ஆத்ம ரூபமாக அவர்களுக்குரிய புனித காலங்களில் நம் வீடு தேடி வரும் போது,முறைப்படி தர்பணம் போன்ற பித்ரு வழிபாடு செய்யப்படாத வீடாக அது இருந்தால், “தமக்கு தன்வம்சத்தினர் தரும் மரியாதை இதுதானா?” என்று மனம் வருந்தி திரும்பி விடுவார்கள். அதனால்அப்படிப்பட்ட குடும்பங்களில் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாத நிலை போன்றவைநேருகிறது. ஆடி அமாவாசை தினத்தில்தான் நமது முன் ஜென்மபாவங்கள் விலகுவதாககூறப்படுகிறது.

பித்ருபூஜைக்கு மிக பெரிய செலவு என்பதெல்லாம் இல்லை. காய்கறிகளை தானம் தர வேண்டும்.அதில் முக்கியமாக பூசணிக்காயை தானம் செய்தே ஆக வேண்டும். அப்படி செய்வதால் துஷ்டசக்திகள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடை பெற வழி பிறக்கும். பூசணிக்காய்குள் அசுரன் இருப்பதால் பூசணிக்காயை தானம் செய்யும் போது அசுரன் நம்மை விட்டு விலகுவதாக ஐதீகம். அதுவும் ஆடி அமாவாசை அன்று இவ்வாறு பூஜையில் தானம் செய்வது விசேஷம்.

இயற்கை மரணம் இல்லாமல் ஏதாவது ஒரு துர்மரணத்தால் எவரேனும் இறந்து போய் இருந்தால், அந்த ஆத்மா இறைவனடி சேராமல் அவதிப்படும், அல்லாடும். முறைப்படி வழிபாடு செய்து தம் ஆத்மாவை இறைவனடி சேர வைக்காத தன் குடும்பத்தினர் மீது கோபம் கொண்டு தீங்கு செய்ய கூடதுணிந்து விடும். அதனால் அப்பேர்பட்ட ஆத்மாக்களை சாந்தப்படுத்தி இறைவனடி சேர வைக்க, ஆடிஅமாவாசை அன்று தர்பணம் செய்தால் அந்த ஆத்மா சாந்தியாகும். ஸ்ரீமன் நாராயணனே அந்தஆத்மாவை சாந்தப்படுத்தி உதவி செய்வதாக கருடபுராணத்தில் இருக்கிறது.

கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து அவர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின்பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமதுவம்சத்தினரையும் மனமார வாழ்த்துவார்கள்.

முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்குவைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு உணவு தானம் செய்வது நல்லது. அப்படிசெய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.

முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாதுஎன்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன் பெறும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்குவரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற எளிய தர்பணம்செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பை பெறுவோம்.

No comments:

Post a Comment