Image:From left Amman, Theepan, Jeyam and LTTE chief Prabhakaran |
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் எங்கே என்பது குறித்த மர்மம் 9 ஆண்டுகளாக நீடிக்கிறது. பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்; தேடப்படும் நபர் என சில ஆண்டுகளுக்கு முன் இண்டர்போல் கூறியதை உறுதி செய்யும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் பதிவைப் போட்டிருக்கிறார்.
பிரபாகரனின் நிழல் அப்படியான புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக செயல்பட்டவர் பொட்டு அம்மான். 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மரணித்துவிட்டதாக இலங்கை ராணுவம் ஒரு சடலத்தைக் காட்டியது. இதை பலரும் இன்றுவரை நம்பவோ ஏற்கவோ இல்லை.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவத்தின் உயரதிகாரிகள் சொல்லிவந்தனர். இறுதிப்போரின்போது, அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், கப்பற்படை தளபதி சூசை, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி போன்ற முக்கியமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அவர்களின் உடலை இலங்கை அரசு காட்டியது. அவ்வளவு ஏன்? விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகரனே இறந்துவிட்டார் என ஓர் உடலைக் காட்டி மக்களை நம்பவைத்தது இலங்கை அரசு. ஆனால், பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்பதற்கு சாட்சியாக அவரது உடலை இலங்கை அரசால் காட்ட முடியவில்லை. கருணா உறுதி செய்யவில்லை சில ஆண்டுகளுக்கு முன்னர் பொட்டு அம்மான் ஹாங்ஹாங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் பொட்டு அம்மான் மரணித்துவிட்டதாக தம்மால் கூற முடியாது என தெரிவித்திருந்தார் விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து போன கருணா.
பொட்டு அம்மானைப் பற்றிய தகவல்கள் கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து மர்மமாகவே இருந்துவந்த நிலையில், தற்போது அவர் இத்தாலியில் வசித்து வருவதாக ரகசியத் தகவல்கள் கசிந்துவருகின்றன. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று சரிவர தெரியவில்லை.