ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டன் விதிபோல, நம்மை அறியாமலேயே செய்யும் செயல்பாடுகளுக்கும், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் செயல்களுக்கும் சில சுவாரஸ்யமான உளவியல் காரணங்கள் உண்டு’’ என்கிறார் மனநல ஆலோசகர்
நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் குறித்து காண்போம்.
ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.
ஒருவரின் மீது 3 நாட்களுக்கு மேல் நம் கோபம் நீடிக்காது. அப்படி நீடித்தால் அவர்களிடம் நமக்கு எந்தவித அன்பும் இல்லையென்றே அர்த்தம்.
உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.
சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.
பெண்கள் ஒரு முடிவை எடுக்க ஆண்களைவிட அதிகநேரம் எடுத்துக் கொள்கிறார்கள். முடிவுகளில் விட்டுக்கொடுக்காதவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றித்தானே பெருமையாக செய்தி வெளியிடும்போது கிடைக்கும் சந்தோஷம், போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் மயக்கத்துக்கு இணையானது.
மற்றவர்களை கவனிக்காவிட்டாலும், மற்றவர் நம்மைப் பார்ப்பதை உணரக்கூடிய உள்ளுணர்வு ஒவ்வொரு வருக்கும் உண்டு.
நீங்கள் யாரை அதிகம் விரும்புகிறீர்களோ அல்லது யாரை அதிகம் வெறுக்கிறீர்களோ அவர்களே உங்கள் கனவில் அதிகம் வருகிறார்கள்.
தன் பணத்தைத் தனக்காக செலவிடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, மற்றவர்களுக்காக பணத்தை செலவழிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.
"உன்கிட்ட தனியா பேசணும்’ என்று யாரேனும் சொல்லும்போது, சமீபத்தில் செய்த தவறுகளையெல்லாம் மனது பட்டியலிட ஆரம்பித்துவிடுகிறது.
உடலில் ஏதேனும் காயம் உண்டாகும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே, ஒருவர் நம்மை புறக்கணிக்கும்போதும் மூளையில் ஏற்படுகிறது.
சந்தோஷத்தால் ஒரு மனிதன் அழும்பொழுது முதல் கண்ணீர் துளி வலது கண்ணிலும், கவலையான தருணங்களில் அழும்போது முதல் கண்ணீர் துளி இடது கண்ணிலும் வரத் தொடங்கும்.
“கூச்ச சுபாவமுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெளிப்படையானவர்களே பெரிதும் பொய் சொல்கிறார்களாம்”
அதிகம் சிரிப்பவர்கள்… தனிமையில் வாடுபவர்கள்…
அதிகம் தூங்குபவர்கள்… சோகத்தில் இருப்பவர்கள்…
வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள்… அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்…
அழுகையை அடக்குபவர்கள்… மனதால் பலவீனமானவர்கள்…
முரட்டுத்தனமாக உண்பவர்கள்… மன அழுத்தத்தில் இருப்பவர்கள்…
சின்ன சின்ன விசயங்களுக்கு அழுபவர்கள்… மனதால் மென்மையானவர்கள்…
சின்ன சின்ன விசயங்களுக்கு கோபப்படுபவர்கள்… அன்புக்காக ஏங்குபவர்கள்…
No comments:
Post a Comment